Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெருங்கிய உறவுக்குள் நீங்கள் திருமணம் செய்தால், ஏற்படும் விபரீத விளைவுகள்!

ரத்த சோகை பற்றி கேள்விபட்டிருப்போம். ரத்த அழிவு சோகை பற்றித் தெரியுமா? மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய இந்நோய்க்கு ‘தலசீமியா’ என்று பெயர். நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரி சுகளையே இது அதிகம் தாக்குகிறதா ம்.

‘தலசீமியா’ பற்றி விரிவாகப் பேசுகி றார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி

ஆப்பிரிக்க ஆசிய வம்சாவளில வரக்கூடிய குழந்தைகள் தான் ‘தலசீமி யா’ பிரச்சனையால் அதிகம் பாதி க்கப் படறாங்க. சிகப்பு ரத்த அணு க்கள்ல ஹீமோகுளோபின்னு சொல்லப்படற ஒரு புரதம் இருக் கும். அதுதான் ஆக்சிஜனை உடம் புக்குள்ள எல்லா இடங்களுக்கும் எடுத்துட்டுப் போகும். ஹீமோகு ளோபினுக்குள் ஆல்ஃபா குளோபின், பீட்டா குளோபின்னு ரெண்டு இரு க்கும்.

ஒட்டு மொத்த ஹீமோகுளோபின் அமைப்புல கோளாறு ஏற்பட்டா ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படும். அதன் விளைவாக ஒவ்வொரு செல் லுக்கும் போக வேண்டிய ஆக்சிஜன் தடைபடும். வயித்துல உள்ள கரு பிறந்த குழந்தை, வளர்ந்த பிள்ளைகள்னு எந்த வயசுலயும் இது பாதிக் கலாம்.

நோய்க்குக் காரணமான குறைபாடுள்ள மர பணு குழந்தைக்கு அதோட அம்மா அல்லது அப்பா அல்லது இரண்டு பேர்கிட்டருந்தும்  போகுது. பிறந்த குழந்தையாக இருந்தால் வயிறு ஊதிப்போறது, கல்லீ ரலும், எலும்பு மஜ்ஜையும் வீங்கறது, தலை வீங்கறது, இதயம், சிறுநீர கத்தோட செயல் குறையறது, களைப் புனு பலவித அறிகுறிகள் இருக்கும். அம்மா வோட வயித்துல இருக்கும் போதே இந்தப் பிரச்சனை தீவி ரமாகி குழந்தையை பாதிச்சா, குழந்தை இற ந்தே பிறக்கலாம் அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளோட பிறக்கலாம்.

பிறக்கும் போதே மஞ்சள் காமாலை அதிகமாக இருக்கும் வேகமான மூச் சிறைப்பையும் பார்க்கலாம்,. மாசம் தவறாம ரத்தம் ஏத்தறது மட்டு ந்தான் இதுக்கான ஒரோ தீர்வு. அப்படி ரத்தம் ஏத்தறப்ப, இரும்பு சத்து அதிகமாகி அதன் விளைவாக வேற பிரச்சனைகள் வராமல் இருக்க மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் குழந்தைக்கு இந்த நோய் இருக்கு ன்னா, பெற்றோர் மரபணு கவுன்ச லிங்கும், பரிசோதனை யும் எடுத் துக் கணும். அடுத்த குழந்தைக்கும் வர வாய்ப்பிருக்காங்கிற தை தெரிஞ்சுக் கணும்.

அந்த ஆபத்து இருந்தா அடுத்த கர் ப்பத்தை கலைக்குறது தான் வழி. ஒரு வேளை இரண்டாவது குழந் தைக்கு நோய் ஆபத்து இல்லைனு தெரிஞ்சா அந்த குழந்தையோட ரத்த த்தை முதல் குழந்தைக்கு ஏத்தலாம். இரண்டாவது குழந்தையின் எலு ம்பு மஜ்ஜையை முதல் குழந்தைக்கு செலுத்தி யும் குணமாக்கலாம். ஆனால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் நிறைய நடைமுறை சிக் கல்கள் இருக்கிறதைத் தவிர்க்க முடியாது என் கிற டாக்டர் மகேஸ் வரி நெருங்கிய உறவுக்கு ள் மனம் முடிப்பதைத் தவிர்க்கச் சொல்லி அழுத்தமாக அறிவுறு த்துகிறார்கள்..

நெருங்கிய உறவுக்குள் மணம் முடிப்பதா ல் குழந்தைகள் பிறப்பதில் இத்தனை பிர ச்சனைகள் ஏற்படும் என்பதை அறிந்த பின்பும் உறவுக்குள் திருமணம் முடிப்ப தை கண்டிப்பாக தவிக்கவேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply