Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்ப‍மாக இருக்கும் பெண்களின் கணவன்மார்களே! உங்களுக்கான பதிவு இது

க‌ணவன்மாரே! கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் மனைவி யை, நீங்கள் கவனமுடன் கையாள வேண்டும். பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி போன்றவை பெ ண்ணுக்குள் ஒரு வித கிளர்ச்சியை ஏற் படுத்தும். அதே போல் பெண்மையின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்ப டுத்தும் என வே அந்நேரத்தில் தாம்ப த்ய உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந் தையின் நலனில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தைக்குத்தான் முதலி ல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக கலந்து பேசி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராக வேண்டு ம். வயிற்றில் குழந்தை இருப்பதால் குழந்தை க்கு எந்த பாதிப்பு ம் ஏற்படாத வகையில் உறவில் ஈடுபடுங் கள் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பகாலத்தில் மூன்று பருவநிலைகளில் முதல், இறுதி நிலைகளில் உறவில் ஈடுப டுவது சரியானதல்ல என்கின்றனர் நிபுணர் கள். முதல் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சி குறைவான அளவே இருக்கும். வாந்தி, தலைச்சுற்றல் போன்றவைகளினால் பெண்கள் அதி க சோர் வோடு காணப்படுவார்கள். எனவே அப் பொழுது உறவில் ஈடுடுவது பாதுகாப்பற் றது என்கின்றனர் மருத்துவர் கள்.

அதேபோல் மூன்றாவது பருவத்தில் பிரவசத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு முது குவலி, கால்வலி போன்றவை ஏற்படும் அந்த சமய த்தில் உறவில் ஈடுபடுவதும் குழந்தைக்குப் பாதுகாப்பானதல்ல என்கி ன்றனர். நான்கு முதல் 7 மாதம் வரையில் பாதுகாப்பான முறையில் உற வில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்து வர்கள்.

கர்ப்பகாலத்தில் சிரமமான பொஸிசன்களை தவிர்க்கவும். எளிதான வலி ஏற்படாத பொ ஸிசன்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண் டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான அர வணைப்பும், முத்தங்களும் கூட சில சமயங் களில் கர்ப்பிணிப்பெண்ணுக்குப் போதுமான தாக இருக்கும் என்கின்றனர். எனவே சிரமம் தராத தொடுகையையும், கணவரின் அருகாமையையும் மட்டுமே எதிர் பார்க்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதுமாதிரி நேரங்களி ல் மனைவியை கவனமாய் கையாள வே ண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சில சமயங்களில் அசதியும் சோர்வு ம் அதிகமாக இரு க்கும். அப்பொழுது ஓய்வு நிலையில் இருக்கவேண்டும் என்று மருத்து வர்கள் அறிவுறுத்தி யிருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் கர்ப்பிணி மனைவியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: