Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணைவியின் வாசத்தை நுகர்ந்தே நீங்கள் அவர்களுடன் கலவியில் ஈடுபடலாம். – ஆய்வில் புது தகவல்

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் பருவத்தில் ஒருவித வாசனை 
எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண் டறியப்பட்டுள்ளது. இந்த வாசனை யை உணர்ந்து அந்நேரத்தில் இணை வதால் எளிதில் கருதரிக்கலாம் என்ப தற்காகவே இயற்கையான ஒரு வாச னை பெண்ணின் உடலில் எழுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர்.
ஆய்விற்காக அவர்கள் 52 இளம் தம்ப தியினரைத் தேர்ந்தெடுத்தார்கள். மனைவியருக்கு கருமுட்டை உற்பத் தியாகும் காலத்தில் தொ டர்ச்சி யாக மூன்று நாட்களுக்கு நைட்டியை அணி யச்செய்தார்கள். பெண்கள் உடலில் வாசனை திரவியங்கள் பூசுவது, வேறு வித நறுமண உணவுகள் உண்பது, கரு த்தடை சாதனங்கள், உடலுறவு அனைத்தும் தடை செய்யப்பட்டன.
மனைவியரின் உடைகளில் வரும் வாசத்தை கண்காணிக்குமாறு கண வன்களுக்குச் சொல்லப்பட்டது. மற்ற காலங்களைவிட கருமுட்டை உருவா கும் காலத்தில் பெண்களின் உடைக ளில் விரும்பத் தகுந்த வாசனை வரு வதாக கணவன்கள் தெரிவித்தார்கள். இதன்மூலம் குறிப்பிட் ட காலத்தில் பெண்களின் உடலில் இயற்கையாக வாசனை வருவதை கண்டு பிடித் திருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களின் கருமுட்டை முதிரும் காலத்தி ல் இந்த வாசனை வருவது தெரிய வந்தது. உடனே அந்தப் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அந்த நாட் களில் உடலில் ஹார்மோன் மாற்றங்க ள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட் டது.
பெண்களின் உடை வாசனையை வை த்து எந்த நேரத்தில் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் கருத்தரிக்கலா ம் என்பதை கணவன்கள் தெரிந்து கொள் ளலாம் என்றும் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாசனையை வைத்து பெண்ணுடன் இணையாமல் கருத்தடை சாதனமாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஆய்வாள ர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: