Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு த‌கப்பனை ஆட்டிப்படைக்கும் 10 விதமான பயங்கள்

அப்பா.. இந்த 10 பயத்தையும் முதல்ல விடுங்கப்பா!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என் றால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தை யை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத் தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோ ஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந் திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக ஆண்கள் வெளிக்கா ட்டிக் கொள்வதில்லை. தந்தையா க போகிற ஒவ்வொரு ஆணுக்கு ம் தனக்கு தகப்பன் என்று புதிதாக வர போகிற ஸ்தானம் மற்றும் அ திலுள்ள பொறுப்புகளை எண்ணு ம் போது, ஒரு பயம் இருக்கத் தான் செய்யும்.

இந்த புதிய மாற்றத்துடன் அவர்கள் ஒன்றி விட முதலில் கஷ்டப்ப டுவது இயல்பாக ஏற்படுவது தான். உண்மை யை சொல்ல வேண்டு மானால், கருவை சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தான் இந்த கதாநாயகனாக விளங்குகி றாள். இருப்பினும் தந்தையாக போகிறவர் கள் தகப்பன் என்ற ஸ்தானத்தில் பயணிக்கும் போது, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பல பொறுப்புகள் காத்துக் கொண்டு இருக்கி றது.

பயத்தை எல்லாம் கடந்து வருவது தான் தந்தையாக போகிறவர் களின் கடமையாகும். இருப்பினும் தான் அப்பா ஆக போகிறோம் என்ற நினைப்பை ஏற்றுக் கொள்ளவே பலருக்கு பயம் வந்து விடும். அவர்களின் மனதில் குழப்பும், துயர மும் உலா வந்தாலும் கூட, அவர்கள் அத னை வெளியில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் லை.

இந்த பிரச்சனையை பற்றி ஆழமாக தெரிந் து கொள்ள, இப்படி அவர்கள் சந்திக்கும் 10 விதமான பயங்களை பற்றி பார்க்கலாமா…

பாதுகாப்பு பயம்

புதிதாக தந்தையாக போகிறவர்களுக்கு, தங்கள் குழந்தையை சரி யான முறையில் கையில் தூக்குவோமா என்ற பயம் அவர்க ளை சூழும். அதனுடன் சேர்த்து குழந்தைக்கு சரியாக டையப்பர் மாற்றுவது, அதனை பாது காப்பது, வீட்டை குழந்தைக்காக பாதுகாப் பாக மாற்றுவது போன்றவைகளும் பயத்திற்கான சில உதாரணங்க ள். இவ்வகை பயன்கள் எல்லாம் இயல்பாக வருவது தான். ஆனால் அவைகளையெல்லாம் மிகைப்படுத்த தேவையில்லை.

வேலை மற்றும் குடும்பத்தை சம நிலையில் வைத்திருப்பது

அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும். உங்க ள் குடும்பத்திற்கென நீங்கள் ஒதுக்கும் பொன்னான நேரத்திற்கு ஈடு இணை வேறு கிடையாது. தந்தையாக போ கும் ஆண்களுக்கு, தங்கள் வீட்டில் குடும்பத் துடன் செலவிட நேரம் கிடைக்குமா என்பதி ல் பயம் ஏற்படும். மேலும் தங்களுக்கு ஏற் பட்டுள்ள கவன சிதறலால் தங்களால் வே லையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடி யுமா என் ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும். மேலும் வேலைப்பளு காரண மாக தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விசேஷமான தருணங்களில் கல ந்து கொள்ள முடியாது போன்ற எண்ணங்க ளால் இவ்வகை கவன சிதறல் உண்டாகும்.

குழந்தையினால் உங்கள் தாம்பத்தியத்தில் பாதிப்பு

குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை உங்கள் மனை வி கர்ப்பமாக இருக்கும் காலம் முதலே நீங்கள் கவனிக்க தொடங்கலாம். குழந்தை பிறந்த நேரத்தி ல், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலு த்த வேண்டியிருக் கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலா ம். அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் களைப் பும் உளைச்சலு ம். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெது வாக மாறும். அதற்கு உங்களி டம் பொறுமை இரு க்க வேண்டும்.

பொது வாழ்க்கையில் பாதிப்பு

பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவ தால், அதற்கென செலவிடும் நேரமும் அதிக மாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயமும் ஆண்களிடம் இருக்கும். தன் நண்பர்களுடன் வெளியில் செ ல்வது அல்லது பார்ட்டிக்கு செல்வது போன்ற வைகள் எல்லாம் தடைபட்டு விடுமோ என்ற பயமும் இருக்கும். இதனால் தங்களின் அனைத்து நண்பர்களையு ம், அந்த வாழ்க்கையையும் தொலைத்து விடுவோமோ என்ற பய மும் சேர்ந்து கொ ள்ளும்.

உறவுகளில் பயம்

தங்கள் குடும்பத்தில் பார்த்த நிகழ்வு கள் சில ஆண்களுக்கு பயத்தை உரு வாக்கும். அதாவது காதல் மழையில் நனைந்து, தன்னுட னேயே இருக்கும் தன் ஆசை மனைவி அடியோடு மாறி விட்டால்? ஆம், தந்தையாக போகிறவர்களுக்கு வரும் மற்றொரு பயம் – தன் மனைவி தன்னை விட தன் குழந்தை யின் மீது தான் அன்பை செலுத்துவாளா? என்ற எண்ணத்தால், அவர்கள் அனுபவித்து வந்த அன்யோநியமான உறவு பாதிக்கப்படும். இப்ப டி அன்பு இடம் மாறும் போ து, இது நியாயமான பயமாகத் தான் விளங்கும்.

செயல் திறன் பயம்

தன் மனைவியின் பிரசவத்தின் போது தன்னா ல் அவளுக்கு துணை யாக இருக்க முடியாது என்ற பயம் பல ஆண்களிடம் இருக்கும். பிரசவ வலி யில் அவர்கள் துடிப்ப து, கை கால்களை முறுக்குவது, ஆங்கா ங்கே காணப்படும் இரத்தங்களு ம் நீர்களும் ஆண்களுக்கும் கும ட்டலை ஏற்படுத்தி தலை சுற்றச் செய்யும். அதனால் தான் பல ஆண்கள் பிரசவ நேரத்தில் கண் டிப்பாக மனைவிகளுக்கு துணை யாக இருப்பதில்லை.

இறப்பு பயம்

புது வாழ்க்கை தொடங்கும் போது, முடியும் ஒன்றை எண்ணி நாம் ஒன்றுமே செய்ய முடியா து. தந்தையாக போகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு உயிர் வரப்போவதால், தங்கள் இள மை பறி போய் விட்டது என்ற பயம் உண்டாகும். தந்தை என்றால் தன் குழந்தை மற் றும் குடும்ப தேவைக்காக பாடுபட்டு தன்னுடைய சுகங்கள் மற்றும் தேவைகளை எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

மனைவி மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தினால் ஏற்படும் பய ம்

பிரசவத்தின் போது தங்கள் மனைவி அல்லது குழந்தையை இழந்து விடு வோமா என்ற பயம் பொதுவாக ஆண் களுக்கு வருவது தான். ஒரு வேலை மனைவி இறந்துவிட்டால், குழந்தை யை தனியாக வளர்க்க வேண்டும் என்ற பயம் சூழும். குழந்தையை பெற்றெடு க்க தாய் வலியால் துடிப்பதை பார்க்கும் போது, குழந்தை பிறப்பு என்பது நம்மை உறைய வைக்கும் ஒரு அனுபவமாக விளங்கும். ஆனால் இவ்வகை பயங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களா கும். அவைகளை முதலில் அகற்றுங்கள்.

நல்ல தந்தையாக இருப்பது

தன் குழந்தைக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியுமா என் பது ஒவ்வொரு ஆணின் ஆழ்மன தில் நீடிக்கும் பயமாகும். தன் குழ ந்தையை பண ரீதியாக எந்த பிரச்சனையுமின்றி வளர்க்க முடி யுமா என்ற பயமும் இருக்கும்.

பண ரீதியான பயம்

தன் குடும்பத்தையும், குழந்தையின் கல்வி யையும் பண ரீதியாக சமாளிக்க வேண்டு மே என்ற பயமும் பல ஆண்களிடம் இருக்கு ம். குழந்தை பெற்றபின், தன் மனைவி வே லையை விட்டு நின்றுவிட்டதால், தன் ஒருவனின் சம்பளத்தை வை த்து குடும்ப தேவைகளை சமாளிக்க முடியுமா என்ற பயமும் உண் டாகும். இது நியாயமான பயமே. பல பேர் குடும்பத் தில் குழந்தை பிறந்தவுடன் இரண்டு பேருக்கு பயன்படு த்தப்பட்ட இருவரின் சம்பள ம், இப்போது மூன்று பேருக் கு ஒரு ஆள் சம்பளமாக மாறி விடுவது வாடிக்கை யாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: