Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை நோயும் அதன் அறிகுறிகளும் தீர்வுகளும்!

தூக்கம் வரவில்லை என்று பலர் புலம்புவதை நாம் காணலாம். அது என்றாவது ஒரு நாள் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே தினசரி பழக்கமாக மாறினால்? இன்சோம்னி யா (தூக்கமின்மை) என்பது இந்த உலகத்தில் அனைத்து வயதினரும், அது ஆணாக இருந் தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொது வான உடல்நல கோளாறாகும். இன்சோம்னி யா என்பதற்கு அர்த்தம் என்னவென்று பார்த் தால் சாதாரணமானது தான்; தூக்கமின்மை அல்லது சீரான தூக்கம் கிடைக்காததே அதற்கு அர்த்தமாகும்.

பல வகை இன்சோம்னியாவால் பல மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன ர். குறுகிய கால இன்சோம்னியா என் றழைக்கப்படும் அக்யூட் இன்சோம் னியாதான் அதிகமானோரை பாதிக்கி றது. போதிய மருந்துகள் உண் டால் அல்லது வாழ்க்கை முறையை சிறி து மாற்றி அமைத்தால், இது சிறிது காலத்தில் தானாகாவே சரியாகிவிடு ம். ஆனால் நீண்ட காலமாக இருக்கு ம் இன்சோம்னியா கண்டிப்பாக வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தும். அதனை கண்டிப்பாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடு த்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களுக்காவது 30 நாட் களுக்கு மேல் தூக்கமில்லாமல் இருந் தால், குரோனிக் இன்சோ ம்னியா என் றழைக்கப்படும் இன்சோம்னியாவால் பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது என்று கூறலாம். குரோனிக் இன்சோம்னியா வால் பாதிக்கப்பட்ட வர்களை ‘இன் சோம்னியாக்ஸ்’ என்று அழைப்பார்கள். இப்போது இன்சோம்னியா வால் பாதிக்கப்பட்டிருந்தால் ஏற்படும் அறிகு றிகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் பார்ப்போம்.

1. பகல் நேரத்தில் சோம்பல்

பகல் நேரத்தில் அடிக்கடி சோம்பல் ஏற்படுவது இன்சோம்னியாவின் கண்கூடான அறிகுறியாகு ம். அதிலும் நோய்வாய் பட்டிருக்கும் போது ஏற் படும் சோம்பல் உணர்வை இப்போது உணரலாம். இப்படி பகல் நேர த்தில் ஏற்படும் களைப்பும், தூக்க கலக்கமும் நம் வேலையை வெகு வாக பாதிக்கும்.

2. அதிகரிக்கும் எரிச்சலும் மாறும் மனநிலையும்

தினசரி போதுமான அளவு தூக்கம் கிடைக்கா மல் போகும் போது, நமக்கு எரிச்சல் அதிகரிப் பது இயல்பு தான். அப்படிப்பட்டவர்களுக்கு மூட்டை மூட்டையாக கோபம், சோகம் மற்று ம் மன அழுத்தம் ஏற்படும். அவர்களால் அனைத்திலும் சரி வர கவனம் செலுத்த முடியாது.

3. குரோனிக் இன்சோம்னியாவின் அறிகுறிகள்

இன்சோம்னியா அறிகுறிகளை காலாகால த்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை பெறா விட்டால், அவைகள் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு சென்று விடும். நாம் மேல் கூரியதை போல் இல்லா மல் இது மிகவும் ஆபத்தில் போய் முடியும். உதாரணத்திற்கு சொல்ல வேண் டுமானால் இதனால் பாதிக்கப்பட்டவர் நிரந்தரமா க மன அழுத்தத்துக்கு ஆளாவார். இது குறுகிய காலப்பிரச்சனை யோ அல்லது குறுகிய கால மன அழுத்தமோ கிடையாது. இது முற்றும்போது பாதி க்கப்பட்டவர் முழவதும் செயலிழந்து போவார்.

4. அரோமாதெரபி (வாசனை தெரபி)

உங்களுக்கு மன அழுத்தமா? அப்படியானால் அரோ மாதெரபியை தேர்ந் தெடுங்கள். இந்த எண்ணெய்க ள் நிச்சயம் கை கொடுக்கும்.

5.சாம்பிராணி

சுவாசப்பைக் குழாயழற்சி, இருமல் மற்றும் கவ லையினால் ஏற்படும் இன்சோம்னியாவிற்கு இதனை பயன்படுத்தலா

6. மல்லிகை

மன அழுத்தத்தை நீக்க இது பெரிதும் உதவும். சுவாசப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்திற் கு இது பெரிதும் உதவி புரியும்.

7. லாவெண்டர்

வலி, தலைவலி, சதை பிடிப்பு போன்றவைக ளை நீக்கி, நல்ல தூக்கத்தை அளிக்கும். பயத்தி னால் போகும் தூக்கத்திற்கும் இது நிவாரணியா க விளங்கும்

8. யோகாவின் மேஜிக் யோகா

உடம்பில் உள்ள நரம்பியல் அமைப்பை ஊக்குவிக் கும். மேலும் இன் சோம்னியா வர முக்கிய காரண மாக இருக்கும் மன அழுத்தத்தை நீக்கவும் இது உதவும். பிரேதம் போல் படுத்திருக்கும் யோகாவை மேற்கொண்டால், அது பதட்டத்தை நீக்கி தூக்கமின் மையை போக்கும். ஆகவே இதற்கு 20 நிமிட நேரத்தை ஒதுக்குங்கள்.

9. மூலிகையின் மகிமை

உடல் நல ஆரோக்கியம் ‘யின்’ மற்றும் ‘யாங்’ என்ற இர ண்டு சிறு வார்த்தைகளில்தான் அடங்கியுள்ளது என்று சீன மக்கள் நம்புகின்றனர். இவை இரண்டும் எவ்வளவு சமமாக இருக்கிறதோ, அவ்வளவு அளவு உடல் ஆரோக் கியமாக இருக்கும். சாமந்திப்பூ, சீமைச்சாமந்தி மற்றும் லாவெண்டர் போன்ற மூலிகை தேநீர் பருகினால், அவை இன்சோம்னி யாவுக்கு எதிராக போராடி விரை வில் குணமடைய செய்யும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: