Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – இளமைத் துள்ள‍லுடன் அழகான, எடுப்பான தோற்ற‍த்துடன் காட்சியளிக்க‍ . . .

மாங்கனி உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது சரும அழகிற்கும் பயன்படுகிறது.

கூந்தல் வளர்ச்சி

• மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப் புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத் த விழு தை தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம்.

முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருந்தால்,

• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக் கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள் ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழு து, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

முடி வளர

பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக் காய்பொடி மூன்றையும் சமஅளவு கலந் து தலைக்குத்தேய்த்து குளிக்க வேண்டு ம். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன் புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்க

• மேங்கோ பட்டர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்.. இந்த நான் கையும் சம அளவில் கலந்து மிக்ஸியில் அடி த்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊற விடவும். பிறகு, சம அளவில் வெந்த யம், பயத்தம் பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளி த்தால், பொடுகுத்தொல்லை போயே போச்சு. பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்கும்!

கழுத்தில் உள்ள‍ சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்ன

• நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆர ம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும் கச கசாவும் சம அளவில் சேர்த்து அரைத் த விழுது ஒரு டீஸ்பூன், மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர் த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புற மாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய் தால், கழுத்து சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்னும்!

தோலின் பள பளப்பு கூடி மிருதுவாக‌

• பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்ப ம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத் தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல் லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

உதடுகள், ரோஜா இதழ் போல மின்ன

• மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட் சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயி ல் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின் னும்!

புருவத்திலும் இமையிலும் முடி வளர

புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப் புள்ளி வைக்கிறது மாம் பழச்சாறு! ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வை க்கவும். புருவங்களில் விளக்கெண்ணெய் (அ) நல் லெண்ணெ யை ஒரு துளி தடவி, இந்த ஐஸ்கட்டி யை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கு ம்முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வள ரும்.

மேலும் சில குறிப்புகள்

கடலை மாவு

தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கல ந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல் கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில்

உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதி ல் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

சந்தனப் பொடி

மஞ்சள் தூளை, சந்தனப்பொடியுடன் சேர்த்து பே ஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத் து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய் விடும்.

பால் பாலில்

சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண் டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழு க்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலி வோடு காணப்படும். அது மட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால், வெடிப்புகள் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் மாறியிரு ந்த சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென் மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்கு வதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் , விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங் கள் மென்மை யாக இருக்கும்.

மோர் பால்

பொருட்களில் ஒன்றான மோ ருடன் மஞ்சள் தூளை சேர்த் து, சென்சிட்டிவ் பகுதிகளில் தேய்த்தால், சுருக்கங் கள் வராமல் இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தது ம், பொலிவிழந்து இருக்கும் முகத்தை பொலிவாக் குவதற்கு, வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தடவி மசாஜ் செய்து நீரில் அலச வேண் டும்.

தேன்

சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவத ற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண் டும்.

தயிர்

தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சி யுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீ ரியல் பொருள் கரும் புள்ளிகளையும், சூரியக்கதிர்க ளின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாது காப்பும் கொடுக்கும்.

இதுவிதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: