Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘தெலங்கானா – வேண்டும்’, ‘வேண்டாம்’ – பற்றி எறியும் ஆந்திரா

தெலங்கானா – அலறும் ஆந்திரா

சமைக்கியாந்திரா… ஜெய் சமைக்கி யாந்திரா’ என்ற கோஷங்களால் அதிர்ந்து கிடக்கிறது தெலுங்கு தேச ம். எல்லாவற்றிலும் காரம் கூடுத லாகச் சேர்க்கும் ஆந்திர வாசிகள் போராட்டத்திலும் அந்தக் காரம் இன்னும் தூக்கல்! ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது’ என்று தெருவில் இறங்கியுள்ள மக்களின் போராட்ட ங்களால், காவல் துறையின் கண்ணீ ர்புகைக் குண்டுகளால், தடியடி, கல்வீச்சு, தீ வைப்புச் சம்பவங்களால் பெரும் ரணகளமாக மாறி இருக்கிறது ஆந்திரா. ‘தெலங்கானா’ எனனி மாநிலம் அமைக்க வேண்டு ம்’ என்று இன்னொரு பகுதியினர் போரா டிய போதும் இப்படித்தான் இருந்தது. ‘வேண்டும்’, ‘வேண்டாம்’ என்று ஆந்திரா மாநிலமே இரண்டு பட்டுக் கிடக்கிறது.1969-ம் ஆண்டில்தான் தெலங்கானா கோரிக்கை எழுந்தது. அந்த ஆண்டு நடந்த போராட்டத் தில் மட் டும் மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 370 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்க ள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.2006-ம் ஆ ண்டு உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் தெலங்கா னா போராட்டத் தை தீவிர மாக முன்னெடுக்கத் தொடங்கியதும் ஆந்திரா அலறத்தொடங்கியது. போராட்டத்தின் தீவிரம் உணர் ந்த மத்திய அரசு, தனித் தெலங் கானாவை அமைக்கும் முடிவு க்கு வந்திருக்கிறது. இப்போது ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று தெலங்கானா தவிர்த்த மற்ற பகுதி மக்கள் போ ராடுகின்றனர். ‘ஹைத ராபாத் நம்மிடம் இருந்து பறி க்கப்பட்டுவிடுமோ ?’ என்ற பதற்றம் பரவி க்கிடக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு பறி போய் விடும் என்ற பதற்றத்தி ல் மாணவர்களும், தங்களின் தொழில் முதலீடுகளுக்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் முதலாளிகளும் கொந்தளிக்கிறார்கள்.

எரியும் நெருப்பில் பெட்ரோல் குண்டு போட்ட கதையாக ‘தெலங்கானா அமைந்ததும் ஆந்திராவில் இருந் து வந்து பணிபுரியும் அரசு ஊழிய ர்கள், தெலங்கானாவை விட்டு காலிசெய்துவிட வேண்டு ம்!’என்று தெலங்கானா ராஷ்டி ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அறிக்கை ஒன்றைவெளியி ட, அரசு ஊழியர்களும் பொங்கி விட்டார்கள். அவர்களுக்கு ஆத ரவாக மின் வாரிய ஊழியர்கள், ‘பவர்கட்’ போராட்டத்தில் ஈடுபட ஐந்து நாட்களாக இருளில் மூழ்கிக்கிடந்தது ஆந்திரா. மருத்துவமனை கள், மின்சார ரயில்… என எதுவும் இயங்கவில்லை .விஜயன் நகரம் தான் ஒன்றுபட்ட ஆந்திராவு க்காக தீவிரமான போராட்டத் தை முன்னெடுத்தது. அந்தப் பகுதி முழுவதும், சுமார் ஐந்து நாட்கள் 144 தடை உத்தரவின் கீழ் இருந்தது. அந்தப்பகுதி யில் உள்ள ஆந்திர காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவரு ம், விஜயன் நகர எம்.எல்.ஏ-வுமான ‘போட்சா சத்திய நாராயணா’வின் வீடு மற்றும் கல்லூரிகள் தாக்கப்ப ட்டன. ஒரு வங்கியும், சீக்கியர்களின் குருத்துவாராவும் எரி க்கப்பட்டன. இறுதியில் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார்ரெட்டி நடத்திய பேச்சு வார்த்தையை அடு த்து, தற்போது நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்குத்  திரு ம்பியுள்ளனர். ஆனால், போராட் டங்கள் ஓயவில்லை.

தெலங்கானா முன்கதைச் சுருக் கம்

இந்தியாவை வெள்ளையர்கள் நேரடியாக ஆட்சி செய்ததுபோல், ஹை தராபாத்தை ஆட்சி செய்யவி ல்லை. ஹைதராபாத் சமஸ்தானம், நிஜாம் மன்னர்களின் நேரடி நிர்வா கத்தில்தான் இருந்தது. நிஜாம் மன்ன ர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹைதராபாத்தும் அதையட் டிய ரங்கா ரெட்டி, வாரங்கால், மகபூப் நகர், கம்மம், அதிலா பாத், கரீம் நகர், நல்கொ ட்டா, மெதக் பகுதிகள்தான் தெலங் கானா. இந்தப் பகுதிகளைத் தவிர்த்து, தெலுங்கு பேசும் மக்கள் உள்ள மற்ற பகுதிதான் ஆந்திரா. இது, வெள்ளையர் களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், ஆந்திர மக்கள் கல் வி, தொழில், கட்டமைப்பு, மொழி, பண்பாடு போன்றவற்றில் முன்னேற் றம் கண்டனர். ஆனால், 500 ஆண்டுகளாக நிஜாம்களின் கட் டுப்பாட்டில் அடக்குமுறை ஆட்சியில் இருந்த தெலங்கா னா மக்களுக்கு, அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

இதனால், நிஜாம் மன்னர்களு க்கு எதிராக தெலுங்கானா மக்க ள் போ ராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக, நிஜாம் மன் னரும் அவருடைய ராசாக்கர் படைகளும் கதிகலங்கிப்போனார்கள். அந் நேரத்தில், சமஸ்தானங்களை  ஒருங்கி ணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேருவும் வல்லபாய் படேலும், படைகளை அனுப்பி ஹைதராபாத்தை இந்தியாவு டன் இணைத்துக்கொண்டனர். அப்படி இணைக் கப்பட்ட மாநிலம்தான் ‘ஹை தராபாத்’. 1956-ம் ஆண்டு வரை ஹைத ராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலங்கானா தனி மாநிலமாகவும், கர்னூலைத் தலைநகராகக்கொண்டு ஆந்திரா தனி மாநிலமாகவும்தான் இருந்தன. ‘தெலுங்கு மொழிபேசும் பகு திகள் அனைத்தையும் ஒன்றி ணைத்து ‘ஆந்திரா’ என்ற ஒரே மாநிலமாக உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக் கை தெலுங்கு மக்களிடம் பரவலாக எழுந்தது. அதனுடன், சென்னை யை இணைக்கக் கோரிபொ ட்டி ஸ்ரீராமுலு என்பவர் உண்ணா விரதம் இருந்து. உயிரைவிட்டார். ‘ஒரே மொ ழி பேசும் மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் தேவையற்றது’ என்று கூறி, தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்ப ட்டு ஒரே மாநிலமாக ஆனது. ‘ஒரே மொழி பேசும் ஒரே மாநில மக்கள்’ என்ற அடையாளத்துடன் ஆந்திர மக்கள் அறியப்பட்டாலும், உள்ளுக்குள் பிளவு இருந்து கொண் டேதான் இருந்தது.

முல்க்கி என்றால் என்ன?

முல்க்கி’ என்பது உருதுச் சொல். இந்தச் சொல்லுக்கான அர்த்தம், உள் ளூர்வாசி. தமி ழகத்தில் ஜாதி அடிப்படையி ல் இடஒதுக்கீடு வழங்கப்படு வதுபோல், அங்கு உள்ளூர்வாசி (தெலங்கானாவாசி) வெளியூர்வாசி (ஆ ந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) என்ற அடிப்படையில் இடஒதுக் கீடு வழங்கப்படுகிறது. அதுதான் முல்க்கி சட்டம். நிஜாம் மன்னர்கள் காலத் தில் பழக்கத்தில் இருந்த இந்தச் சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் ‘முல்க்கி’க்குத் தான் முதல் இட ம். ஒருவர் முல் க்கி அந்தஸ்தை ப் பெற, உள்ளூரில் (ஹைதரா பாத்தில்) 15 வருடங்கள் வசித்தி ருக்க வேண்டும் என்று இருந்த து. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முல்க்கி சட்டம் தெலங்கானாவி ல் இல்லை. ஆனால், தெலங்கா னாவும் ஆந்திராவும் இணைந்து ஒரே மாநிலமாக உருவான போது, தெலங்கானா மக்கள் ‘முல்க்கி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டு ம்’ என்று கேட்டனர். அதன்படி தெலங் கானாவுக்கு முல்க்கி சட்டம் கொண்டு வரப் பட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்க ளுக்கு முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், அவர்கள் ‘முல்க்கிக்கான காலக்கெடு வை குறைத்து ஏழு ஆண்டுகள் ஆக்கி னர். தற்போது அதை நான்கு ஆண்டுக ளாகக் குறைக்கும் முயற்சி நடக்கிற து. இதைப் பயன்படுத்தி, ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்தில் குடியேறுப வர்கள், ஏழு ஆண்டுகளில் முல்க்கி அந்தஸ்தை பெற்று, வேலைவாய்ப் புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பறித்துக்கொள்கின்றனர் என்பது தெலங்கானா பகுதி மக்களின் குற்றச்சாட்டு. அதை நிரூபிப்பது போல், 45 ஆயிரம் முல்க்கிப் பணி யிடங்களை ஆந்திர மாநிலத்தவர் ஆக்கிரமி த்து இருந்தனர். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக் குத் தொடரப்பட்டது, மேல்முறை யீடு வரை சென்று போராட வேண் டி இருந்தது. வழக்கில் வெற்றி கிடைத்தாலும், இந்த ஆக்கிரமிப்பு ஓயவில் லை.

கவனிக்கப்படாத ஜென்டில்மேன்

1956-ம் ஆண்டு ஒன்றுபட்ட ஆந்திரா உருவானபோது, ஆந்தி ர முதல மைச்சர் கோபால் ரெட் டியும், தெலங்கானா முதலமைச் சர் ராமகிருஷ்ண ராவும் உடன்ப டிக்கை ஒன்றை செய்துகொண்ட னர். இதை ஜென்டில் மேன் அக்ரி மென்ட் என்று கூறுகின்றனர். இதன்படி, தெலுங்கானாப்பகுதிக ளின் முன்னேற்றங்களைக் கண் காணிக்க மண்டல நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்துவது. அந்நிலைக்குழுவின் உறுப்பினர்களாக தெலங் கானா சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவின் பரிந் துரைகளை அரசு ஏற்று நடவடிக் கை எடுக்க வேண்டும். முல்க்கி சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படு த்தப்படுகிறதா என்பதைக் கண்கா ணிக்க வேண்டும். மாநிலத்தின் மொத்த வரவு செலவுகளை மக்கள் தொகை அடிப்படையில் இரு பகுதி களும் பிரித்துக் கொள்ள வேண்டு ம். ஒரு பகுதியைச் சேர்ந்தவர் முத லமைச்சராக இருந்தால், மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர் துணை முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 சாரங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டன. ஆனால் 1956 -க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக இந்த நிலைக்குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டது. அத ன் பரிந்துரைகள் எதுவும் நிறை வேற்றப்படவில் லை.

கதாநாயகன் வில்லன்

தெலங்கானா குறித்தும் தெலங்கானா மக்கள் குறித்தும் ஆந்திர மக்களுக்கு எப்போதும் சில கருத்துகள் உள்ளன. சாதாரண பொதுஜனத்தி ல் இருந்து இந்தக் கருத்துருவாக்கம், அரசியல், சினிமா, அன்றாட வாழ்க்கைமுறை வரை அனைத்திலும் நீடிக்கிறது. தெலங்கானாக்காரர் கள் பேசுவது தெலுங்கு மொழியே கிடையாது. தெலங்கானாக்காரர்கள் சோம்பேறிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் என்பது போ ன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகள். தெலுங்குத் திரைப்படங்களை சற்று கவ னித்தாலே இந்தச் சித்திரிப்புகள் தெளிவாக விளங்கும். தெலுங்குப் படங்களில் கதாநா யகனாக இருப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த வராகவும்,  வில்லன்கள் குற் றவாளிகள் தெலங்கானாப் பகுதி ஆட்களா கவும் காண்பிக்கப்படுவர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍1

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: