Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

MS-Word & Excel-இல் Task Pane ஏன்? எதற்கு? எப்படி?

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத் துபவராக இருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள். ஆபீஸ் புரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமா க எழுந்து வரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன் றை நீங்கள் உருவாக்கத் தொடங்கியவுட னேயே அது மறைந்துவிடுவதனை யும் பார்க்கலாம். இதனால் நாமும் டாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகு மெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும் திருப்புகிறோம். இத னால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து பயன்களையும் இழக்கி றோம். (ஒரு சிலர் எழுந்து வரும் டாஸ்க் பேன் எதற்கும் பயனில்லை என்று கருதி புரோகிராம்களை இயக்குகை யில் அது வரக்கூடாத வகையில் ஆப்ஷன்ஸ் விண்டோவில் இது வராதவாறு அமைத்துவிடுகின்ற னர்) குறிப்பாக டாஸ்க் பேன் நமக் கு டாகுமெண்ட் பார்மட்டில் அதிக ம் பயன் களைத் தரும்.

மேலும் ஆன்லைன் ரிசர்ச் மேற் கொள்ள வழி வகுக்கும். ஆபீஸ் 2007 வந்தபோது ரிப்பன் வழி இயக்கத்திற்காக இந்த டாஸ்க் பேன் நிறுத் த ப்பட்டது. ஆனால் இன்னும் பலர் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது 2003 பயன் படுத்திக் கொண்டுதான் உள்ளனர். நீங் கள் அவர்களில் ஒருவர் எனில் மேலு ம் படியுங்கள்.

பலர் டாஸ்க் பேன் இருப்பதை அல்ல து எழுந்து வருவதனை அறியாம ல் இருப்பதற்குக் காரணம் இதன் பெயர் டாஸ்க் பேன் என இல்லாததும் ஆகும். இதற்குப் பெயர் Getting Started என்பதே. ஆனால் Getting Started என்பது பல டாஸ்க் பேன்களில் ஒன்றாகும். இந்த லேபிளின் அருகே உள்ள கீழ் நோக்கியுள்ள அம்புக்குறியில் கிளிக் செய் தால் மேலும் உள்ள டாஸ்க் பேன்கள் காட் டப்படும். ஒருவேளை உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக் கத் தொடங்குகையில் டாஸ்க் பேன் கிடை க்கவில்லை என்றால் அதனைப் பல வழி களில் பெறலாம். வியூ மெனு சென்றால் அதில் Task Pane என்பதைக் கிளிக் செய்து தேர் ந்தெடுக்கலா ம். அல்லது கண்ட்ரோல் + எப்1 கிளிக் செய்தால் டாஸ்க் பேன் கிடைக் கும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால் அது மறையும். நிரந்தரமாக இதனை இயங்க வைக்க Tools இயக்கி அதில் Options தேர்ந்தெடுக்க வே ண்டும். பின்னர் கிடைக் கும் பல டேப்கள் அடங்கிய பாக்ஸி ல் வியூ டேப்பினை அழுத்தினால் கிடைக்கும் கட்டத்தில் Show என்ப தன் கீழ் முதலாவதாக இந்த டாஸ்க் பேன் குறித்த தகவல் இருக்கும். அதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் செய்தால் அடுத்து ஆபீஸ் புரோகிராம் எதனை (Word, Access, Excel, Power point, Publihser மற்றும் Frontpage) இயக்கினாலும் அதில் டாஸ்க் பேன் எழுந்து வரும்.

எந்த ஆபீஸ் புரோகிராம் இயக்கப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் டாஸ்க் பேன் அம்சங்கள் கிடைக்கும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப் பில் Styles and Formatting என்ற டாஸ்க் பேன் கிடைக்கும். இது எக்ஸெல் தொகுப்பில் கிடைக்காது. எக்ஸெல் தொகுப்பில் உள்ள டாஸ்க் பேனில் XML Source ஆப்ஷன் தரப்ப டுகிறது.

நாம் அடிக்கடி சந்திப்பது Getting Started என் ற டாஸ்க்பேன் தான். ஆபீஸ் அப்ளிகேஷன் தொகுப்பில் எந்த புரோகிராம் இயக்கினாலு ம் இதுவே கிடைக்கும். அண்மையில் பய ன்படுத்திய டாகுமெண்ட்களின் பட்டியல் இதில் தரப்படும். அதில் தேவையானதைக் கிளிக் செய்து அந்த டாகுமெ ண்ட்டைத் திற க்கலாம். இதிலிருந்தவாறே மைக்ரோசாப் ட் நிறுவனத்தி ன் ஆபீஸ் ஆன்லைன் தளத்தைப் பெறலாம். இதில் ஒரு சர்ச் பாக்ஸும் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் கேள்விக ளுக்குப் பதில் பெறலாம்.

அடுத்ததாக இதில் இடம் பெற்றிருப் பது நியூ டாகுமெண்ட் பேனல். இதி ல் கிளிக் செய்து நீங்கள் புதிய டாகு மெண்ட் ஒன்றைத் தொடங்கலாம். பைல் உருவாக்குவதற்கும் பல ஆப் ஷன்ஸ் கிடைக்கும். வேர்டில் காலி யான டாகுமெண்ட் ஒன்றைத் தொ டங்கவா என்று கேட்கப்படும். எக் ஸெல் எனில் ரெடியாக ஆன்லைனி ல் கிடைக்கும் டெம்ப்ளேட் ஒன்றை ப் பெறவா என்று கேட்கப்படும்.

ஹெல்ப் டாஸ்க் பேனிலும் இதே போல உதவிகள் கிடைக்கும். எப் 1 அழுத்தினால் இந்த டாஸ்க்பேன் நமக்குக் கிடைக்கும். ஆபீஸ் தொகுப்பு இயக்கத்தி ல் ஏதேனும் ஒரு பொருள் குறித்து இதில் தரப்பட்டுள்ள சிறிய செவ்வகக் கட்டத் தில் டைப் செய்து என்டர் செய்தாலோ அல்லது பச் சையாக வலது பக்கம் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தாலோ உட னே அந்த பொருள் குறித்த விளக்கங்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும். இதிலிரு ந்து நமக்கு வேண்டிய விளக்கங்களைக் கிளிக் செய்து பெற லாம்.

இந்த டாஸ்க் பேனை எந்த இடத்திலும் நிறுத்தி வைக்கலாம். அல்லது மிதக்கும் காலமாகவும் அமைத்திடலாம். டாஸ்க் பேனின் தலைப்பின் முன் பார்த்தால் நான்கு புள்ளிகள் தெரியும். இதன் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்ற வுடன் அது ஸ்வஸ்திக் சின்னம் போல மாறு ம். அப்படி யே மவுஸ் கிளிக்கால் அதனைப் பிடித்தவாறே இழுக்கவும். இழுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் விடவும். இதனை மற்ற டாகுமெண்ட்க ளை குளோஸ் செய்வது போல மேல் வலது மூலையில் உள்ள கிராஸ் அடையாளத்தில் கிளிக் செய்து மூடலாம்.

மேலே கொடுத்த டாஸ்க்பேன் பயன்பாடுகள் ஒரு சில மட்டுமே. இன்னு ம் அதிகமாக நம க்கு உதவிடும் ஒரு டாஸ்க் பேன் ஆபீஸ் தொ குப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திலும் கிடைக்கும் ஆபீஸ் கிளிப் போர்டு (Office Clip board) ஆகும். இதில் தான் நாம் காப்பி செய்தி டும் அனைத்தும் நாம் பயன்படுத்துவதற்காகத் தங்கவைக்கப்படுகின்ற ன. இது விண் டோஸ் கிளிப் போர்டின் ஒரு எக்ஸ்டன்ஷன் ஆகும்.

இதில் காப்பி செய்யப்படும் 24 ஆப்ஜெக்ட் கள் (டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டே பிள், படம் முதலியன) பதியப்படுகின்றன. இறுதியா கக் காப்பி செய்யப்பட்ட ஆப்ஜெக்ட் மே லாகக் காட்டப்படும். 25 ஆவது ஐட்டம் காப்பி செய்ய ப்படுகையில் முதலாவதா கக் காப்பி செய்யப்பட்ட ஐட்டம் நீக்கப்ப டும்.

இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் காட்டப்படுகையில் என்ன என்ன ஐட் டங்கள் காப்பி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளன என்று தெரிய வரும். இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் திரையில் தோன்ற கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு சி கீயை இருமுறை தட்டினால் போதும். அதில் காப்பி செய் யப்பட்டுள்ள ஐட்டங்களிலிருந்து நீங்க ள் தேவையா னதைத் தேர்ந்தெடுத்து விரும்பும் பைலில் தேவைப்படும் இடத் தில் பேஸ் ட் செய்திடலாம்.

அடுத்ததாக பயன்தரும் டாஸ்க் பேன்க ளாக இரண்டைக் குறிப்பிடலாம். அவை: Styles and Formatting மற்றும் Reveal Formatting. இவற்றை டாஸ் க்பேன் மெனுவிலிருந்து பெறலாம். முதலில்உள்ள டாஸ்க் பேன் மூலம் ஒரு டாகுமெண்ட்டின் தோற்றத் தை டெக்ஸ்ட் முழுவதும் மாற் றி அமைக்கலாம்.

இந்த டாஸ்க் பேனைத் திறந்தால் ஒரு டெக் ஸ்ட் டாகுமெண்ட்டில் பய ன்படுத்தப்பட்ட அனைத்து ஸ்டைல் மற்றும் பார்மட்டிங் பட்டி யலிடப் பட்டிருக்கும்.

ஏதாவது ஒரு என்ட்ரியில் மவுஸின் கர்ச ரைக் கொண்டு சென்று அங்கு கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் மெனு மேலெழுந்து வரும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் டெலீட் பட்டனை அழுத்தினா ல் அந்த குறிப்பிட்ட ஸ்டைல் டாகுமெண்ட்டில் எ ங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கெல் லாம் நீக்கப்படும். Modify அழுத்தி அந்த ஸ்டை லை டாகுமெ ண்ட் முழுவதும் மாற்றலாம்.

Reveal Formatting டாஸ்க் பேன் தேர்ந்தெடுக்கப்ப ட்ட டெக்ஸ்ட் குறித்து இன்னும் கூடுதல் விளக்க ங்களை அளிக்கும். மேலும் சில பயனுள்ள பார்ம ட்டிங் வசதிகளைப் பயன்படுத்த லிங்க்குகளையும் காட்டும். அலைன்மென்ட், பாண்ட் மாற்றம், பாரா இடைவெளி போன்ற விஷயங்களை இதன் மூல ம் மேற்கொள்ளலாம்.

மேலே விளக்கப்பட்டுள்ள டாஸ்க் பேன்களைப் போலவே கிளிப் ஆர்ட் போன்ற இன்னும் பயனுள்ளவை நிறைய உள்ளன. இவற்றைப் பயன் படுத்தும் வழி தெரிந்து பயன்படுத்தி னால் நாம் அமைக்கும் டாகுமெண்ட்க ள் சிறப்பாக இருப்பதுடன் நேரமும் மிச் சமாகும்.

ஆபீஸ் ஆன்லைன் என்பது என்ன?

Getting Started டாஸ்க் பேனில் ‘Connect to MIcrosoft Office Online’ என்று ஒரு லிங்க் இருக்கும். இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் இதில் கிளிக் செய்தால் உடனே உங்கள் பிரவுசர் இயக்கப்பட்டு மைக்ரோசாப்ட் உத வி தளம் கிடைக்கும். இந்த தளம் எதற்கு? என்று எண்ணுகிறீர்களா? இதி ல் எம்.எஸ். ஆபீஸ் குறித்து சாதாரண தகவல் முதல் ஆபீஸ் புரோ கிரா ம்கள் குறித்த ஆழமான டுடோரியல்ஸ் வரை கிடைக்கும். இதில் பொது வான டிப்ஸ் முதல் சிக்கலான தொழில் நுட்பம் குறி த்த தகவல் வரை பெறலாம். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் மெயில் மெர்ஜ் செயல்பாட்டினை எப்படி மேற் கொள்வது? என்று படிப்படியான தகவல் வேண்டுமா? இந்த தளத்தில் கிடைக்கு ம். அதே போல அனைத்து பிற புரோகி ராம்களுக்கும் அவற்றின் செயல்பாடு கள் குறித்த உதவிடும் குறிப்புகள் கிடை க்கும். தகவல்கள் மட்டுமின்றி ஆபீஸ் தொகுப்பிற்கான பல விஷயங் களை இதில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். எடுத்து க்காட்டாக பல டெம்ப்ளேட்டுகளை டவுண்லோட்செய்திடலாம். ஒருசிலவையே கட்ட ணம் செலுத்திப்பெறும்வகையில் அமைந்திருக்கும். மற்றவை அனை த்தும் இலவசமே.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: