Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்காவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கும்! – அதிபர் ஒபாமா கடும் எச்ச‍ரிக்கை

கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டா லும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக் காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்ப டும் என்று அந்நாட்டு ஜனாதி பதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். நிதி நெருக்கடி யால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரச நிறுவனங்கள் மூடப்பட்டு ள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்க ளுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், “இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீ ர்கள். சாதாரண நிலை யில் நாடு இல்லை. 17 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அரசு முடங்கி யுள்ளது. இது அனைவரையு ம் பாதிக்கும். இதற்கு குடியர சுக் கட்சியினர் தான் காரணம். அரசு மேற்கொள்ளும் நடவடி க்கைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

இந்த நிலை நீடித்தால் அமெ ரிக்கப் பங்குச் சந்தைகளில் பாதிப்பு ஏற்படும், வர்த்தகம் தடைப்படும், வேலைவாய்ப்பின்மை அதி கரிக்கும், பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாது. இதனால் அரசு செலுத்த வேண் டிய தவணைத் தொகையைச் செலுத்த முடி யாமல், கடன் பாக்கி வைத்திரு ப்போர் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறும். இதன் மூலம் நா ட்டின் நம்பகத்தன்மை குலைந்துவிடும். முதலில் அமெ ரிக்க வரவு செலவு திட்டத்துக்கு நாடாளு மன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். கடன் உச்ச வரம்பை அதி கரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல் நாட்டின் பொருளா தா ரம் முடங்கும் என்றார் ஒபாமா.

படித்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: