Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீதையை, ராமன் தீக்குளிக்க சொன்னதன் உண்மையான காரணம்!

சீதை தீக்குளித்தது ஏன்?

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை, பெண் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வில்லை. ராமனே இப்படி சந்தேகப் படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும்பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

ராவணனின் யாகசாலையில் வேலை செய்த அக்னிபகவான் பல பாவ ங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக் களையும் ராவணனின் உத்தர வுப்படி அவன் அழித்தான். இந்த பாவத் தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆக வேண் டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத் தான். ராமனும் அதை ஏற்றுக்கொண் டு சீதாவை தீயில் மூழ்கி வரும்படி உத்தர விட்டான். பகவானின் உத்தர வை ஏற்ற சீதா, தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்து போயி ன. இது தான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசு த்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா. சீதை கடத்தப்பட்ட ஊர் ராமனும் சீதையும் வனவாசம் செய்த போது ராவணன் சீதையை தூக்கி சென் றான். பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியி ருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பஞ்சவடி தற்போதைய நாசிக் என்ற ஊரின் ஒரு பகுதியாகும். மும்பையிலி ருந்து 117 மைல் தூரத்தில் நாசிக் அமை ந்துள்ளது. இங்கு கோதாவரி ஆறு பாய் கிறது. சூர்ப்பனகை இங்கு வந்துதா ன் சீதையை பார்த்து தனது அண்ணனிடம் தகவல் சொன்னாள். அப் போது லட்சும ணன் அவளது மூக்கை அறுத்தான். மூக்கு அறுபட்ட இந்த இடத்திற்கு நாசி கை என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் நாசிக் என்று ஆயி ற்று.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: