திருமண பந்தத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், உள்ளத்தாலு ம் உடலாலும் தாம்பத்தியத்தில் இணைகி றார்கள். இதன் விளைவாக, அந்த ஆணின் கோடான கோடி விந்தணுக்கள் ஓன்றோடொன்று போட்டியிட்டு பெண் ணின் கருப்பையை துளைத்து உள்ளே செல்ல முட்டி மோதுகின்றன• இந்த மோ தலில் ஈடுபடும் கோடான கோடி விந்த ணுக்களில் ஒரே ஒரு விந்தணு மட்டும் பெண்ணின் கரு முட்டையை துளைத்துக்கொண்டு உள்ளே செல்கிறது. அங்கே புதியதோர் உயிர் உதயமாகிறது.
தாயின் கருவறையில் முதல் உறுப்பு எது தெரியுமா? அதே போ ல் அந்த மனிதன் மரணத்தை தழுவும் போது, முதன்முதலாக தனது இறக்கும் உள்ளுறுப்பு எது தெரியுமா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் இதயம்தான்!,
ஆம்! தாயின் கருவறையில் முதன்முதலாக உருவாகும் உள்ளுறுப்பு இதயம் ஆகும். அதுமட்டுமல்ல அந்த உயிர் இந்த பூமியிலே பிறந்து வளர்ந் து, மரணத்தை தழுவும்போதும், முதன் முதலாக தனது இயக்கத்தை நிறுத்து ம் உறுப்பும் இதயம்தான்.
ஒரு பெண், ஓர் ஆணைப் பார்க்கும் போதோ, ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்கும்போதோ அவர்களுக்குள் ஏற்படும் ஒரு வித இன்ப புத்துணர்வு அவர்களுக்கு முதல்முறை என்பதால் முதல் காதலை அவள் (ன்) இறக் கும் வரை மறப்பதில்லை. அந்த காதல் அழிவதில் லை.
தனது தாய், தந்தை சகோதரன் சகோதரி அல்லது உற்றார் உறவினர் சாகும்போதோ அல்லது விட்டு விலகும்போதோ அவன்(ள்) வாழ்க்கை வெறுப்ப தோ அல்லது தங்களது இன்னுயிரையே மாய்த்து க்கொள்வதோ கிடை யாது
ஆனால், ஒரு காதலியோ அல்லது காதல னோ தம்மை விட்டு விலகும் போதோ அந்த காலதன் அல்லது காதலி மரணிக்கு ம் போதுதான், அவன் (ள்) வாழ்க்கையில் விரக்தி ஏற்படுகிற து. இன்னும் ஒருபடி மே லே போய் தனது இன்னுயிரையும் விட்டு விடு கிறான்.
தோன்றும்போதும் சரி, மறையும்போதும் சரி முதல் இடத்தை பிடிப்பது இதயம் என்பதால்தான் காதலின் குறியீ டாக இதயத்தை குறிப்பிடுகிறா ர்கள்.
– விதை2விருட்சம்
i like
very nice
Idhayam Thirandhu sollum Iniya Katturai. Nanri Sathya Avargale!