Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? – அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமு ம், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற் றாமையின் சுவாலையு ம் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

‘துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டு விட்டது. நான் தனியனானே ன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உப யோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குரு ஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனு ம் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெ ண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?’

அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்த பஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குள க்கரையில் துரியோதனன் வீழ்ந்து கிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலை ந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரிய னின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரிய னின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.

“துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்ட ளை இடு” பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.

துரியன் மெல்ல இமை திறந்தான்.

“அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறா ர்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந் தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர் த்திருக்கிறேன்?”

“இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இரு க்கின்றது. உன் கட்டளை க்காகத்தான் காத்தி ருக்கிறேன். ஒரு சொல்… பாண்டவரின் வம்ச த்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தி ன் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைக ள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!”

துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த் தது. சற்றே உடலை அசை த்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தி ல் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வ த்தாமனின் கைகளில் தெளித்தான். “இக்கணம் முதல் கௌரவசேனை யின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடி த்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்”

அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத் தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச் சகியாத சூரியன் தன் மறை விடம் புகுந்தான்.

இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கி றது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசி களையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அ னைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந் தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கத வமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்று கொண்டே இருக்கின் றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.

அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறை யில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானு டத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும் போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்க ளனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளை யாட்டை உணர்ந்து கிளர்ந்தன.

அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நட த்திய வேட்டை குரூரமாக இருந்தது.

அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ…’

அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலை கள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண் ட அஸ்வத்தாமா காற்றி னும் கடிதாய் விரைந்தான்.

“துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலை களைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித் தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசி யில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!”

பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடு ங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற் றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட் டுகின்றன. இறுதிப் புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புல ன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக் கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திர ங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய் விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடு ங்குகிறான்.

துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழு த்து வருகின்றது.

“மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இள ம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்க ளின் தலையைக் கொண்டு வந்திருக்கிறா யே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்று வருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட் டாயே!”

வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல் லை.

அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். ‘பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித் தார்களா?’ மடங்கி அழத்தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ண ன்.

“அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன் னும் ஏன் வஞ்சத்தோடு திரி கிறாய்! நீ பிராம ணன்… கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும்பார்… மகா பாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிரா சையும், தனிமையும், துரோகமும் பீடிக் கப்பட்டோர்! அதோ பார்! ஏக லைவனை… உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கு ம் பித்தனாய் த்திரிந்து கொண்டிருப்பதை… இன்னும்… இன்னும் துக்கத்தாலும், துரோ கத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனை பே ர்… அம்பை தொடங்கி, சிகண்டியும், அரவா னும், கர்ணனும்… இதோ உத்தரை முடிய… வேண்டாம் அஸ்வத்தா மா… உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கி வைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்து விடும்.”

அஸ்வத்தாமா கைகூப்பினான். ” இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத் தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ் வத்தாமா இறந்தான் என்று பொய் யுரைத்து குருத் துரோகத்தின் மூலம் என் தந்தையைக் கொன்றா ர்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமக னான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபா ணியான கர்ணனைக் கொ ன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரிய னை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்… இன்னும் பாரதயுத்த மெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சி செய்து வந்தி ருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும் வரை பாண்டவ ர்களைக் கொல்ல முடி யாது என்று எனக்குத் தெரியும். நான் போ கிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறே ன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன் ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அத ன் சுழலில் சிக்குபவர் எப் போதும் இறப்பதி ல்லை. அவர் கண்கள் என் றும் மூடுவதில்லை. துரோ கிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமி யெங்கும் நிரம்பியிருக்கின் றது. அதன் ஒலியி ல் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத் துக்கும் கதவ டைத்துப் போட ட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்”

அஸ்வத்தாமா காற்றோடு கரைந்து போனான். யுகாந்திரங்களைத் தாண் டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ் சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன் னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கி றான்.

அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவி ல்லை!

– விந்தைமனிதன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: