Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“காக்கையை தேசியப்பறவையாக அறிவிக்கவில்லையே! ஏன்?” – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தபோழுது தான், அப்போதையை மத்திய அரசு, இந்தி யை ஆட்சிமொழயாக அறிவித்த‍து .அ தோடு மட்டுமின்றி, இந்தியை எல்லோரு ம் கண்டிப்பாக கற்று அதிலேயேதான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற கட்டாய சடட்ட‍த்தை கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் பல தீவிரமாக அரங்கேறக்கொண்டிருந்தது

அந்த சமயத்தில் பேரறிஞர். அண்ணா அவர்கள், டில்லியில் ஏற்பாடு செய்ய‍ப்ப ட்டிருந்த ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற‍ பல்வேறு விருந்தினர்களும் தங்களது பேச்சுக்களை பேசி முடித்த பிறகு பேரறிஞர் அண்ணா அவ ர்கள், பேச்ச் சென்றார் .அந்த இடத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்கப்பட்டிருந்தன . அண் ணா பேசும்போது, அங்கி ருந்த பத்திரிகையாள ர்களில் ஒருவ ர் அண்ணாவிடம் நீங்கள் பேசு வதை காட்டிலும், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்க ள் பதில் அளித்தால் நன்றாக இருக்குமே என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்ம தித்தார்

அண்ணாவை பார்த்து அந்த பத்தி ரிகையாளர், “நீங்கள் இந்தியை ஏன் ஆட்சி மொழியாக்க கூடாது என்று மறுக்கிறீர்கள், எதிர்க்கிறீர்கள் என்று கேட்க, அறிஞர் அண்ணா வோ! சிறிதும் பதற்ற‍ம் இன்றி, புன்ன‍கை யுடன் “நீங்கள் இந்தியை ஏன் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் ” என்று அதே கேள்வி திருப்பி கேட்டார்.

அதற்கு பத்திரிகையாளரோ ‘ இந்தியா ஒரு பொதுவுடைமை நாடு என் றதால்.இங்கு யாருக்கு பெரும் பான்மை இருக்கிறதோ அவர்க ளுக்குத் தான் முன்னுரிமை அளிக்க‍ ப்படும் .அந்த வகையில் இந்தியாவில் பெரு ம்பான்மை யான‌ மக்கள் பேசும் மொழி, இந்தி . அப்படி யானால் இந்தி தானே தேசிய மொழி ” என்று பதில் சொல்லியிருக்கிறார் .

ஆனால் அறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியே பதில் அளித் தாராம் .” நீங்கள் சொல்வதுபோல பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணி கையை விட காக்கைகளின் எண்ணிக்கை தானே அதிகம். காக்கைகள் அதிகம் இருப்ப தால் நாம் அதை தேசியப்பறவயாக வைக்க வில்லையே ,மயிலை தானே வைத்து இரு க்கிறோம் ” என்றாராம். இந்த பதிலைக் கேட் டு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அனை வரும் அண்ணாவின் இந்த சாதுர்யமான பதிலை கேட்டு வியந்ததோடு அல்லாமல் அவர்களின் கரவொலி அடங்க‌ பல நிமிடங்கள் ஆனது! அண்ணா நாமம் வாழ்க! வாழ்க அவர்தம் தமிழ்தொண்டு!

Leave a Reply