Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை – பேஷனுக்காக தொப்புளில் வளையமா! வேண்டவே வேண்டாம்!

நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருந்தாலும், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது.
அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விள ங்குகிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம் பில் துளையிடுதல். நம் சமூகத்தில் உடம்பில் துளையி டுதல் என்பது ஒரு முக்கிய நாகரீகமாகவும், பண் பாடாகவும் மாறி வருகிறது.
பல காரணங்களுக்காக பலர் உடம்பில் துளையிடு கின்றனர். சிலர் சமயஈடுபாடு அல்லது பண் பாட்டு காரணங்களுக் காக, உடம்பில் துளையிடுகின்றனர். இன்னும்  சில பேர் ஸ்டைல், அழகு மற்றும் நாக ரீகம் என்ற காரணங்களை காட்டி உடம்பில் துளை யிடுகின்றனர்.
எந்த ஒரு காரணத்திற்காக இருந்தாலும், உடம்பில் துளையிடுவது என்பது பெரிய முடிவாகும். அதை லேசாக எடுத்துக் கொள்ளகூடாது. எவ்வித துளையிடுதலாக இருந்தாலும் சரி, அதில் சில உடல்நல இடர்பாடு கள் மற்றும் பிரச்சனைகள் அடங்கி யுள்ளது.
அதனால் துளையிடுதல் என்ற முக்கிய முடிவை எடுக்கும் முன், அதனை பற்றி முழுவதும் தெரி ந்து கொண்டு, அதில் அடங்கியுள்ள பிரச்சனைக ள் பற்றியும் புரிந்து க் கொள்ள வேண்டும்.
சரி, இப்போது உடம்பில் துளையிடுவதால் ஏற்ப டும் உடல்நல இடர்பாடுகள் என்னவென்று பார்ப் போம்…
தொற்றுகள்
தொற்று என்பது உடம்பில் துளையிடுவதால் ஏற் படும் பொதுவான பிரச்சனை. இதி ல் கவனம் செலுத்தவில்லை என்றாலோ அல்லது உரிய சிகிச்சையை சரி யான காலத்தில் எடுக்கவில்லை என்றாலோ, தழும்பு ஏற்படுவதுடன் இரத்தம் நஞ்சாகி விடும்.
அதிலும் சரிவர கவனம் செலுத்தாவிட் டால் அசிங்கமான தழும்பை உண்டா க்கி விடும். குறிப்பாக தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஒழுங்கில்லா மல் துளையிடுதல், துளையிட்டப்பின் சரியாக பராமரிக்கா மல் போவது மற்றும் துளையிட்ட இட த்தில் பயன்படுத்தும் நகைகள் போன் றவை ஆகும்.
அலர்ஜிகள்
லோகங்கள் உடலில் படும்போது சரும அலர்ஜி ஏற்படுவதற்கு அந்த உலோக ங்களே காரணியாக விளங்குகிறது. அதனால் உடம்பில் துளையிடும் சில வகை அணிகலன்களால், இவ்வகை அலர்ஜி கள் ஏற்படுவதுண்டு.
மேலும் இத்தகைய அலர்ஜிகள் சுவாசப் பிரச்ச னை, சொறி மற்றும் துளையிட்ட இடத்தில் வீக்க ம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சில நேர ம் அலர்ஜி தீவிர மடைந்தால் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி மருத்துவமனையில் அனும திக்கச் செய் யும்.
அதனால் துளையிடுவதற்கு துருபிடிக்காத தரமா ன ஸ்டீல், டைட்டானியம் மற்றும் தங்கங்களை தேர்தெடுத்தால் அலர்ஜிகளில் இரு ந்து விடுபடலாம்.
நரம்பு சிதைவு
ஒழுங்காக துளையிடவில்லை என்றாலோ அல்ல து துளையிட்ட இடத்தில் குத்தப் படும் அணிகலன் சரியாககுத்தப்படவில்லை என்றாலோ நரம்பு சிதைவு ஏற்படும். அதிலும் தவறான இடத்தில் துளையிட்டால், அங்குள்ள நரம்பையும் சேர்த்து துளை யிட வாய்ப்புகள் அதிகம்.
அதுமட்டுமல்லாது துளையிட்ட இடத்தைச் சுற்றி யுள்ள இடங்களும் நிரந்தரமாக செத்துப்போகும். குறிப்பாக நாக்கில் துளையிடும்போது, நரம்புகள் பாதிப்புக்குள்ளா வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள ன. முக்கியமாக துளையிடுபவர் வல்லுனராக இல்லாத போது தான், இத்தகைய பிரச்சனை ஏற்படும்.
அதீத இரத்தக்கசிவு
துளையிடுபவர் வல்லுனராக இல்லாமல் போனா லும் சரி, துளையிட்ட இடம் தவ றாக இருந்தாலும் சரி துளையிடும் ஊசி இரத்தக் குழாய்கள் வழியாக உள்ளே நுழை யலாம். இதனால் கட்டுப்படுத்த முடி யாத அளவுக்கு இரத்தக் கசிவு ஏற்படலாம். இது அதிகமான இரத்த இழப்பை ஏற்படுத்தும்.
தூய்மைகேட்டின் இடர்பாடு
துளையிடுவதில் வல்லுநர் இல்லாதவர் சுகாதாரமற்ற இடத்தில் துளையி ட்டால் இரத்த சம்பந்த நோய்களான எச்.ஐ.வி. கிருமி, ஈரல் அழற்சி மற்றும் இதர நோய்க ளை ஏற்படுத்தும்.
தழும்பேற்றம்
தழும்பேற்றம் என்பது துளையிட்ட இடத்தில் ஏற்ப டும் தழும்பின் அதீத வளர்ச்சியாகும். இது பார்ப்ப தற்கு அசிங்கமாக காட்சி அளிக்கும். இதற்கான சிகி ச்சை என்பது சிக்கலான ஒன்றாகும். இதற்கு என்ன சிகிச்சை எடுத்தாலும் சரி, இந்த வடுவை அது முழுவ துமாக நீக்காது.
பற்களில் ஆபத்து
வாயில் துளையிடுவது என்பது பற்களில் ஆபத்தை வளைவிக்கலாம். அதிலும் பற் களை உடைக்கவோ, தாடை மற்றும் ஈறு களை சிதைக்கவோ, பற்களின் எனாம லை தேயச் செய்யவோ அல்லது அங்கு அணியும் அணிகலன்கள் சுவாசப்பையில் பிரச்சனைகளை ஏற்படுத்தவோ செய்ய லாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: