Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பளபளப்பான, நீளமான‌, ஆரோக்கியமான‌, அடர்த்தியான‌ தலைமுடியை இயற்கையான முறையில் பெற . . .

உடலழகு எவ்வாறு முக்கியமோ, அதே அளவு தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வே ண்டும். நம்மில் ஒரு சிலர் தான் இதனை செய் கிறார்கள். தலைமுடிக்கு தேவையான ஊட்ட சத்துகள் நாம் பய ன்படுத்தும் ஷாம்புக்களிலும் கண்டிஷனர்களிலும் தான் இருகின்றது. ஆக வே, தலைமுடி பராமரிப்பில் சிறிது கவனம் எடுத்தோம் என் றால் சிறந்த போஷாக்கு நிறை ந்த அடர்த்தியான தலைமுடியை இயற்கையா ன முறையில் பெறலாம்.

அவகேடோ, வாழைப்பழம், தேன் மற்றும் தேங் காய் – இவை அனை த்தும் ஒரு நல்ல சமையலுக்கு தேவையானப் பொருட்கள் என்று நினைக்கலாம். ஆனால், இவை ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கப் பயன்படும் பொருட்களும் ஆகும். ஷாம்பு குளியலுக்குப் பிறகு நமது தலைமுடிக்கு சிறந்த கண்டிஷன ர் தேவைப்படுகிறது.

முடிக்கு தேவையான நீர்சேரல் எப்பொழுது மே பாட்டில்களில் கிடைக்கும் கண்டிஷனரில் மட்டும் இல்லை. சிலவகை உணவு வகைக ளும், முடியின் வறட்சி தன்மையை சரி செய்து கண்டிஷனி ங் செய்யக்கூடும். சரி வாங்க, இது பற்றி படிக்கலாம்.

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களை கண்டிஷனராக பயன் படுத்துங்கள். அவற்றில் உள்ள மிகச் சிறந்த பயனுள்ள கண்டிஷனர் முடியை மேலும் மென்மையாக்கும். அவற்றுடன் தேன், கிளி சரின் மற்றும் ஆலிவ் ஆயில்சேர்த்து உப யோகிக்கலாம். அவை, நமது முடியில் ஊடு ருவிச் சென்று மாய்ஸ்சுரைசிங் பயன்களை க் கொடுக்கும். இவையனைத்தையும் நன் றாக கலவையாக்கிக் கொள்ளவும். இக்கல வையை தலைமுடியில் தடவி, 30-45 நிமிட ங்கள் ஊற வைக்கவும். பிறகு, மென்மை யான ஷாம்புவுடன் முழுமையாக அலச வே ண்டும்.

தேன்

தேன் ஒரு வகையான வறச்சி அகற்றி. எளிதாக கூற வேண்டுமெ ன்றால், இதற்கு நீர் மூலக் கூறுகளை ஈர்த்து தக்க வைத்துக் கொள் ளும் தன்மை உடையதால், இது ஒரு மிகச்சிறந்த கண்டிஷனர் மற் றும் மாய்ஸ்சுரைசர். இதன் விரும்பத்தக்க பலன் நமது முடியை மென்மை யாக்கி பளிச்சிடச் செய்யும். மேலும், இதில் செறி வூட்டும் வைட்டமின்களும், கனிமங்களும் நிறைந்துள்ளன. கால் பங்குச் தேனுடன் அதே அளவில் கண்டிஷனரைக் கலக்கவும். பின் இதனை நன்கு கலக்கி கொள்ளவும். பிறகு, கைகளால் கண்டிஷனர் மற் றும் தேன் முடியில் நன்றாக பரவுமா று தடவவும். அதன் பிறகு, முடியின் வேரிலிருந்து நுனிவரை மசாஜ் செ ய்து, 30 நிமிடங்கள் பிறகு குளிக்கவு ம்.

அவகேடோ

தேங்காய் எண்ணெய்க்குப் பிறகு தலை முடிக்கு மிகச்சிறந்தது அவ கேடோ பழங் கள்தான் என்பது நாம் அறிந்த ஒன்று. அவ ற்றை தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயி லுடன் சேர்த்து கலந்தால், மிகச்சிறந்த கண்டிஷனர் ரெடி. அதற்கு ஒரு அவகே டோவை நன்றாக மசித் துக் கொள்ளவும். அதில் தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயி ல் சேர்த்து கலக்கவும். நாம் கலக்கும் இந்த கலவை கண்டிஷனர் பதத்தில் இருக்க வே ண்டும். நன்றாக கலந்த பின்பு ஒரு கோப் பையில் ஊற்றி வையுங்கள். இதை ஃப்ரிட் ஜில் வைத்து, ஒவ்வொரு முறையும் தலை க்குளியல் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தலைமுடி வலிமையானதாகவும், சிற ந்ததாகவும் இருக்க விரும்பு வோர்க்கு இதுவே மிகச்சிறந்த கண்டிஷனர். கால ம் காலமாக நமது முடியைசிறப்பாக வைப்பது இந்த தேங்காய் எண்ணெய் தான். நமது முடியுடன் பிணைந்து கரோட்டின் குறைவதை தடுப்பதே இத ன் சிறப்பு ஆகும். நீர்த்தன்மையை தக்க வைப்பதற்காக தேனையும் சேர்க்கலாம். எனவே ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயையு ம் தேனையும் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு பெரிய பாத்திர த்தில் வெந்நீர் ஊற்றி அதனுள் வைக்கவும். அந்த கலவை சூடாகும் வரை சிறிதுநேரம் வைக்கவும். பின் னர், குளித்து முடித்தவுடன், ஈரம் வடிந்த தலை முடியில் ஊற்றவும். 20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசவும்.

வினிகர் அலசல்

ஆப்பிள் சீடர் எனப்படும் வினிகர், ஒரே சமயத் தில் தலைமுடியை சுத்தம் செய்வது மட்டுமல் லாது, pH அளவையும் சமப்படுத்துவதால், இது மிகச்சிறந்த ஹேர் கண்டிஷனர் ஆகும். அதற் கு செய்ய வேண்டி யதெல்லாம் 2 கப் தண்ணீருடன் வினிகர் சேர்த்து தலை முடியில் தடவி 20-30 நிமிடங்கள் ஊறவிடுங்கள். தலையில் தடவிய பின்பு 4-5 முறை விரல்களால் கோதி விடுங்கள். குளிர்ச்சி யான தண்ணீர் விட்டு அலசு ங்கள். இது முடியை கண்டிஷனிங் செய்வது மட்டுமல்லாது, இரசாய னப் பொருள் மற்றும் தலையில் போகாமல் இருக்கும் ஷாம்பு / கண்டிஷன ரை நீக்கிவிடும்.

புதினா கண்டிஷனர்

தேவையான பொருட்கள்:

3 டம்ளர் தண்ணீர், ஒரு பாத்திரம் நிறைய புதினா இலைகள்.

செய்முறை:

சிறிது புதினா இலைகளை 2-3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடி கட்டி குளிர வைக்கவும். இந்த தண் ணீரை, ஷாம்பு குளியலுக்கு பிறகு ஊற்றி அலசினால் தலைமுடி புத்து ணர்ச்சி பெறும்.

வீட்டிலேயே தயாரிக்கும் கண்டிஷனர்களுடன் சில மாற்றங்கள்

தலை முடி பயனடைய வேண்டுமெ னில், வீட்டில் தயாரித்த கண்டிஷனர்க ளுடன் சில செடி, எண்ணெய் முதலிய வற்றை கொண்டு சிறந்த நறுமணத் தை பெற முடியும்.

எண்ணைப் பசை உள்ள தலைமுடிக்கு சேர்க்க வேண்டியவை

6-8 சொட்டுகள் அதி முக்கிய எண் ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். அதிலும் பெர்கமொட், லாவெண்டர், எலுமிச்சை, ரோஸ்மேரி, சந்தனம், தேயிலை மரம் அல்லது யலங் யல ங்.

வறண்ட மற்றும் பொடுகு உள்ள தலைமுடிக்கு சேர்க்க வேண்டிய வை

6-8 சொட்டுகள் அதி முக்கிய எண் ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக பெப்பர்மிண்ட், தேயிலை, யூகலிப்டஸ், எலுமிச்சை, சேஜ் அல் லது ரோஸ்மேரி.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply