Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் தலைமறைவு! என்ற செய்தி . . .

நடிகை நஸ்ரியா நஸீம் நடித்த‍ நேரம், ராஜா ராணி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி வெற் றித்திரைப்படமாக உலாவந்து கொ ண்டிருக்கிறது. இத னால் நஸ்ரியா நஸீம் தமிழ்த்திரையுலகில் முன்ன ணி நடிகையாக்கி விட்டார். இந் நிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய் -நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக கடந் த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வந்து கொ ண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, காதல் கதையில் நடித்தால் உடனே நிஜத்திலும் காதல் வந்து விடுமா? என்று நம்மைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.

மேலும், நான் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த பிறகும் அப்படித் தான் அஞ்சலியுடன் எனக்கு காதல் வந்திருப்பதாக கூறப்பட்டது. அதோ டு, அவர் திடீரென்று ஒருநாள் மாய மானபோது முதலில் என்னைத்தா ன் கேட்டார்கள். நல்லவேளை அன் று நான் சென்னையில் இருந்தேன். அப்படி இல்லாமல் நானும் அவுட் டோர் எங்காவது சென்றிருந்தால் உண்மையில் நானும், அஞ்சலியு ம் தான் தலைமறைவு என்று உறுதியாக நம்பியிருப்பார்கள். பத்திரி கை மற்றும் எல்லா ஊடகங்களிலும் நடிகர் ஜெய்யும் நடிகை அஞ்சலியும் தலைமறைவு என்ற செய்தி தலைப்புச் செய்தியாக வெளிவந் திருக்கும்  நல்லவேளையாக தப்பினேன் என்று சொல்லும் ஜெய், சமீபகாலமாக உடன் நடிக்கு ம் நடிகைகளுடன் இணைத்து என்னைப்பற்றி காதல் செய்திகள் பரவி வருவதால், நட்பாக நடிகைகள் என்னிடம் பழகினால்கூட விலகி விலகியே செல்கிறேன். சும்மா பேசினாலும்  பார்த்தாலும் கூட‌ காதல், கல்யாணம் என்று கதை எழுதி விடுவார்களோ என்ற பயம்தான் இதற்கு காரணம் என்கிறார் ஜெய்.

Leave a Reply