Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிக நேரம் விழித்திருக்கும் ஆண்களுக்கான ஒர் அபாயத்தின் உச்ச‍ எச்ச‍ரிக்கை

அதிக நேரம் விழித்திருக்கும் ஆண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார் மோன் குறிப்பிட்ட அளவு இருந்தால் தான் பாலியல் உணர்வு தூண்டப்படு ம். அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன் அளவை டெஸ்ட்டாஸ் ட்டுரோன் என்று அழைக்கிறார்கள். இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவு க்கும், சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற் றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்கு மிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த டெஸ்ட்டாஸ் ட்டுரோன் முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழு வில் இடம்பெற்ற ஈவ்வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரி வித்துள்ளார். ஈவ்வான் உள் ளிட்ட சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் மேற் கொண்ட ஆய்வி ல்தான் இந்த விவரம் தெரிய வந்துள் ளது. அந்த பல்கலைக் கழக வளாகத் தில் இருந்த 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சராசரியாக 24 வயது கொண்ட இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல்பரிசோ தனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வ ரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின் னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற் கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப் பட்டனர். ஆய்வின் ஒவ்வொரு நாளின் போதும்,24 மணி நேரத்திற்கும் ஒவ்வொ ரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்க ளது ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத் தபட்டது. இதில் குறைவாக தூங்கிய தற்கு பிற்கு இவர்களது டெஸ்ட்டா ஸ்ட்டு ரோன் அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாக சொல்லும் ஈவாவான், உடல் மற்றும் மனம் சுறு சுறுப்பு குறைவதற்கும், டெஸ் டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு இருப்பதால், தூ க்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கு ம் என்று அடித்துக்கூறு கிறார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: