Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிறவாத, இறவாத ஆத்மா நான் . . .

மானுடா, நீ தூய்மையே வடிவெடுத்தவன், பரிபூரணத் தன்மை உன்னி டத்திலிருக்கிறது.  பாம் என்பது ஒருநாளும் உனக்குச் சொந் தமல்ல – இங்ஙனம் நமது நிஜசொரூபத்தை வேதாந்தம் நமக்கு ஞாபகப்படுத் துகின்றது.

மானுட வர்க்கத்தின் வரலாற்றைத் துருவி ஆராய்ந்து பார்த்தால் பேருண் மையன்று புல ப்படும். அதாவது அரும் பெரும் காரியங்களைச் செய்து சாதித்த ஆடவர் மக ளிர்களுக்குத் தன்னம்பிக் கையினின்று அவர்கள் பெற்ற ஊக்கத் தையும் உறுதியையும் வேறு எதனிடத் திருந்தும் பெறவில்லை.  மேலோர் ஆகப் போகிறோம் என்ற திட நம்பிக்கை யுடன் கூடி அவர்கள் பிறப்பெடுத்தார்க ள்.  ஆக வே அவர்கள் மேலோர் ஆயினர்.

தன்னம்பிக்கையுடையவன் உயர்ந்தவன் ஆகிறான்.  தன்னம்பிக்கையி ல்லாதவன்  தா ழ்ந்தவன் ஆகிறான்.  தன்னம்பிக்கையினின்று நமக்கு எல்லாம் கைகூடும்.  நமது சொந்த வாழ்க்கையிலேயே இவ்வனுபவத் தை நாம் காண லாம்.  ஒரு சிறிதளவாவது அனுபவம் நம க்கு வந்து விட்டால் பிறகு தன்னம்பிக் கையானது இன்னும் பன்மடங்கு ஆழ்ந்து நம்மிடத்துத் தலை யெடுக்கும்.

தன்னம்பிக்கையில்லாதவனே நாஸ்திக ன். ஈசுவர நம்பிக்கையில்லாத வன் நாஸ்திகன் என்ற கோட்பாடு வழக்கத்தில் வந்துள்ளது.  அதே கோ ட்பாட்டைப் புதிய பாங்கில் பகருவோமானால் தன்னம்பிக் கையில் லாதவன் நாஸ்திகன் ஆகிறான்.  தன்னம்பிக்கை என்பதன் தத்துவத்தை நாம் உள்ளபடி அறிந்து கொள்ளுதல் வேண்டும்.  சுய நல த்துக்கோ, ஆணவத்துக்கோ, அகங்காரத்துக் கோ இங்கு இடமில்லை.  ஏனென்றா ல் உள்ளது ஒரு பொருளே என்னும் அகண்டா கார விருத்தியில் நான் எனது என்னும் வேற்றுமைகளெ ல்லாம் ஒடுங்கிவிடுகின்றன.  நான், நீ என்ற வேற்றுமை வேதாந்திக்கு இல் லை.  தான் ஆக வடிவெடுத்திருப்ப தும், மற்ற உயிர்களாக வடிவெடுத்தி ருப்ப தும் ஒரே பரம்பொருள்.

எனது யதார்த்த சொரூபத்தை நான் சம்பூரணமாக அறிந்து கொண்டேன், என்று உண்மையை உணர்ந்து ஓதுப வனே மாந்தருள் மிக மேலோன் ஆகி றான்.

அடிப்படையில் உன்னிடத்து அட ங்கியிருக்கும் பேராற்றல்கள் எத் தகையவை என்பதை நீ அறிகி றாயா?  உன்னிடத்துள்ள மகிமை களுள் நீ அறிந்து கொண்டது மிக ச்சிறியது.  கரை காணாத கடல் போன்ற ஆற்றலும் அருளும் உ னக்கு ஆதாரமாக அமைந்துள்ள ன.

நீ ஆத்மா என்னும் விஷயத்தை அல்லும் பகலும் கேள்.  நீ கேட்டறிந்த இவ்விஷயத்தை அல்லும் பகலு ம் மனனம் செய்.  உன்னுடைய நாடி நரம்புகளிலே இவ்வெண்ணம் பிர வேசிக்கட்டும்.  ஒவ்வொரு ரத்தத்துளியிலு ம் இவ்வெண்ணம் ஊறியிருக்கட்டும்.  உன் னுடைய தசையிலே, எலும்பிலே, மஜ்ஜை யிலே நீ ஆத்மா என்னும் எண்ணம் பதிந்து கிடக்கட்டும்.  உயர்ந்த அந்த ஒரு லட்சி யமே உடலெங்கும் வியாபித்திருக்க ட்டும்.

பிறவாத, இறவாத ஆத்மா நான். நான் ஆன ந்த சொரூபி.  நான் சர்வக்ஞன்.  நான் சர்வ சக்திமான்.  நித்திய ஜோதிர்மயமான ஆத்மா நான்.  பகலிலும் ராத்திரியிலும் இக்கருத் தைச் சிந்தையில் வை.  உனது ஜீவிதமே அந்த ஆத்ம சொரூபமாக வடிவெடுக்கும் வரையில் நீ அதை எண்ணிய வண்ணமாயி ரு.  ஆத்ம சொரூபத்தைப்பற்றியே தியானம் பண்ணு.  வினையாற்றும் வல்லமை உனக்கு அதினின்று உதிப்பதாகு ம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply