வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா ஜோடி யாக நடித்த நய்யாண்டி திரைப்படம். வருகின்ற 11ம் தேதி அன்று வெளி யாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் என்னுடைய தொப்புளு க்கு டூப் போட்டுள்ளார் என்று இயக்குன ர் சற்குணம் மீது நஸ்ரியா புகார் அளித் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சற்குணம் கூறுகையில், நய்யாண்டி திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களு க்கு அளித்து வரும் பேட்டிகளில், நய்யாண்டி படத்தில் வரும் ‘இனிக்க இனிக்க’ பாடல் காட்சியில் நஸ்ரியா விற்கு பதில் வேறு பெண்ணை வை த்து முழுப்பாடலையும் எடுத்திருப்ப தாகவும், டிரைலரில் ஒரு க்ளோஷ் அப் ஷாட்டில் டூப்பை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளதை நீங் கள் அறிவீர்கள்.
நான் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா ஆகிய நல்ல தரமான படங் களை இயக்கி தேசிய விருது பெற்றுள் ளேன் என்பதையும் நீங்கள் அறிவீர்க ள். இனிக்க இனிக்க பாடலில் ஒரு இட த்தில்கூட நான் டூப்பை பயன்படுத்த வில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரி யாவை தவிர வேறு யாரும் இல்லை. படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTE NT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோ ஸ் அப் ஷாட் அவசி
யப்பட்டது.
நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போ என்று சொ ன்னேன். இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்து க்கொள்ளுங்கள் என் று சொன்ன நஸ்ரியாவிற்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரிய வில் லை. ஒரு வேளை தன்னுடைய பப்ளிசிட்டிக்காக கூட செய்திருக்க லாம்.
ஒரு வேளை நஸ்ரியாவிற்கு டிரைலரில் வரும் அந்த ஒரு க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந் தால் அதை நான் நீக்கவும் தயார். ஆனால் இனிக்க இனிக்க பாடல் காட் சியில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்க ளோடு அமர்ந்து படம் பார்த்து நானி ல்லை டூப் என்று சொல்ல தயாரா? இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத் திருக்கிற து என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு தெரியபடுத்தி கொள்ள விரும்புகிறேன். மேலும் இது குடும்ப த்துடன் அமர்ந்து பார்க்க கூடிய பொழு துபோக்கான குடும்ப படம் என்று கூறியுள்ளார்.