Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க செல்ல‍ நாய், வாலை ஆட்டுவதற்கான காரணங்களும் அதன் அர்த்த‍ங்களும்!

செல்ல நாய் உங்களிடம் உரை யாட வேண்டும் என்றால் தன் வாலை ஆட்டும் என்பது உங்க ளுக்கு தெரியுமா? சரி, ஒவ் வொரு விதமாக அது வாலை ஆட்டினால், அது ஒவ்வொன்று க்கும் ஒவ்வொரு அர்த்தமாகு ம். உங்கள் நாய் உங்களை பார் த்தபடியே தன் வாலை ஆட்டி னால், அது ஏன் அப்படி செய்கி றது என்பதை புரி ந்து கொள்ளுங்கள். தன் உடலை கொண்டு நாய், தான் சொல்ல வேண்டியதை விளக்கிவிடும். இருப்பினும் அது தன்வாலை ஆட்டும் போது, ஏதாவது ஒரு வகை யில் வித்தியாசப் படுவதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம். இதனை படித்த பிற கு நாய் தன் வாலை ஆட்டுவதற்கான காரணங்களை பற்றி நீங்கள் அறிந்துகொள்ளலாம். இதனு டன் சேர்த்து அதன் கண்கள் கீழிறங்கி, காது கள் புடைத்து கனமாக குரைத்து உங்களை வரவேற்கும்.

நாய், தன் வாலை அன்பின் முறையிலோ நட்பின் முறையிலோதான் ஆட்டுகிறது என் று தவறாக எண்ணி விடக் கூடாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். நாய்களுக்கு வால் என்பது தன் உடம்பை சமநிலையில் வைத்திருக்க உதவும். ஆனால் அது நம்மிட ம் தொடர்பு கொள்ளவும் பயன்படுகிறது. குறுகிய பாதையில் நடப்பதற் கும் மேலே ஏறுவதற்கும் கூட அது வாலை பயன்படுத்தப் படுகிறது.

நாய் தன் வாலை ஆட்டுவதற்கான பல காரணங்களில் சிலவற்றை பற்றி இப் போது பார்க்கலாம். செல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

நிமிர்ந்து நிற்கும் வால்

நாய் நிமிர்ந்த வாலுடன் நின்றால், அது தன்னம்பிக் கையுடன் பிடிவாத மாக உள்ளது என்று பொருளா கும். அது கிளர்வுற்ற நிலையில் இருந்தாலும் கூட, தன் வாலை இப்படி தூக்கி கொள்ளும்.

உடலின் உயரத்திலே வைத்துக் கொள்ளுதல்

செல்ல நாயின் வால் அதன் உடலின் உயரத்திலே வைத்திருப்பதை நீங்கள் கா ணலாம். அப்படி இருந்தால், அது சாதாரண மனநிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும். மேலு ம் அது நட்பு உணர்ச்சியுடன் பாதுகாப்பாக உணர்வதை யும் எடுத் துக்காட்டும்.

கால்களுக்கு நடுவே

இது பொதுவாக நாம் காணக் கூடியவை தான். அதுவும் சண்டை போட தயாராக இருக்கும் தெரு நாய்களில் இதனை அடிக்கடி காணலாம். அப்படி இரண்டு கால்க ளுக்கு நடுவே வால் இருந்தால், நாய் பயந்து போயுள்ள து என்று அர்த்தமாகும். இந்த தருணத்தில், அது உங்களால் பாதுகாக்க ப்பட வேண்டும் என்று நினைக் கும்.

முரட்டுத்தனமாக வாலை ஆட்டுதல்

நாய் தன் முழு பலத்தையும் செலுத்தி, தன் வாலை முரட்டுத்தனமாக சில நேரம் ஆட்டும். அப்படி செய்தால், அது ஏதோ சேட்டை செய்ய போகிறது என்று அர்த்த மாகும். அது பிரச்சனை கலந்த மனநிலையில் இருந்தாலும் இப்படி ஆட்டும்.

லேசாக ஆட்டுதல்

லேசாக தன் வாலை வலப்புறமும் இடப்புறமு ம் ஆட்டினால், அது அங்கு இருப்பதை நாம் உணர வேண்டும் என்று அர்த்தமாகும்.

அகலமாக ஆட்டுதல்

இது நட்பாக இருப்பதை காட்டுவதற்கான மற்றொரு வகையாகும். இப்படி செய் யும் போது அது இடுப்புடன் சேர்த்து ஆட்டும். இது நாய் சந்தோஷமாக இருப்பதை சுட்டிக் காட்டும்.

ஆதிக்கத்துடன் ஆட்டுதல்

மற்ற நாய்களுக்கு மத்தியில் தானும் இருக்கிறேன் என்பதை சுட்டிக் காட்டவே இவ்வகையாக தன் வாலை ஆட்டும். அதுவும் முக்கியமாக ஆண் நாய்கள் இப்படி வாலை ஆட் டும். உங்கள் நாய் தன் வாலை உய ர நிமிர்த்தி, தன் வாலை பலமாக ஆட்டினால் இந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் செல்ல நாய்கள் பல விதமாக வாலை ஆட்டுவதற் கான அர்த் தம் புரிகிறதா? ஆகவே அடுத்தமுறை தன் வாலை ஆட்டு ம்போது, அது என்ன சொல்ல வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்க ள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply