Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிலைமை இப்படியே நீடித்தால்… இந்த உலகத்தை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது!

‘மரபணு மாற்று விதைகள்தான், எதிர் கால மனித இனத்துக்கு முழுமையாகச் சோறிடும். அதை விட்டால், நமக்கு வே று வழியே இல்லை. அதை எதிர்ப்பவர் கள், முட்டாள்கள்” -இப்படி அமெரிக்கா வின் ஊதுகுழலாக உளறிக் கொட்டிய படியே இருக்கிறார்… பாரம் பரியம் மிக்க பாரத கண்டத்தின் வேளாண்மைத் து றை அமைச்சர் சரத்பவார். இதற்கு, எப் போதும் தன் ஆசிகளை அள்ளி வழங்கியபடியே இருக்கிறார்… அ மெரிக்காவின் நட்டுவாங்கத்துக்கு ஏற்ப, நடனமாடிக் கொண்டிருக்கும் நம் பிரதமர் மன்மோகன் சிங். அமெரிக்க தயாரிப்பான மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக, கொஞ்சம் போல எதிர்ப்புக் காட்டிய காரண த்தால், சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அதிலிருந்து வேறு துறை க்கு விரட்டி அடிக்கப்பட்டதே இதற்கு சரி யான சாட்சி!
 
இப்படி அமெரிக்காவின் அடிவருடிகளாக மாறி, இங்கிருக்கும் சில விஞ்ஞானிகளு ம்… பல அரசியல்வாதிகளும் அந்த அடாவ டி மர பணு மாற்றுத் தொழில்நுடபத்துக்கு வால் பிடித்தபடியே இருக்கும் சூழலில்… அத்தனை பேருக்கும் ‘சம்மட்டி அடி’ கொடு ப்பதுபோல.. தன்னுடைய ஆராய்ச்சி முடி வுகளை வெளியிட்டு, இயற்கை விவசா யிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வெள்ளத்தைப் பாய்ச்சியிருக்கிறார்… நியூசிலாந்து நாட்டின் பேராசிரியர் ஜேக் ஹின்மேன் (Jack Heinemann).
 
”உலக உணவுத் தேவையை உள்ளூர் விதைகளில் உருவான தானி யங்கள் மட்டும்தான் எப்போதும் தீர்த்து வைக்க முடியும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளை மட்டுமே நம்பி நடைபெறும் கார்ப்பரேட் கம்பெனி விவசாயம், மனிதர்களின் உடல் நலனுக்கு கெடுதலைத்தான் செய்து கொண்டிருக்கிறது. மர பணு மாற்று விதைகளின் பிதாமகன்களான அமெரிக்க கம்பெனி விவசாய முறையில், ஆண்டுக்காண்டு ரசாயன உரத்துக்கான செல வு கூடுகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளின் பயன்பா டும் அதிகரித்து, ஒட்டுமொத்தத்தில் செலவு அதிகரிப்பதுடன், உண வுப் பொருட்களில் விஷத்தன்மையும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், விளைச்சல் திறன் மட்டும் ஒரே இட த்தில் உட்கார்ந்து விட்டது. மாறாக, ஐரோப் பாவில், பாரம்பரிய விதைகளைக் கொண்டு, இயற்கை முறையில் செய்துவரும் விவசாய த்தில், செலவு குறைந்து, விளைச்சல் பெருகி வருகிறது” என்று நியூசிலாந்து நாட்டில், கேன்டர்பரி (Canterbury) பல்கலைக்கழகத்தி ல் இந்த ஆண்டு ஜூன் மாதம்  நடைபெற்ற ஆய்வரங்க மாநாட்டில்,  தன்னுடைய ஆய்வு முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறார் ஜேக் ஹின்மேன்.
 
ஜேக், தன்னுடைய ஆய்வில் கண்டறிந்த வி ஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கி றது…. ‘நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கா ன அகில உலக இதழ்’ (International Journal of Agricultural Sustainability).
 
‘புதிய உயிரியல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பின் மூலாதா ரத்தை அழித்துவிடும் என்பதுதா ன் உண்மை. உதாரணமாக… 1949 -ம் ஆண்டு, சீனாவில் 10 ஆயிரம் கோதுமை ரகங்கள் இருந்தன. 1970-ம் ஆண்டு 1,000 ரகங்கள் மட் டுமே மிஞ்சின. கடந்த நூற்றாண் டில் இருந்த முட்டைகோஸ் ரகங் களில் 95%; மக்காச்சோளத்தில் 91%; துவரையில் 94%; தக்காளியில் 81% ரகங்கள் அழிந்து விட்டன. இதெல்லாம், புதிய தொழில் நுட்ப ங்கள் புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பரிதாப நிலை.
 
விதை, விவசாயிகளின் சொத்து. ஆனால், மரபணுமாற்றுத் தொழில் நுட்ப விதைகள் வந்த பிறகு, வி தைகள் தனியுடமை ஆகிவிட்டன. இது விவசாயிகளை விதைச் சேமி ப்பிலிருந்து விரட்டியடித்து விட்ட து. உலக உணவு உற்பத்திக் கொள் கை, பசியைப் போக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், அது தற் போது லாப நோக்கம் கொண்ட கொள்கையாக மாறி, அதில் வணி க வெறி புகுந்து விட்டது. இதனால், தனிப்பயிர் (Monoculture) விவசா யம் என்பதே தற்போது முன்னெடுக்கப்படு கிறது. அதாவது, ஒரே மாதிரியான பயிரையே பெரும்பாலான விவசாயி களும் விளைவிக்க வற்புறுத்தப்படு கிறார்கள். ஆனால், ஏழை, பணக்கார ன் என்று இல்லாமல், எல்லா தரப்பி னரையும், எல்லா நாட்டினரையும் பல் பயிர் கலப்பு விவசாயம்தான் (Bio-diversity) காப்பாற்றும். பாரம்பரிய இயற்கை விவசாயம்தான் நிலைத்து நின்று நீடித்த விளைச்ச லைக் கொடுக்கும் உணவுப் பாதுகா ப்பையும் உறுதி செய்யும்’ என்று நெற் றிப்பொட்டில் அடித்தது போல தன் ஆய்வு மூலம் புரிய வைத்திருக்கிறார் ஜேக்.
 
ஜேக் மற்றும் அவருடைய குழுவின் ஆய்வறிக்கை, செப்டம்பர் 2013-ல் நடைபெற்ற ஐ.நா. வணிக மேம்பாட்டு கருத்தரங்கில் (United Nation Conference on Trade and development) முன் வைக்கப்பட்டு கவலை யோடு விவாதிக்கப்பட்டுள்ளது.
 
பிறக்கப்போகும் குழந்தையி ன் கண்கள், முடி இவற்றை யெல்லாம் கூட விரும்பிய நிறத்திலும், வடிவத்திலும் மர பணு மாற்றுத் தொழில் நுட்ப ம் மூலமாக மாற்றியமைத்து க் கொள்ளும் அளவுக்கு ‘அழி வியல் போதை’யில் வெறி கொண்டு அலையும் அமெரிக்காவுக்கு… இதெல்லாம் உறைக்குமா என்ன?
 
கம்பெனிகளின் இயந்திர விவசாய ம், விவசாயிகளை அழிக்கிறது என் பதற்காக ஆதாரம் தேடி அலைய வேண்டியது இல்லை… இந்தியா வே சாட்சி. 1970-களில் பெரிதாகப் பேசப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ தோற்று ப்போய், விவசாயிகளைக் கடனில் தள்ளியது. தற்கொலைக்கு விரட்டு கிறது. அழிவிலிருந்து பாடம் கற்று க் கொள்ளாமல், ஆட்சியாளர்கள் இன்று இரண்டாம் பசுமைப் புரட் சியை (GMO) கையில் எடுத்துள்ளனர். பசுமைப் புரட்சியின் முதல் களமான பஞ்சாப், புற்றுநோய்களின் பிறப்பிடமாகி விட்டது இன்று. ஐந்து நதிகள் பாய்ந்த பஞ்சாப்பில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகிவிட்டது. மண் மலடாகிவிட்டது. இது தான் அந்த மாநிலத்துக்கு பசுமைப் புரட்சி கொ டுத்த பரிசு.
 

ஆட்சியாளர்களே… அதிகார வர்க்கங்களே… அமெரிக்கா என்பது பெரு வியாபாரிகள் நிறைந்த நாடு. அவர்கள் ஆயுதங்கள், தொழில் நுட்ப ங்கள், உணவுகள் என்று தங்களின் கண்டுபிடிப்புகளையும், உற்பத்தி யையும் உலகம் பூராவும் கூவிக் கூவி விற்கத்தான் பார்ப் பார்கள். வியாபாரி, அதைத்தானே செய்ய முடியும். அதற்காக, உலக நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போ லவும்… அந்தந்த நாடுக ளின் விவசாயத்தின் மீது ஆர்வம் இருப்பது போலவும்… நடிக்க த்தான் செய்வார்கள். இதுவும் ஒரு வகை விள ம்பர யுக்தியே! விளம் பரத்தைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், ஆராய்ந்து பார்க்கா மல், அந்த விளம்பரம் முழுக்க முழுக்க உண்மை என்று நம்பி, அதன் பிடி யில் வீழ் வதுதான் ஆபத்து. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்…. நம் ஆட்சியாளர் கள். ஓட்டுப் போ ட்டு உட்கார வைத்த ஒரே காரணத்துக்காக… நாட்டின் விவசாயத் தை யும், மக்களையும் அமெரிக்க நிறுவனங்களி டம் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

 
உணவு என்பது தொழிலாக மாற்றப்பட்டு, கார்ப்பரேட் உணவுத் தொழிற்சாலைகள் பெருகிவிட்ட நிலையில், இதன் எதிர் விளைவா க, எதிர்காலத்தில் உணவுத் தேவை க்காக… நாம் ஒவ்வொருவரும் கம் பெனிகளின் காலடியில் விழுவது ஒன்றுதான் வழி என்கிற நிலைக்கு த் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
 
நிலைமை இப்படியே நீடித்தால்… இந்த உலகத்தை அந்த ஆண் டவனால்கூட காப்பாற்ற முடியாது!
 
– தூரன் நம்பி 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: