Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடிக்கு அடிமையா நீங்கள் . . . . ?

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடி யாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையி ல் உள்ளவர்கள், தொழிலாளிகள் என் று பலரும் இதை அருந்துகி றார்கள்.

அதனுடைய பின்விளைவுகளை அறியா து, தானும் கெட்டு, தன் குடும் பத்தையும் நடுத்தெருவுக்கே கொண் டு வந்து விடுகி றார்கள்.

குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும். குடியை விட்டுவிடலா ம் என்று மனவுறுதியோடு இருப் பவர்கள்கூட, சரியில்லாத நட்பி னால் மீண்டும் மீண்டும் குடியி ல் தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்த குடியால் ஒட்டு மொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதை யால் கொலை, கொள்ளை, கற் பழிப்பு போன்றவை சர்வ சாதார ணமாகிவிட்டது.

நாடு ஒரு பேரழிவான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் மட்டுமே குடிக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலை மாறி, பெண்களும் தற் போது இதற்கு அடிமையாகி விட்ட னர்.

குடியால் பல ஆண்களுக்கு விந்த ணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும், இதனா ல் காலப் போக்கில், உயிர்களின் உற் பத்தி குறைந்துகொண்டே சென்று, ஒரு கட்டத்தில் உயிர்கள் பிறப்பதே நின்று விடும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.

இவ்வளவு பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங் களுக்காக இதோ சில குறிப்புகள்..

மனநல ஆலோசகரை அணுகுதல்

குடியால் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளைப் போக்க ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுங்கள். அவ ர்களது ஆலோசனைகளை பின்பற்றவும்.

திகதியை குறித்துக் கொள்ளுதல்

குடியை விட சில முக்கிய திகதியை தேர்ந்தெடு க்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வும்.

மது பாட்டில்களை தூக்கி எறிதல்

குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்ற வற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டா ம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்

டியை ஒரே நாளில் விட்டு விட முடியா து. முதலில் சிறிது சிறிதாக விட முயற் சி செய்யுங்கள். அதிகமான குடி கார ணமாக பராலிசிஸ், தலை வலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடி க்கும் எண்ணத்தை தடுக்கும்.

உணவு மூலம் தவிர்த்தல்

குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனா ல் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.

வைட்டமின் பி மாத்திரைகள்

குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்க ள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடு க்கும். வைட்டமின் பி எனப்படு ம் தையாமின் குறைபாடு, கடு மையான மனநல பாதிப்புக ளை ஏற்படுத்தும்.

மனநிலையை உணர்தல்

உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்ச னைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள் ளும் நடைமுறையை தொட ங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்

குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர் பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போ வதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர் களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.

தண்ணீர் குடித்தல்

சுத்தமான தூய தண்ணீரின் அற்புத த்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண் ணீர் குடிக்க பழக்க ப் படுத்திக் கொள் ளவும்.

உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித் தால், மது அருந்தும் ஆசை குறை யும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: