Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குற்றவுணர்ச்சி உங்களைக் கொன்று கொண்டிருக்கிறதா? அதிலிருந்து மீள்வது எப்ப‍டி?

வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் முக்கியமா கத் தோன்றுகிறது. அதற்கு முன் னுரிமை கொடுக்கும் போது, மற்ற வர்களால் ஏற்றுக்கொள்ள முடியா த செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒரு வரை க் கொலைசெய்யும் ஒருவன்கூட அக்கணத்தில் அது தான் சரியான செயல் என்று கருதுவதால்தான் அப்படிச் செய்கி றான்.

கோவிலுக்கு அழைத்துச் சென்று அப்பா மகனிடம் சொன்னார், ‘கடவுளி டம் பிரார்த்தனை செய்து, உனக்கு வேண்டியதைக் கேள், கொடுப்பார்’.

நம் அனுபவத்தில் உள்ளதை அடிப்படை யாகக் கொண்டு, ஏற்கனவே உள்ள ஞாபக ங்களைச் சற்று மிகைப்படுத்தினால், அது தான் கற்பனை.

‘நீங்கள் பிரார்த்தனை செய்து கேட்டால், அதையும் உங்களுக்குக் கொடு ப்பாரா அப்பா?’

‘ஆம் மகனே, நிச்சயமாக!’

மகன் இப்போது அப்பாவைச் சந்தேகத்துடன் பார்த்தான். ‘அதெப்படி அப் பா நடக்கும்? நம் இரண்டு பேரில் யார் பேச்சை அவர் கேட்பார்?’

உலகம் அப்படித்தான். ஒரு விஷயத்தை இருவர் ஒரேமாதிரி பார்ப்பது இல்லை. தவறு என்று மற்றவர்கள் கருதியது அந் தக் கணத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷம் கொடுத்திருகிற து. அதனால், அந்தச் செயலில் ஈடுபட்டீ ர்கள். எப்போது தவறு என்று மனதார உணர்ந்துவிட்டீர்களோ, அதை மறுபடி செய்யமாட்டீர்கள். ஆனால் நினைவுகள் சுமையாகத் தங்கி அவ திக்கு உள்ளாக்குகின்றன. நரகத்துக்குப் போய்விடுவோமோ, அல்லது வேறு ஏதா வது பாதிப்பு வந்துவிடுமோ என்று இப் போது பயம் வந்து விட்டது. இந்தப் பயம், குற்றவுணர்வு இதெல்லாம் மனதின் செயல்.

நமக்கு ஏற்கெனவே நடந்தது எல்லாம் ஞாபகங்களாகத் தங்கிவிடுகின் றன. அந்த ஞாபகங்கள்மீது கட்டப்படும் கற்பனைதா ன் எதிர்பார்ப்பாக, குற்ற உணர்வாக, அச்ச மாக எழுகிறது. கற்பனை என்று புதிதாக ஒன்றும் வரப்போவது இல் லை. நம் அனுபவத்தில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கன வே உள்ள ஞாபகங்களைச்சற்று மிகைப்படு த்தினால், அதுதான் கற்ப னை.

ஒரு சின்னப் பையன் தன் அம்மாவிடம் ஓடி வந்தா ன்.

‘அம்மா, நான் நீச்சலடிக்க ஆற்றுக்குப் போகட்டு மா?’

‘ஐயோ, அங்கே எல்லாம் போகாதே… ஆற்றில் பெரி ய பெரிய முதலைகள் இருக்கும். உன்னை இழுத்து ப் போய்விடும்’ என்றாள் அம்மா.

பையனுக்கு ஆச்சர்யம். ‘ஆனால் தினமும் அப்பா அங்கேபோய் நீச்சல் அடிக்கிறாரே..?’ என்றா ன் .

‘டேய்! உங்கப்பா பெரிய தொகைக்கு இன்சூர ன்ஸ் எடுத்திருக்கார். அவர் போகலாம்… நீ போகக் கூடாது!’

அந்த அம்மாவுக்கு கணவனைப் பற்றிய ஞா பகம், மகனைப் பற்றிய கற்பனை… இரண்டு ம் எப்படி இருக்கிறது பாருங்கள். நிறையப் பேர் என்னிடம் தங்கள் குழந்தையைக் கூட்டி வந்து நிறுத்துவார்கள். சத்குரு, இவனுக்கு ஞாபகசக்தி கம்மியாக இருக்கிறது. அதை அதிகப்படுத்திக் கொடுங்கள் என்பார்கள்.

‘பழசெல்லாம் ஞாபகம் இருப்பதால்தானே நீங்கள் இப்படிக் கஷ்டப்படு கிறீர்கள்? எல்லாம் மறந்துபோனால் நல்லதுதானே? நேற்று பள்ளி க்கூடத்தில் நடந்தது ஒன்றும் ஞாபகம் இல்லா மல் உங்கள் பையன் ஆனந்த மாகத்தான் இருக் கிறான்?’ என்று வேடிக்கையாகச் சொல்வேன்.

உங்கள் தாய், தந்தை, கணவன், மனைவி, குழந் தை, தொழில் எதுவானா லும், உங்களுடைய ஞாபகசக்தி காரணமாகத்தானே அடையாளம் காணமுடிகிறது? அதேபோல், உங்கள் சாதி, மத ம், அந்தஸ்து எல்லாமே ஞாபகப் பதிவுகள்தானே?

கடற்கரையில் சிலுசிலுவென்று காற் று வீசுகிறது. ஆனால், அதை அனு பவிக்காமல், பத்து நாட்களுக்கு முன் னால் நடந்த அசம்பாவிதம் பற் றியே புத்தி சிந்தனை செய்கிறது.

ஞாபக சக்தியும், கற்பனையும் கூடாது என்றுசொல்லவில்லை. ஆனால் அவை மனதின் மிக அடிநிலையில் உள்ள சக்தி. அந்த நிலையிலே யே மனதைப் பயன்படுத்தினால், இறந்தகாலம் என்பது நம் வாழ்க்கை யின் நிகழ்காலமாகிவிடும்.

கடற்கரையில் சிலுசிலுவென்று காற்று வீசுகிறது. ஆனால், அதை அனுபவிக்கா மல், பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த அசம்பாவிதம் பற் றியே புத்தி சிந்தனை செய்கிறது. இந்தக் கணத்தின் சுகம் கிடை க்காமல் போகிறது. பழைய வேதனை யை அதற்கான சூழ்நிலை இல்லாதபோதி லும், மறுபடி அனுபவிக்கிறீர்கள்.

ஜப்பானில் இருந்து வருபவர்களிடம் ஒரு விசித்திர நோய் இருக்கும். ஒரு வீட்டில் இருந்து நான்கு பேர் சுற்றுலா வந்தால், நான்கு பேரிடமும் தனித்தனி கேமரா இருக்கும். மலையை, நதியை, சூரிய உதயத் தை, அஸ்தமனத்தை எதையும் நேரடியாக அனுபவிக்காமல், கேம ரா வழியே கவனிப்பதிலேயே நேர ம் செலவு செய்வார்கள். துருக்கி சென்றிருந் தேன். அங்கே வெப்பக் காற்றை நிரப்பிய பலூன்களில் மே லே பறக்கை யில், அதை ஆழ்ந்து அனுபவிக்காமல், நான்கைந்து ஐப்பானியர்கள் கேமரா வழியே படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

கண்கள் இப்படிச் சிறைப்பட்டுப் போனதில், அதில் ஒருவர் தவறாக நகர் ந்து, கிட்டத்தட்ட முப்பதடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தோள் பட்டையில் எலும்பு முறிவோடு அவ ரைத் தூக்கிப் போனார்கள். தலத்தி ல் அனுபவிப்பதை விடுத்து, வீட்டில்போ ய் நினைத்துச் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

உருவத்தை, ஒலியை, நிகழ்வை எல் லாவற்றை யும் இன்னும் துல்லிய மாகப் பதிவு செய்யக் கருவிகளே வ ந்துவிட்டன. அதற்கு எதற்கு உங்கள் மனதை வருத்துகிறீர்கள்? உலகத் தில் பொதுவான பிரச்சினையாக இருப்பதே, இந்த மனதை முழுமையா கப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் இருப்பதுதான். இறந்தகாலத் தை நினைத்த படி, உயிர் இல்லாத ஒன்றுக்கு உயிர்  கொடுக்க முயற்சி செய்தால், உயிரோடு இருப்ப துகூட உயிர் அற்றதாகிவிடும்.

இப்படி மனதை மிகமிக அடிநிலையிலே யே உபயோக ப்படுத்தி வராமல், நினைவாற்றல், கற்பனை இரண்டை யும் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு மனதைப் பயன்படு த்தினீர்கள் என்றால், அது எப்பேர்ப்பட்ட கூர்மையான கருவி என்று உணர்வீர்கள். உங்கள் அனு பவத்தில் இல்லாத பரிமாணங்கள்கூட உங் கள் அனுபவத்தில் வந்து சேரும். அதற்காகத்தான் தியானம் என் று கொ ண்டு வந்தார்கள்.

உண்மையில், எந்தக் கணத்திலும் ஆன ந்தமாக இருப்பது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இல்லையா? உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என்று நினைத்தால், அது பற் றிமட்டுமே உங்கள் மனம் செயல் படட்டும்”.

– – சத்குரு ஜக்கி வாசுதேவ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: