நீதி . . . நின்று வெல்லும் . . .
2013, அக்டோபர் (இந்த) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்
அப்பாடா. . . ஒரு வழியாய் கால்நடைத் தீவன ஊழலில் கண்ணாமூச்சி ஆடிய லாலுவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை. . . வி.பி.சிங்க அமைச் சரவையில் இருந்த, முன்னாள் அமை ச்சர் (ரஷீத் மசூத்) ஊழல் குற்றத் திற்கு நான்காண்டுகள் சிறை தண்டனை… தென்னகத்து அம்பானி சகோதரர்களா ல், தோண்டி புதைக்கப்பட்டிருந்த தொ லைப்பேசி இணை ப்பக மோசடிக்கு மீண்டும் விசாரணை… குற்றம் நிரூபி க்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவி ப்பறிப்பு… நிரந்தர தேர்தல் தடை என்று நீதிமன்றம், புது வேகத்துடன் கலக்கிக்கொண்டிருக்கிறது.
நீதி நிமிர்ந்திருப்பதில்… நிலைத்து நிற்பதில் பெருமைதான் என்றாலும், ஐந்து லட்சம் ரூபாய் திருடியவனுக்கு அடு த்த விநாடியே தண்டனை… ஐந்து லட்சம் கோடி திருடியவனுக்கோ அடுத்த ஜென்மத் தில் தண்ட னையா?
ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயன்ற… அல்லது கற்பழித்த வழக்கில் ஓராண்டுக்கு ள்ளேயே தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தினா ல் … இந்த பாரத தேசத்தையே சூரையாடிய பாரதத் தாயின் இயற்கை வளங்களைச் சுரண்டி நிர்வாணப்படுத்திய சுயநலப் பேய் களை தண்டிக்க இவ்வளவு ஆண்டுகள் ஏன்?
2ஜி, நிலக்கரி, போபர்ஸ், சங்கர்ராமன் கொ லை வழக்கு, இந்நாள் முதல்வரின் அந்நாள் சொத்துக்குவிப்பு வழக்கு, தீவிரவாதிகள் மீதான வழக்கு இவைகளெல்லாம் இழுத்தடிக்கப்படுவத ற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது எவருக்குமே புரியாத புதிராக இருக்கிறது.
இந்தோனேஷியா, சீனா போன்ற நாடுக ளில் ஊழல் நிரூபிக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள்ளேயே தண்ட னை வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால் நம் நாட்டில் மட்டும் ஏன் ஆமை வேகம்?
இருப்பினும் கூட… குற்றம் செய்த அரசியல்வாதி களின் பதவிகளைப் பறிக்கிற சட்டம்… காவிரி ஆணையத் தீர்ப்பு …எவரும் வேண்டாமென்று தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிக்கிற வாய்ப் பு… ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது கடிந்து ரை இவற்றால்…. அதர்மம் தலை தூக்கும் போது அதை அழித்து, தர்மத்தைக் காக்க வந்த கிருஷ்ண பரமாத்வாக நமது சட்டம் நம் கண்களுக்குத் தெரி கிறது.
தவறு செய்பவர்களை தெய்வம் நின்று கொள்ளா விடினும், நீதி நின்று நிதானமாக ஆனால், நிச்சய மாக தண்டிக்கும் என்று ஜனநாயகத்தின் ஒற்றை நம்பிக்கையாக ஒளிர் கின்ற நீதிமன்றத்தை உரத்த சிந்தனையுடன் வணங்குவோம்.
இந்த வைர வைடூரிய வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த சிந்தனை) => கைபேசி 94440 11105
Excellent Article. Convicted should be punished without delay irrespective of their position or party.
I appreciate your valuable thoughts in your article. ஆனால் முழுமையாக நீதி வென்று இருகிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். காரணம்
1. கொள்ளை அடிக்கப்பட்ட 950 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது? 30 லட்சம் அபராதமாக பெற்றால் அது உண்மையான நீதியாக முடியுமா? ஒருவன் ஒரு பவுன் சங்கிலியை திருடிவிட்டால் ஒரு கிரமா திருப்பி கொடுக்கப்படுகிறது? மக்களுடைய பணத்தை திருப்பி வாங்கினால்தானே அதை நீதி என்று சொல்ல முடியும்?
அவருடைய சொத்தை எல்லாம் பறிமுதல் செய்யுங்கள் அதுதான் உண்மையான நீதியாகவும் தண்டனையாகவும் இருக்க முடியும்.