கவியரசு கண்ணதாசன், சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்று “காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அதனால் அவர்கள் சுயசரிதை எழுதினார்கள் அது சரிதான் ஆனால். நீங்கள் எதற்காக சுயசரிதை எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார்
இப்படி ஒரு கேள்வியை, வேறு யாரிடமா வது கேட்டிருந்தால், கேட்ட நபரை துவம்சம் செய்து, அவரே அலறி அடித்து ஓடும்படி செய்திருப்பர் . ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களோ சிறிதளவும் கேட்டவர் மீது கோவம் கொள்ளாமல் மிக வும் அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்ற வர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என் பதற்காக எழுதினார்கள். ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகி றேன். இதிலென்ன தவறு இருக்கிறது என்ற சொன்னாராம். இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத அந்த நபரின் முகத்தில், சில நிமிடங்கள் ஈ ஆடினால் கூட தெரியாத அளவி ற்கு விக்கித்து போனார் பின் அவரே சுதாகரித் துக் கொண்டு, கவியரசு கண்ணதாசனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென் றாராம்.
Reblogged this on Gr8fullsoul.