Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவனைப்பற்றி ஒருவித அதிருப்தி, மனைவிக்கு ஏற்பட காரணம் என்ன‍?

இன்றைக்கு பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கின்றனர். சில தம்பதியர் மட்டுமே வேலைகளை பகிர்ந்து கொள்கி ன்றனர். ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் கணவனுக்கு அலுவலக வேலை மட்டு மே பெரிதாக இருக்கிறது. எல்லா பொறு ப்பையும் மனைவியே சுமக்கும் சூழ் நிலை உள்ளது. இதனால் கணவனைப் பற்றி ஒருவித அதிருப்தி மனைவிக்கு ஏற்படுகிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு வித விரோத மனப்பான்மை இருக் கிறது. இது வெளியில் தெரியா து. இரு ந்தாலும் இருவரின் செயல்படுகளிலும் அது எதிரொலிக்கும்.

இருவருக்கும் இடையே ஒரு இணக் கமான நிலை இல்லாத காரணத்தினால் அடிக்கடி சண் டையும், வீடே போர் களமாகவும் மாறிவிடுகிற து. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்ற னர். இந்த பிரச்சினைகளை தீர்க்க கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்தல் இருக் க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆனால் தம்பதியரிடையே யார் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதில் தான் பிரச்சினையே. இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சி னையினால் விட்டுக்கொடுத்தல் இல்லாமலேயே பெரும்பாலான தம்ப திகள் ஒரே வீட்டில் வசித்தா லும் ஒருவருக்கொருவர் நடித்துக் கொண்டி ருக்கின்றனர்.

உடல்ரீதியாக அவற்றின் தேவைக ளுக்காக மட்டுமே இணைகின்றனர். இதனை சேர்ந்து வாழ்க்கின்றனர் என்று கூறுவதை விட ஒரே வீட்டில் இருந்து கொண்டு உணர்வுகள், செயல்களில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழவில்லை. அவரவர் இஷ்டம் போல செயல்படுகின்றனர். சில வரு டங்களில் இருவருக்குமிடையே பிரி ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விவாகரத்துதான் என்று முடிவு செய்கின்றனர். இதனால் பாதி க்கப்படுவது என்னவோ குழந்தைகள் தான். எனவே தம்பதியர் இரு வரும் இதனை நன்கு சிந்திக்க வேண்டும்.

தம்பதியர் தங்களுக்குள் தெரியாமல் எழும் விரோத மனப்பான்மையை உடனே களைய முற்பட வேண்டும். இருவரும் விட்டுக்கொடுக்கவேண்டு ம். அப்பொழுதுதான் குடும்ப வாழ்க் கை தெளிந்த நீரோடைபோல அமை தியாகச் செல்லும். விட்டுக் கொடுத் தல் மட்டுமே குடும்ப அமைதி க்குத் தேவை. குடும்ப முன்னேற்றத்தி ற்கும் அதுவே அவசியம் என்ப தை ஒவ்வொரு தம்பதியரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: