Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும் பெண்கள், செய்ய‍வேண்டிய ஆடை அலங்காரங்கள்

மூக்கு கண்ணாடியுடன் அழகாக தெரிய ஆசையா? அப்ப இத ஞாபகத்து ல வெச்சுக்கோங்க…

கண்ணாடி அணிய அனைவருக்கும் ஆசை தான். ஆனால் அதற்கான அலங்காரம் செய் யாமல் கண்ணாடி அணிந்தால் நாம் கேளி பொருள் ஆகிவிடு வோம். நம்மை பார்த்து அனைவரும் அசந்து போவார்கள் என்று நாம் நினைத்தால் அனைவரும் பயந்து ஓடி விடுவார்கள். இதுதேவையா? அதற்குதான் அழகான ஆடை மற்றும் மேக்-அப்புடன் கண்ணாடி அணிந்தால் அசந்து போவார்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆம், நாம் உடுத்தும் உடை நம்மை பற்றி பேச வேண்டும். மேலும் அந்த உடை யுடன் சேர்த்து, நாம் அணியும் கண்ணாடியும் நாம் யார் என்று கூறும். ஆகவே கண்ணா டியை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கான ஆடை அலங்கார த்திலும் கவனம் தேவை. அதைப் பற் றி இங்கு காண் போம்.

புருவத்தை அழகுப்படுத்துங்கள்

புருவங்களை சுத்தமாகவும், நல்ல வடிவத்திலும் வைத்து கொண்டால், கண்கள் எடுப்பாக தெரியும். இதை செய்தால் கண்ணாடி அணியவே தேவை யில்லை. மேலும் புருவத்தின் இடையில் அதற் கென இருக்கும் பெளடரையும், லைனரையும் பய ன்படுத்தி அழகுபடுத்தலாம்.

கன்சீலர் பயன்படுத்தவும்

கண்ணாடிகள் கண்களுக்கு கீழ் இருண்ட கருவளையங்களை கொண்டு வருகின்ற ன. இவை கண்களின் அழகை கெடுக்கும். எனவே கன்சீலரைப் பயன்படுத்தி கண்க ளை அழகுபடுத்துங்கள்.

நிறத்தின் தன்மைக்கு ஏற்ற ஐ ஷேடோ வை பூசுங்கள்

கண்கள் மற்றும் கண்ணாடிகள் இரண்டை யும் முன்னிலைப்படுத்த விரும்பினால், அதற்கு ஏற்ற ப்ரேம் பயன்படுத்தவும். எப் பொழுதும் நிறத்தை அடர்த்தியாகவும், மெல்லிய நிறத்திலும் தேர்ந் தெடுக்காமல் நடு நிலையில் நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.

ஐ-லைனர் தேவை

கண்கள் அழகாக காட்சியளிக்க ஐ-லைனர் தேவை. அதற்கு மெல்லிய கோடாக ஐ-லைனரை வரையவும். அடர்த்தியாக வேண்டாம். ஏனெனி ல் நீங்கள் மற்றவர்களை கவரவேண் டுமே தவிர பயத்தை ஏற்படுத்தக் கூடாது. எனவே மெல்லியதாக வரை யவும்.

கவரும் லிப் நிறம் தேவை

ப்ரௌன் அல்லது கருப்பு நிற கண்ணாடி வேண்டுமெனில், லிப் கலரை கவனமாக தேர்ந்தெடுக்கவும். அதிலும் அடர்ந்த சிவப்பு அல்லது கவரு ம் பிங் மிகவும் அழகாக இருக்கும்.

சரியான தலை அலங்காரம் தேவை

கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழ் என்றுள்ள முடி அலங்காரம் எல்லாம் நன்றாக இருக்காது. ஒன்று முடியை கட்டாமல் லூசாக விடுங்கள் இல்லையெ ன்றால் குதிரை வால் ஸ்டைல் போடுங்கள். இது மேலும் அழகு ப்படுத்தும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply