Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திவெறி பிடித்தவர்களே! இந்திக்கு வால்பிடிப்பவர்களே! – தமிழுக்காக தீக்குளித்த‌ “ரெங்கநாதன்”!

1965 ஜனவரி 26ந்தேதி (குடியரசு தினம்) முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அன்றைய தினத்தை துக்க நாளாகக் கடை ப்பிடிக்கப் போவதாக தி.மு.கழ கம் அறிவித்திருந்தது. அன்று அவரவர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், மாலை யில் துக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று ம் அண்ணா அறிவித்தார்.

அதையொட்டி, அண்ணாவும் மற்ற தலைவர்களும் முன் கூட்டிய கைது செய்யப்பட்டனர். அதனால் தமிழகம் எங்கும் கொந்தளிப்பான நிலை மை ஏற்பட்டது.26 ந்தேதி குடியரசு தினத்தன்று 2 தமிழர்கள், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தனர். ஒருவர் பெயர் சிவலிங்கம்.

வயது 24. இவர் கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். இவ ருக்கு, பெற்றோர் இல்லை. அண்ணன் வீட்டில் தங்கியி ருந்தார். வன்னியர் சமூக த்தைச் சேர்ந்தவர். சென் னை மாநகராட்சியில், மாதம் ரூ.75 சம்பளத்தில் சிப்பந்தியாக (அட்டெண் டர்) வேலை பார்த்து வந் தார். 2 பெட்ரோல் டின்களுடன் சென்றதை சிலர் பார்த்தார்கள்.

“இந்த பெட்ரோல் டின் எதற்கு?” என்று கேட்டதற்கு, “ஆபீசுக்கு வாங்கிப் போகிறேன்” என்று பதிலளித்தார். குடியரசு தினத்துக்கு முந்தின நாள் நண்பர்களுடன் பேசிக் கொண் டிருந்தபோது, “நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போ கிறது. இது துக்கநாள். கறுப்பு ச்சின்னம் அணியப் போகி றேன்” என்றார்.

வழக்கமாக சிவலிங்கம் வீட்டுத் திண்ணையில் படுத் துத் தூங்குவது வழக்கம். குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவும், வழக்கம்போல், வீட் டுத் திண் ணையில் படுத்திருந்தார். அதிகாலை 4 மணிக்கு அவர் அண்ணன் காளி முத்து எழுந்து பார்த்தார். சிவலிங்கத்தைக் காணவில்லை. சுற்றும் முற் றும் பார்த்தார். வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப் பிடித்து எரிவ து போல தெரிந்தது. அருகில் சென்று பார்த்தார்.

தீப்பிடித்து எரிந்த இடத்தில் சிவ லிங்கம் உடல் முழுவதும் கருகி பிண மாகக் கிடந்தார். அருகில் 2 பெட்ரோல் டின்கள் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்திலும், வீட்டி லும் “உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன.

குடியரசு தினத்தன்று நள்ளிரவில் ரெங்கநாதன் (வயது 32) என்ற இன் னொரு தமிழர் தீக்குளித்தார். இவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள் ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர். கல்யாணம் ஆனவர். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ரெங்கநாதன், ஆயிரம் விளக் கு பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சேவகராக (பியூன்) வேலை பார்த்து வந்தார்.

அரசாங்க ஊழியராக இருந்தாலும், தி.மு.கழகத்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். தமிழ்ப்பற்று உள்ளவர். குடியரசு தினத்தன்று இரவு, நண்பர்களுடன் ரெங்கநாதன் பேசிக்கொண்டு இருந்தார். காலையில் தீக்குளித்த சிவலிங்கம் பற்றியும், பஞ்சாயத்து தேர்தல் பற்றியும் அவர்கள் பேசினார்கள். பிறகு ரெங்க நாதன் வீட்டுக்குப் போய்விட்டார்.

ரெங்கநாதன் வீட்டில் அவர் மனை வியும், மற்றவர்களும் தூங்கிக்கொ ண்டு இருந்தபோது, நள்ளிரவு சுமார் 3 மணிக்கு ஏதோ அலறல் சத்தம் கேட்டது. அவர்கள் விழித்துக்கொ ண்டு வெளியே ஓடி வந்தார்கள். மற்ற குடிசைகளில் இருந்தவர்க ளும் வெளியே வந்தார்கள். விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் இருந்து சற்று தூரத்தில் காட்டிற்குள் வெளிச்சம் தெரிந்தது. அங்கு ஓடினார்கள்.

ஒரு மரத்தடியில், ரெங்கநாதன் தீயில் எரிந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் பெட்ரோல் டின் ஒன்றும் எரிந்து கொண்டு இருந்தது. இந்த பயங்கர காட்சியைக் கண்டு, ரெங் கநாதனின் மனைவியும், உறவின ர்களும், குழந்தைகளும் கதறி அழு தார்கள். இதுபற்றி தகவல் கிடைத்த தும், போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப் பி வைத்தார்கள்.

ரெங்கநாதன் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் குறிப்பி டப்பட்டு இருந்ததாவது:-

“இந்தியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர் கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர் கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறு த்து பேசியும், இந்தி வெறி பிடித்தவர்க ளே இந்திக்கு வால் பிடிப்பவர்களே எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியை புகுத்துகிறீ ர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! 1965 ஜனவரி 26 முதல் அட்வா ன்ஸ். தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! வணக்கம். – ரெங்கநா தன்.

மேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்ப ட்டு இருந்தது..

(தமிழகத்தில் இந்தியை எதிர்த்து முதன் முதலில் தீக்குளித்தவர் சின்ன சாமி என்ற ஆசிரியர். அவர் 1964 ம் ஆண்டு ஜனவரி 25 ந்தேதி காலை திருச்சி ரெயில் நிலையம் அருகே, “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக” என்று முழக் கமிட்டபடி தீக்குளித்தார். அதற்குச் சரியாக ஒரு ஆண்டுக்குப்பிற கு சிவ லிங்கமும், ரெங்கநாதனும் தீக்குளித்தனர்.)

சென்னையில் சிவலிங்கமும், ரெங்கநாதனும் தீக்குளித்ததைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ம் கீரனூரில் முத்து என்பவர் இந்தித் திணிப் பைக் கண்டித்து விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார். விராலி மலையில் சண்முகம் என்பவரும் இதேபோல் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.

தீக்குளிப்பு: ஐ.நா.சபையில் எதிரொலி!

தமிழ்நாட்டில், இந்தியை எதிர்த்து 2 பேர் தீக்குளித்த சம்பவம் ஐ.நா. சபையில் எதிரொலித்தது. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐ.நா.சபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்திய பிரதிநிதி சக்ரவர்த்தி, காஷ்மீர் பிரச்சி னை பற்றி பேசினார்.

அவர் பேசுகையில், “காஷ்மீரில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தவேண் டும் என்று பாகிஸ்தான் வற்புறுத்துகி றது. கிழக்கு பாகிஸ்தானிலும் (தற் போதைய வங்காளதேசம்), பலுசிஸ் தானிலும் பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிர்ப்பு இருக்கிறது. அங்கு வாக்கெ டுப்பு நடத்தத் தயாரா?” என்று கேட் டார்.

அதற்கு பதில் அளித்து பாகிஸ்தான் பிரதிநிதி அம்ஜத் அலி பேசியதாவ து:- “பாகிஸ்தானில் உள்ள சில பகுதி களில் வாக்கெடுப்பு நடத்தத் தயா ரா என்று இந்தியப் பிரதிநிதி கேட்டார். சென்னையில், 2 தமிழ் வாலிப ர்கள் தீக்குளித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடந்துள்ள நிகழ்ச்சிக ளைக் கொண்டு, “இந்தியாவில் சேர்ந்து இருக்க வேண்டுமா, வேண் டாமா” என்று தமிழ் நாட்டில் வாக் கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறமுடியும். ஆனால் நாங்கள் அப்படிக் கூறவில்லை. ஏனென்றா ல், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. ஆனால், காஷ்மீர் இந்தியா வின் பகுதி அல்ல. அதனால்தான் அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுகிறோம்.” இவ்வாறு பாகிஸ்தான் பிரதிநிதி கூறினார்.

நன்றி மாலைமலர்

Leave a Reply