Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே! நீங்கள் என்றென்றும் ஹீரோவாக (கன்னியர்களின் கனவுக்கண்ண‍னாக) ஜொலிக்க . . .!

தலைப்பே வித்தியாசமாக இருக் கிறதா? ஆம்! அழகு என்றால் பெ ண். பெண் என்றால் அழகு என்ற பழமொழி இப்பொழுது இல்லை. இன்றைய ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். சினிமாக்களிலும். டிவியிலும்வரும் ஆண்கள் அனை வரும் அழகுப் பொருட்கள் உபயோ கிக்கிறார்கள். அதனை தொடர்ந் து. இப்பொழுது பெண்களைப் போலவே அழகு நிலையங்கள் ஆண் களுக்கும் உண்டு. குறிப்பாக திருமண சமயங்களில் மற்றும் விழா க்களுக்கு செல்லும் போது, ஆண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள, அத்தகைய அழகு நிலையங்களுக்கு செல்லுகிறார்கள்

அதனால், நாம் நம்மை அழகுப்படுத் திக் கொள்வதற்கு, பெண்கள் ஆண்க ள் என்ற பாகுப்பாடு இல்லை. நிறைய ஆண்கள் தங்களின் அழகை மேம்படு த்திக் கொள்வதில் ஆர்வம் இருந்தும் எப்படி என்பது தெரியாமல் இருகிறார்கள். ஆகவே அத் தகைய ஆண்களின் பிரச்சனைக்கான தீர்வு கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர் எதற்காக பயன்படுத்துகி றார்கள், ஏன் பயன்படுத்து கிறார்கள் என் று பெண்களிடம் கேட்டால் ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதுவார்கள். ஆனால் அத ற்கான ஒரே விடை, மாய்ஸ்சுரைசர் சரும த்திற்கு நீர்ச்சத்து மற்றும் இயல்பான ஒளி ர்வை பராமரிக்கும் என்பது தான். ஏன் என்று உங்களுக்கு கேள்வி எழும்? இப்படி பாருங்கள் – உங்கள் சருமம் ஒரு மெல்லிய பேப்பர் போல. நாள்பட பேப்பர் வறண்டு, காய்ந்து போய்விடும். ஆகவே சருமத்திற்கு தொடர் ந்து நீர்ச்சத்து கிடைக்கும் பொருட்டு அவை வறண் டு, தோய்ந்து போகாமல் இருக்கும். எனவே சருமத்திற்கு ஏற்ப நீர்ம அடிப்படை யிலான அல்லது எண்ணெய் அடிப்படையி லான மாய்ஸ் சுரைசர் உபயோகித்து குழந் தையின் மேனியை போல் மென்மையாக மாற்றிடுங்கள்.

ஸ்கரப்

தினசரி சரும பராமரிப்பில் நீர்ச்சத்து தே வைப்படுவது போலவே, ஸ்கரப்பிங் செய் வதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது சருமத் துவாரங்கள் டீ வடிக்கட்டி போன்றவை. சரியாக சுத்தம் செய்யவில்லை என் றால், துவாரங்களில் அடைப்பு ஏற் பட்டு, பரு மற்றும் சரும பிரச்சனை கள் வந்துவிடும். மேலும் ஸ்கரப் என்ப து மென்மையான தேய்ப்பொ ருளை அடிப்படையாகக் கொண்ட, பாக்டீரி யாக்களைக் கொள்ளும் மருந்து களை உடைய, தூய்மையா ன கலவை ஆகும். இதனை சருமத்தின் மேல் மென்மையாக தேய்ப் பதன் மூலமாக அழு க்கு, எண்ணெய் பசை மற்றும் மாசுப்படுத்திகள் நீங்கி எரிச்ச லைக் குறைக்கும். எனவே சரும த்திற்கு ஏற்ற, மிதமான கலவையை கொண்டு ள்ள ஒரு நல்ல பிராண்ட்டை தேர்வு செய்யு ங்கள். வாரம் இருமுறை ஸ்க்ரப் செய்து, சரு மத்தை சுத்தமாக வைத்திருங்கள்.

ஆப்டர் ஷேவ்

ஆப்டர் ஷேவ் உபயோகிப்பதால் ஆணுக்குண் டான வலிமை குறைந்துவிடுமோ என்ற எண் ணம் பல ஆண்களிடையே இருக்கிறது. அது கண்டிப்பாக இல்லை. ஆப்டர் ஷேவ் சரும எரி ச்சலை தணித்து, துவாரங்களின் அளவை குறைத்து, பாக்டீரியாக்களையும் கட்டுப் படுத்தும். ஆனால் அல்க ஹாலை அடிப்படையாக கொண்டுள்ள ஆப்டர் ஷேவ் லோஷனை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், அல்க ஹால் முகத்தை வறண்டு போகச் செய்யும் தன்மையுடையது.

லிப் பாம்

லிப் பாமின் எல்லாப் பயன்களையும் பெண் கள் அடையும் போது, நாம் அதன் அடிப்ப டை பயன்களை மட்டும் எடுத்துக் கொள் வோம். வெடித்த உதடுகள் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை. அதனை பார்க்கவே நாட்ட ம் ஏற்படாத போது, அந்த உதடுகளிடம் பெ ண்கள் முத்தம் எல்லாம் எப்படி எதிர்பார்ப்பார்கள்? இந்த உலகத்தில் உள்ள முத்தம் தரக்கூடிய அனைத்து உதடுகளுமே வருங்கால பய ன்பாட்டிற்கு லிப்-பாமை கண்டிப்பாக தன் அழகு சாதன பெட்டியில் வைத்திருக்கும். லிப் பாமில் உள்ள எண்ணெய், அடிப்படையில் மருத்துவ தன்மைகளை உடைய மூலிகை கலவை. அதனால் அது உதடுகளை வறட்சியி ன்றி பாதுகாக்கிறது. ஆண்கள் நிறமற்ற லிப் பாமையே தேர்வு செய்து உபயோகிக்க வேண் டும். லிப் பாம் தேர்வு செய்வதில் குழப்பம் இரு ந்தால், சிறிது வேஸ்லின் போதும். அது உதடு களை மேலும் கவர்ச்சியாக்கும்.

சன் ஸ்க்ரீன் லோஷன்

சன் ஸ்க்ரீன் லோஷன் முக்கியத்துவத்தை பெரிதாக வலியுறுத்த முடியாது. இந்தியர்களி ன் சருமங்கள் வேனிற்கட்டிகளுக்கு பெரிதும் உட்பட்டது. இதன் ஒரே தீர்வு நம்மை பாதுகாத் துக் கொள்ள, வீட் டின் உள்ளேயே இருக்க வே ண்டும். ஆனால், நம்முடைய தொழில் முயற்சி கள், இதனை அனுமதிக்க முடியாததால், நாம் சன் ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தி, வெயி லில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளலாம். குறிப்பாக சன் ஸ்க்ரன் லோஷனை சூரிய ஒளி படும் இடங்களில் தடவி வந்தால், வேனிற்கட்டிகள் போயே போய்விடும்.

ஷாம்பு

வறண்ட முடி எப்பொழுதுமே அழகில்லை . ஆனால் இன்றைய ஆண்கள் ஷாம்புவின் மோகத்தால், அவர்களுடைய நுண்குமிழ் நலனை புறக்கணிக்கிறார்கள். மென்மை யான ஷாம்பு உபயோகித்தால், அது அழு க்கு மற்றும் எண்ணெய் பசையை சுத்தம் செய்து, மயிர் கால்களுக்கு புத்துயிர் அளி த்து, முடி வளர்வதற்கு உதவும். இருப்பி னும் அதனை அதிகமாக உப யோகித்தால் நுண்குமிழ்கள் அதன் எண்ணெய் தன்மையை இழ ந்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகி றது. ஆகவே மென்மையான மூலி கை ஷாம்புவை தேர்வு செய்யுங் கள் மற்றும் வாரம் இரு முறைக்கு மேல் அதனை உபயோகிக்காதீர் கள்.

கண்டிஷனர்

கண்டிஷனர் என்பது பெண்களின் சமாச்சாரம் என்று எண்ணி, ஆண் களுக்கு கண்டிஷனர் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கூட, மென்மையான தலைமுடி அவ்வளவு சுலப மாக வந்து விடா து என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஷாம்புவால் ஏற்பட்டு ள்ள கொடிய இரசாயன தாக்கத்தை சரிசெய் து, எண்ணெய் பசை கலவையால் நுண் குமிழ்களுக்கு நீர்ச்சத்தை சேர்க்கிறது கண் டிஷனர். ஆகவே தலைமுடிக்கு ஏற்ப கண்டி ஷனரை தேர்வு செய்தால், தலைமுடி மென் மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

எண்ணெய்

தலைக்கு எண்ணெய் என்றாலே அது தன்னை பாதிக்கும் என்று நினைத்து ஓடும் ஆண்களே!! கொஞ்சம் நில்லுங்கள்!! மாய்ஸ்சுரைசர் சருமத்திற் கு எப்படியோ, அப்படித்தான் எண்ணெய் தலைமுடிக்கு. சருமத்திற்கு எப்படி ஊட்டச் சத்து அவசியமோ, அப்படித்தான் தலைமு டிக்கும் ஊட்டச்சத்து தேவை. அவை இல் லை என்றால், முடி உதிர்வு ஏற்படும். ஆ னால் ஆண்கள் தலைமுடிக்கு தேவையா ன ஊட்டச்சத்து தராத எண்ணெயை பயன் படுத்துகிறார்கள். ஆனால் முடிக்கு ஆலி வ், பாதாம் மற்றும் நல்லெண்ணெய்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உபயோகித்தா ல் சிறந்த ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.

கன்சீலர்

ஆமாம் இது பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா ஆண்களுமே பெண்களின் மென் மையான சருமத்தைப் பார்த்து வியந்து, நம க்கும் இந்த மாதிரி இருக்காதா என்று நினைப்பார்கள். அதன் ரகசியம் அழகுப் பொருட்கள் தான். கரும்புள்ளிகள், பருக்க ள், வெடிப்பு மற்றும் கருவளையங்கள் போ ன்றவற்றை மறைக்க கன்சீலர்கள் உதவுகி றது. எனவே சரும நிறத்திற்கு ஏற்ப கன்சீல ரை தேர்வுசெய்து ஜொலி யுங்கள்.

ஹைலைட்டர்

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிகிற து. இது கடைகளில் கிடைக்கும் நோட் புக் ஹைலைட்டர் அல்ல. ஹைலைடர் என்பது ஒருவரது முகத்தில் உள்ள ஹை பாயிண்ட் பகுதிகளை எடுத்துக் காட்டும் அழகுப் பொ ருள். குழப்பமாக உள்ளதா? ஹை பாயிண்ட் எனப்படுவது ஒருவரது முகத்தில் உள்ள தாடை எலும்பு, புருவ எலும்பு, நோஸ் பிரிட் ஜ் மற்றும் மேலுதட்டிற்கு மேல் உள் ள பகுதி. இந்த இடங்களில் சிறிது தடவி வந் தால், நீங்க தான் சூப்பர் மேன்.

மேற்கூறிய பொருட்களை எல்லாம் சரிவர உபயோகித்தால், நீங்கள் தான் எப்பவும் ஹீரோ…

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: