Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நடிகையால் இப்படியெல்லாம் கூட பொய் சொல்ல முடியுமா

ஒரு நடிகையால் இப்படியெல்லாம் கூட பொய் சொல்ல முடியுமா… எழுத்துப் பூர்வமாகச் சொன்னதை 24 மணி நேரத்துக்குள் மறுக்க முடி யுமா… என்னதால் சினிமாவில் எல்லாம் சகஜமென்றாலும், இத்தனை கேவலமாகவா நடந்து கொள்வா ர்கள்…

-நஸ்ரியா பிரஸ் மீட் முடி ந்து வெளியில் வந்த பிற கும், ஃபோர்பிரேம் ஸை சுற்றி நின்றிருந்த நிருபர் கள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை பேசிக் கொண் டிருந்தது இப்படி த்தான்.

மாலை 7.30 மணிக்கு அவசர பிரஸ்மீட் என்று தான் தகவல் கொடுத்திரு ந்தார்கள் நஸ்ரியா சார்பில். ஆனால் அவர் வந்ததோ கிட்டத்தட்ட 9 மணிக்கு. கேட்டால் விமானம் தாமதம் என்றார்கள். ஒரு நிருபர் விமா ன நிலையத்துக்குபோன் செய்து பயணிகள் லிஸ்ட்டை யே செக் பண் ணிவிட்டார். நஸ்ரியா பெயர் அதில் இல்லையாம்!

அப்படியே அவர் விமானத்தில் வந்ததாக வைத்துக் கொண் டாலும், காலை 7 மணிக்கே சென்னையில் படம் பார்த்து விட்டேன். நல்ல படம், எனக்கு பிரச்சினையில்லை என்று நஸ்ரியா சொன்னது எவ்வள வு பெரிய பொய். காலை 7 மணிக்கு சென் னையில் படம் பார்த்துவிட்டு, கேரளாவுக்குப் போய், திரும்ப பிரஸ் மீட்டுக்காக சென்னை வந் தாரா என்ன?

தனது புகாரில் மூன்று இடங்களில் இஸ்லாம் மதத்தை தேவையில்லா மல் இழுத்திரு ந்தார் நஸ்ரியா. சற்குணம் தன் மதத்தைச் சொல்லி மிரட்டியதாகக் கூறியிருந்தார். தன் மதத்தின் பெருமை காக்க உதவுமாறு கமிஷனரிடம் கோரியிருந்தார்.

ஆனால் தான் அப்படிச் சொல்லவே இல்லை என்று அடாவடியாக மறுத்தார் நஸ்ரியா. அட ஒரு நிருபர் கையில் நஸ்ரியாவின் புகா ர் கடிதநகலைக் காட்டியும்கூட சொன்னதை யே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிரு ந்தார்.

நான் படம் பார்த்தேன்.. ஹேப்பி.. நல்லா வந் திருக்கு.. சப்போர்ட் பண் ணுங்க என்று பல முறை சொன்ன நஸ்ரியா வை டக்கென்று மடக்கினார் ஒரு நிருபர். சரி நீங்க படம் பார்த்ததாகவே வச்சிக்குவோம்.. எந்த தியேட்டர்ல பாத்தீங் க.. எப்போ பார்த்தீங்க? என்றார்.

ஒரு நிடமிடம் ஆடிப் போய்விட்ட நஸ்ரியா, திருதிருவென விழித்தார். பின்னர் பக்கத்தி லிருந்த தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் வக்கீலிடம் குசுகுசுத்தார். அப்புறம் சொன் னார் இதே தியேட்டர்லதான் என்று. அவர் படம்பார்த்த லட்சணம் புரிந்துபோய்விட்ட து.

‘நான் படம் பார்க்கல. ட்ரைலர்தான் பாத்தே ன். அந்த சீன் பாத்து ஷாக்கா யிட்டேன். அதா ன் எனக்கு படத்தைக் காட்டணும்னு கேட்டு த்தான் அந்த புகாரை கொடுத்தேன்’, என்றார்.

அப்படின்னா அதை தயாரிப்பாளர்கிட்ட ஏன் கேட்கல, இயக்குநரிடம் பேசியிருக்கலாமே என்று கேட்டனர். உடனே கம்யூனிகேஷன் கேப் என்று சிரிக்க முயன்றார் நஸ்ரியா.

ஏங்க உங்க கம்யூனிகேஷன் கேப்பை இப்படி பொதுப்பிரச்சினையாக்கி பப்ளிசிட்டி தேடுவது சரியா என்ற கேள்வியைக் கேட்காதவர் மாதிரி நடித்தார் நஸ்ரியா.

உடன் வந்திருந்த தயாரிப்பாளர் கதிரேசனும் சளைக்காமல் பொய் சொ ன்னார். ஏங்க, நஸ்ரியா உங்க டைரக்டர் சீட்டிங் பண்ணதா சொல்றார். நீங்க தயாரிப்பாளர் கேட்டுக்கிட்டிருக்கீங்க..அவர் ஏமாத்தினது உண்மை தானா என்று கேட்டபோது, ‘அதை எங்க டைரக்டர்கிட்ட கேட்டுதான் சொ ல்ல முடியும்,’ என்றார்.

சற்குணம் எப்போ வந்து விளக்கம் சொல்வார் என்று கேட்டதற்கு, நா ளைக்கு பிரஸ்ஸை மீட் பண்ணு வார் என கதிரேசன் சொல்ல, ‘நாங்க வேற வேலையே பார்க்கக் கூடாதா.. தினமும் உங்க ளைப் பத்தி நியூஸ் எழுதிக்கிட்டே இருக்கணுமா?’ என்று கோபமாக திருப்பிக் கேட்டார் இன் னொரு நிருபர்.

பப்ளிசிட்டிக்காகத்தான் நீங்க இதை பண்ணியிருக் கீங்க என்று செய்தி யாளர்கள் குற்றம் சாட்டிய போது, இல்ல, நான் சீப் பப்ளிசிட்டி தேட லை என்றார்கள் நஸ்ரியாவும் தயா ரிப்பாளரும்.

இயக்குநர் சற்குணத்துடன் சமாதா னமாயிட்டீங்களா என்று கேட்டபோ து, எங்களுக்குள்ள சண்டையே இல்லையே. சண்டை போட்டாதானே சமாதானம் ஆக.. என்றாரே பார்க்கலாம்.

(படித்த‍ செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: