Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த தீபாவளிக்கு நீங்க என்ன‍ செய்ய‍ப்போறீங்க?

ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான்? என்ற கேள்வியை படிக்கும் உங்கள் மனதில் என்ன‍டா இது முட்டாள் தனமா இருக்கே மனித இனத்தை சாராத ஏதோ ஒன்று மனிதன் ஆகிறது என்றால் அது பொருத்த‍மாக இருக்கும் ஆனால் இங்கே என்ன‍டா என்றால், ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான் என்று கேள்வியாக வந்துள்ள‍தே என்று நினைப்பீர்கள். முதலில் எனது கேள்விக்கான விளக்க‍த்தினை சொல்லி விடுகிறேன்.

ஒருவ‌ன், தான் மட்டும் உண்ண‍ வேண்டு ம் தான் மட்டுமே உடை உடுத்த‍வேண்டும் தான் மட்டுமே இந்த உலகில் ஆடம்பரமா க வாழ வேண்டும் என்று நினைத்தால் அவனை நீங்கள் மனிதன் என்று சொல்வீ ர்களா?

அல்ல‍து

ஒருவ‌ன், தானும் தனது மனைவி மக்க‍ ளும் மட்டுமே இந்த உலகத்தில் உள்ள‍ அனைத்து வசதிகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற பேராசையில் பெரும் பணம் ஈட்டி, அதை தானும் தனது குடும்பத்தாரும் மட்டுமே ஆடம்பரமான வாழ்க்கைத் தரத்தோடு வாழ்க் கையை அனுபவிப்பவனை மனிதன் என்று சொல்வீர் களா?

அல்ல‍து

ஒருவன், தனக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில், ஏழ்மையில் வாடுவோருக்கும் ஆதரவற்றோரு க்கும் பகிர்ந்தளித்து, தானும் வாழ்ந்து மற்ற‍வர் களையும் வாழ வைப்ப‍வனை மனிதன் என்று சொல்வீர்களா?

இப்போது சொல்லுங்கள்

இந்த மூன்றில் யாரை நீங்கள், மனிதன் என்று சொல்வீர்கள்

தனக்கு கிடைகும் சொற்ப பணத்தில் ஏழ்மையில் வாடுவோருக்கும் ஆதரவற்றோருக்கும் பகிர்ந்தளித்து, அதில் தானும் வாழ்ந்து மற்ற‍வர்க ளை வாழ வைப்ப‍வனைத்தானே நீங்க ள் மனிதன் என்று சொல்வீர்கள் அல்ல வா!

அத்தகைய மனிதனாக மாற நீங்கள் என்ன‍ செய்ய‍ப்போகிறீர்கள்.

ப‌ல்வேறு ஆதரவற்ற இல்ல‍ங்களுக்கும், முதியோர் இல்ல‍ங்களுக்கும், நோய்வாய்ப்ப‍ட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் நோயாளிகளிகளுக்குக மற் றும் பல்வேறு தொண்டு நிறுவனங்க ளும் அத்தகைய மகத்தான பணியை செய்து வருகின்றன• நம்மால் செய்ய‍ முடியாத ஒன்றை இந்த தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. சிறுதுளி பெருவெள்ள‍ம் என்ற பழ மொழிக்கேற்ப, நம்மால் முடிந்த ஒரு சிறு தொகையினை அந்தந்த பகுதி யைச்சேர்ந்த தொண்டு நிறுவனங்களு க்கு அளிக்க‍லாம் அல்ல‍வா? 

அத்த‍கைய சீரிய பணியை செவ்வ‍ன செய்துவரும் தொண்டு நிறுவன ங்களு க்குள் ஒன்றான ஸ்ரீ மாதா கேன்சர் கேர் தொண்டு நிறுவனத்திற்கு உங்களால் முடிந்த பண உதவியோ அல்ல‍து பொருள் உதவியோ செய்து அவர்களையும் உற்சாகத்தோடு இந்த தீபாவளி கொண்டாட உதவி செய்வீர்!

மேலும் ஒரு தகவல்

உரத்த‍ சிந்தனை – நல்லோர் வங்கியின் உறுப்பினர்களும் நண்பர்களும் ஸ்ரீ மாதா கேன்சர் கேர் காப்ப‍கத்திலுள்ள‍ நலிந்த புற்று நோயாளிகளுடன் இந்த ஆண்டு தீபா வளியை கொண்டாட உள்ள‍னர் அவர்களு டன் மனம் விட்டு கலந்துரையாடல் நிகழ்ச் சியும் ஏறபாடு செய்ய‍ப்பட்டுள்ள‍து. என்ப தை மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொ ள்கிறோம்.

உங்களால் இயன்ற அளவிற்கு பண உதவியோ அல்ல‍து பொருள் உதவியோ நீங்கள் கொடுக்க‍ நினைத்தால், உடனே கீழுள்ள‍ ஸ்ரீ மாதா கேன்சர் கேர் காப்ப‍கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உரத்த‍ சிந்தனை மற்றும் விதை2விருட்சம் இணையம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு

ஸ்ரீ மதா கேன்சர் கேர்

எண்.466, 3ஆவது அவென்யூ, இந்திரா நகர்,

சென்னை – 600 020
போன்- 24912308, 24413233

Leave a Reply