Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புவி வெப்ப‍மடைவும் பருவநிலை பாதிப்பும்! – தொடர் (பகுதி -2)

ந‌மது பூமியின் சீரான தட்ப வெப்ப‍ நிலை, உயிரிரனங்களின் வாழ்க்கை க்கு உதவிடும் வகையில் சாதகமாக அமைந்துள்ள‍து. தட்பவெப்ப‍ நிலை களில் பாதிப்பு ஏற்பட்டால், அது உயிரி னங்களின் வாழ்க்கைக்குப் பாதகமாக மாறி விடும். இதன் பொருட்டு இயற் கை மற்றும் சுற்றுச்சூழலைப் போற்றி ப் பாதுகாக்க‍ வேண் டும். 
 
இதை நன்கு உணர்ந்திருந்த நம் முன் னோர்கள் இயற்கையைப் போற்றி, தெய்வமாக வழி பட்டு வந்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உலகின் பஞ்சபூதங்களாகக் கருதி பூஜித்து வந்தனர். நம து வேதங்கள் (தற்போது தமிழில் மொழிபெயர்க்க‍ப்பட்டுள்ள‍ன) மற்றும் புராணங்களில் இயற்கை யைப் போற்றிக் கூறப்பட்டுள்ள‍ தோ த்திரப் பாடல்கள் இதற்குச் சான்றாகும். 
 
இவ்வாறு இயற்கையைப் போற்றிப் பாது காத்த‍தால்தான் அக்காலங்களில் மாதம் மும்மாரி (மழை) பெய்தது, பருவ நிலை கள் காலம் தவறாது வந்து சென் றன•
 
அறிவியல் உலகில் முன்னேறி உள்ள‍ நாம் இன்று அறிவியல் தொழில் நுட்பங் களை, நம் சுயநலத்தின் பொருட்டு தாருமாறாகவும் தவறான வழிகளி லும் பயன்படுத்திய கார ணத்தினால், சுற்றுச்சூழலுக்குக் களங்க ம் (மாசு) ஏற்படுத்தி விட்டோம். இதன் விளைவாக ஏற்பட்ட‍ இயற் கை சீற்ற‍ங்கள் நம்மையே தாக்கி வரு கின்றன•
 
இந்த(2013) ஆண்டு ஜூன் மாத ம் 16, 17 தேதிகளில் உத் த‍ர காண்டம் கேதார்நாத் பகு தியில் ஏற்பட்ட‍ திடீர் மழை, வெள்ள‍ ப்பெருக்கு, நிலச்சரி வு ஆகிய வற்றின் தாக்க‍த்தால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உயிரிழ ந்தனர். 
 
2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியி ல் ஏற்பட்ட‍ திடீர் வெள்ள‍த்தில் (ஃப்ளாஷ் ஃளெட்) சிக்கு ண்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். 
 
இந்த ஆண்டு (மே 2013) கோடை காலத்தின் போது கொளுத்தும் வெயி லுக்கு பலியாகி ஆந்திர மாநிலத்தில் மடும் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிந்தனர்.
 
உலகின் பல்வேறு பகுதிகளிலு ம் கோடை காலத்தின் கொடூர அனல்காற் றினால் ஏராளமா ன அளவில் காடுகள் தீப்பிடி த்து எரிவதால், ஏராளமான‌ இயற்கை வளங்கள் அழிந்து போகின் றன• 
 
இச்சீற்றங்களுக்குக் காரணம் என்ன‍ என்று சிந்தித்துப் பார்த் தால், மேலே குறிப்பிட்ட‍து போல் சுற்றுச் சூழலுக்கு மனித இனம் ஏற்படு த்திய மாசுபாடும் அதன் விளைவால் உண்டான புவி வெப்ப‍மடைவும் தான் கார ணம் என்று புரிய வரும். 
 
புவி வெப்ப‍மடைதல் என்றால் என்ன‍?
 
புவி மண்டலத்தின் மூலம் (நிலம், நீர், காற்று- வாயு மண்டலம்) தற்போதை ய வெப்ப‍ நிலை இயல்பைவிட அளவு க்கு அதிகமாக பெருகி உள்ள‍ அபாயக ரமான விளைவுதான் புவி வெப்ப‍ மடைவு எனப்படும். 
 
பூமியின் உயிர் வாழ் இனங்களுக்கு சூரிய ஆற்ற‍ல் (ஒளி, வெப்ப‍ சக்தி) உயி ர்நாடியாக விளங்குகிறது. (ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது சூரியனை வழிபடும் வழக்க‍ம் ஏற்பட்ட‍து இதனால்தான்) 
 
பூமியின் மீது விழக்கூடிய சூரிய வெப்ப‍ சக்தியின் ஒரு பகுதி பூமியில் கிரகித்துக் கொள்ள‍ப்பட் டு எஞ்சிய பகுதி விண்ணுக்கு திரு ப்பி அனுப்ப‍ப் படுகிறது. காற்று மண்டலத்தில் கலந்துள்ள‍ பசுமை யான வாயுக்கள் (கிரீன் ஹவுஸ் கேஸஸ்) எனப்படும் கரிய மில வாயு (கார்பன் டை ஆக் ஸைடு) நீர், ஆவி, மீதேன், நைட்ரஸ் ஆக் ஸைடு, சி.எஃப்.சி. மற்றும் இதர நச்சு வாயுக்க‍ள் இந்த வெப்ப‍ சக்தியினை கிரகித்துத் தம்மிடம் தக் க‍ வைத்துக் கொள்ள‍கின்றன• இதுமட்டுமின்றி இவற்றை மீண்டும் பூமிக் கே திருப்பி அனுப்பி விடுவதால், புவி மண் டலத்தின் வெப்ப‍நிலை மேலும் அதிகரித்து விடுகிறது. 
 
பூமி தோன்றிய பின்ன‍ர் பல லட்சக்கணக்கா ன ஆண்டுகளாக இயற்கையாகவே இந்தப் புவி வெப்ப‍ மடைவு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. (இதனால்தான் பூமி கதகதப்பான தட்பவெப்ப‍நிலையைப் பெற்றுள்ள‍து. இவ்விளைவு இல்லாத ப‍ட்ச த்தில் பூமி -18 டி செல்சியஸ் வெப்ப‍ நிலையி ல் பனிக்கட்டிகளால், சூழப்பட்டு உறைந்த நிலையில் இருந்திருக்கும்).
 
ஆனால் சமீபகாலமாக குறிப்பாக 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட‍ தொழி ற்புரட்சிக்குப் பிறகு ஏராளமான அளவில் தொழிற்சாலைகள் நிறுவப்ப ட்ட‍ன• எண்ணிலடங்காப் பேரூந்துகள் புழ க்க‍த்தில் வந்தன• இவற்றின் இயக த்திற்காக பெட்ரோலிய (பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்க‍ரி) எரிசக்தி பொருட்கள் ஏராளமான அளவில் உபயோகப்படுத்த‍ப் பட்ட‍ன•
 
அனல் மின் சக்தி உற்பத்திக்காக அளவுக்கதிகமாக நிலக்கரி எரிக்க‍ப் பட்டுவருகிறது. இவற்றிலிருந்து வெளியேறும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) மற்றும் இதர நச்சு வாயுக்கள் சுற்றுச்சூழலைப் பெருத் த‍ அளவில் மாசுபடுத்த‍ப்பட்டுவிட்ட‍ன• அம்மாசுமாடு காரணமாக புவி வெப்ப‍ மடைவு ஏற்பட்டு அதனால் பருவநி லை பாதிப்பு, இயற்கைச் சீற் ற‍ங்கள் என எண்ணிலாப் பாதிப்புகளில் மனித ன் தாக்க‍ப்பட்டு வருகின் றான். 
 
புவி வெப்ப‍மடைவால் உண்டாகும் பாதிப்புகள். 
 
1. பருவ நிலை பாதிப்பு 
 
புவி வெப்ப‍மடைவு மற்றும் பருவநி லை மாற்ற‍த்தை ஏற்படுத்தும் பசுமை யான‌ வாயுக்களில் முதன்மை இடம் வகிப்ப‍து கரியமில வாயு ஆகும். காற் றுமண்டலத்தில் கரிய மில வாயுவைக் கட்டுப்படுத்தி பருவ நிலைக் கோளாறு களைச் சரி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை (யுஎன்.) ஒரு குழுவை நியமித்துள்ள‍து. ஐ.பி.சி.சி. (இன்ட ர்கவர்மெண்ட் டல் பேனல் ஆன் கிளைமேடிக் ச்சேன்ச்) என்றழைக்க‍ப்ப ட்டும் இக்குழு, பருவநிலை பாதிப்பு பற்றிய அறிக்கைகளைத் தயாரித்து கரியமில வாயுவைக் கட்டுப்படுத்து ம் வழிமுறைகள் குறித்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஆலோச னைகள் அளித்து வருகிறது. (இதில் அமெரிக்க‍ நாட்டின் அரசியல் தந்திர ங்களை அடுத்த‍ இதழில் பார்ப்போ ம். ) 
 
புவி வெப்ப‍மடைவு காரண மாக உலகின் அனைத்து பகுதி களிலும் தட்ப வெப்ப‍ நிலை கள் (தட்பவெப்ப‍நிலை என்பது ஒரு இடத்தின் வெப்ப‍ நிலை, காற்ற‍ழுத்த‍ம், காற்றின் ஈரப் பதம், காற்று வீசும் திசை ஆகி யவற்றைக் குறிக்கும்) பாதிக்க‍ ப்படுகின்றன• 
 
இதற்கேற்றவாறு அவ்வ‍ப்பகுதி களின் பருவ நிலை – பருவமழைகளும் பாதிக்க‍ப் படுகின்றன• ஒருசில இடங்களில் மழையின்மை, வறட்சி, த ண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுதலு ம் வேறு சில இடங்களில் அதிக மழை காரணமாக வெள்ள‍த்தினால் பாதி ப்பு ஏற்படுதலும் நிகழ்கின்றன• இர ண்டு விதத்திலும் விவசாயம் பாதி க்க‍ப்பட்டு விளை பொருட்க ளின் உற்பத்தி குறைகின்றது. இத னால் உணவுப் பொருட்களின் தட் டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உய ர்ந்து வருகின்றது. (தற்போது காய்கறிக ளின் விலை உயர்ந்திருப்ப‍தை ப்போல்)
 
துருவப்பகுதிகளின் பனிக் கட்டி உருகுதல்
 
சமீபகாலமாக பூமியின் வட, தென் துருவ வெப்ப‍ பகுதிக ளின் வெப்ப‍ நிலை பன்மடங்கு அதிகரித்திருப்ப‍து அறிவியல் அளவீடு மூலம் தெரிய வந் துள்ள‍து. புவி வெப்ப‍மடைவு விளை வுடன் வாயு மண்ட லத்தில் ஓசோன் சிதைவும் (இதுபற்றி தனியாக எழுத வேண்டும்) சேர் ந்து இப்ப‍குதிகளின் வெப்ப‍ நிலையை மேலும் அதிகரித்து விட்ட‍ன• இதனால், இங்கு உறைந்துள் ள‍ பனிக்கட்டிகள் அதிகளவில் உருகிக் கடலில் கலப்ப‍தால், கடலின் நீர் மட்ட‍ம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 
 
இதரப்பகுதிகளில், உதாரண மாக பூமத்திய ரேகையை பகு தியில் நிலவும் அதிக வெப்ப‍ நிலை காரண மாகக் கடல்நீர் சூடாகிப் பெருக்க‍ம் அடை வதாலும் கடலின் நீர் மட்ட‍ம் உயர்கிறது. இந்த நூற்றாண் டின் இறுதிக்குள் கடல்நீர் மட்ட‍ ம் 1 மீட்ட‍ர் (3 அடி) அளவுக்கு உயரக் கூடும் என்று கருத்து தெரிவிக்கப்ப டுகிறது. இதனால் கடலோரத் தாழ் வான பகுதிகள் கடலரிப்பிற்கு உள் ளாகி மூழ்கிப் போகும் அபாயத் தை எதிர்நோக்கி உள்ள‍ன• நமது அண் டை நாடான மாலத்தீவுகள் சிறிது காலத்திற்குப் பிறகு முற்றிலும் மூழ் கி விடக்கூடிய அபாய நிலையில் உள்ளன• 
 
இந்த அபாய எச்ச‍ரிக்கையை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வரும் வண்ண‍ம் (குறிப்பாக யு என்) 2009 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு கடல் நீருக்கடியில் தனது அமைச்சர வைக் கூட்ட‍த்தை நடத்தியது. 
 
இமயத்தின் பனிக்கட்டிகள் உருகுதல், 
கேதார்நாத் துயரச் சமப வம் ஏற்பட்ட‍ விதம்
 
புவி வெப்ப‍மடைவு எவரெ ஸ்டு சிகரத்தையும் விட்டு வைக்க‍வில்லை. அங்கேயும் என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்றுகூறி அதுவும் எவரெஸ்டு சிகரம் ஏறி, அங்கு படிந்துள்ள‍ பனிக்கட் டிகளைக் கரைத்து வருகிறது.  இமயமலைப் பகுதிகளிலும் பருவ நிலையில் பெரிய மாற்ற‍ங்கள் ஏற்பட்டு வருகின்றன• மாளத் தீவு அரசு கடலுக்கடியில் சென்றால், நான் எவரெஸ்டு சிகரம் ஏறுவேன் என்று அந்நாட் டு அரசு 04-12_2009 அன்று 17,000 அடி உயரத் தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடியில் தனது அமைச்சரவைக் கூட்ட‍த் தை கூட்டி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த‍து.
 
கோடைகாலத்தில் இமயமலை ப் பனிச்சிகர ங்கள், அளவுக்கதிக மாக உருகுவதால், அப் ப‍குதிகளில் ஏராளமான நீர் நிலைகள் ஏற்ப ட்டுள்ள‍ன• செற்கைக் கோள்களிலிருந்து பெற்ப்பட்ட‍ புகைப்படங்களிலிலி ருந்து இது உறுதி செய்ய‍ப்பட்டுள்ள‍து. 
 
கோடைகாலத்திற்குப் பிறகு இப் பகுதிகளில் பெய்யும் தென் மேற்குப் பருவமழை காரணமா க இந்நீர் நிலைக மேலும் நிரம்பி இவற்றில் உடைப்புக் கள் ஏற்படுகின்றன• 
 
இதனால், வெள்ள‍ப்பெருக்கு ஏற் பட்டு இவ்வெள்ள‍ நீர் ஆறா கப் பாய்ந்து செல்ல‍க்கூடிய பகுதிகள் அனைத்திலும் பெருத்த‍ சேதத் தை ஏற்படுத்துகின்றன• இவ்வாறு ஏற்பட்ட‍ வெள்ள‍ப் பெருக்குமே சமீப த்தில் கேதார் நாத் துயரச் சம்பவத்திற்குக் காரணம். 
 
புதிய நோய்களின் தாக்க‍ம்.
 
சிலவகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகளுக்கு புவி வெப்ப‍ம டைவும் பருவநிலை மாற்ற‍ங்களும் சாதக மாக அமைவதால், இவை அதிக அளவில் பெருகி மனிதர்க ளையும் இதர உயிரினங்க ளையும் தாவரங்களை யும் கூட தாக்கி வருகின்றன•
 
இதனால் பறவைக் காய்ச்ச‍ல், பன்றிக் காய்ச்ச‍ல், டெங்கு காய்ச்ச‍ல், மலேரியா போன்ற காய்ச்ச‍ ல்கள் தாக்குதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின் றது. 
 
உயிரினங்களின் அழிவு (எக்ஸிஸ்டிங்ட் ஸ்பேஷியஸ்) 
 
புவி வெப்ப‍மடைவின் தீவிரங்களைத் தாங்கா மாட்டாமல் சில வகை உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விட்ட‍ன• மற்றும் சில உயிரினங்கள் அழிந்து போகும் அபாய எல்லைக் குத் தள்ள‍ப்பட்டுள்ள‍ன• எஞ்சியிருக் கும் உயிரின ங்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, மாறிவரும் சுற்றுச் சூழ லுக்கு தக்க‍வாறு தம்மையும் மாற்றிக் கொண்டு உயிர் பிழை க்க‍ முயற் சிக்கின்றன• 
 
மனித சமுதாயத்தின் எதிர்காலம்?
 
இந்த அனைத்துப் பிரச்ச‍னைகளுக்கும் இடை யில் சிக்கித் தவிக்கும் மனிதனின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ள‍து. நம் குழந்தை களின் எதி ர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவ ர்களுக்கு மிகச் சிறந்த கல்வி வச திகளும், பொரு ளாதார வசதிகளும் செய்து வை க் கி ன்றோம். ஆனால் அவ ர்களின் அடிப்படைத் தேவையான தூய்மையான சுற்றுச் சூழலைப் பற்றிக் கவலை கொள்ளா மல் தொ டர்ந்து மாசுபடுத்தி வருகி றோம். 
 
எதிர்கால சந்த்தியினருக்க்காக நாம் என்ன‍ செய்ய‍ வேண்டும், நம் அரசு என்ன‍ செய்ய‍ வேண்டும்? உலகநாடுகள் என்ன‍ செய்ய‍ வேண்டும்? அடு த்த‍ இதழில் பார்ப்போம். 
 
(பூமி சுழலும்) 
S. RAJU
சையிண்டிஸ்ட்
நேஷனல் ஜியோகரஃபிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
(நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிற்காக)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: