Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்க நகைகள் மீது பதிக்க‍ப்படும் ஹால்மார்க் – ஒரு பார்வை

ஹால்மார்க்

சுத்த‍மான அசல் தங்கம் என்பதற் கான அடையாளமே இந்த ஹால் மார்க் முத்திரை

ஹால்மார்க் வந்தது எப்படி?

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத் திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற் றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths’ Hall) வழக்கமானது. இந்த பொற் கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் ‘முத் திரை’ அந்த காலத்தில் பதிக்கப் பட்டு வந்தது. அந்த Goldsmith’s Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.

கேரட்

சுத்தமான தங்கம் என்பதன் அடையா ளமாக காட்டப் படுவதுதான் ஹால் மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும் பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர் கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங் குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்க த்தைவிட சற்று கூடுதலாக இருக் கும். இந்த சுத்த தங்கத்தைக் கொ ண்டு ஆபரணங்கள் செய்ய முடி யாது என்பதால், சில உலோகங்க ளைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமை ப்பான ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத் திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்தி ரை வழங்குவதற்கு பி.ஐ. எஸ். அமை ப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திரு க்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட் டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) அலுவலகம் இருக்கிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply