Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையிலேயே பெற்றோர்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல!

இன்றைய இளம் பெண்கள் சந்திக்கும் பிர ச்சனைகளில் ஒன்று தான், பெற்றோர் கள் காதலை சம்மதிக்காமல் இருப்பது. பொ துவாக வாழ்க்கை என்பது நமக்கு பிடித்த வாறு அமைந்தால், அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இல்லை. அப்படி தனக் கு வாழ்க்கைத்துணையாக இளம் பெண் கள் தங்களுக்கு பிடித்தவரை தேர்ந்தெடு த்தால், அதனை பெற்றோர்கள் மறுக்கிறா ர்கள். இதனால் பலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மே லும் பலர் மனதை கல்லாக்கி, வேறொரு வரை திருமணம் செய்து கொ ண்டு, பிடிக்காத வாழ்க்கை வாழ்கின்றனர். 

உண்மையிலேயே பெற்றோர்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அவர்க ளுக்கு தங்கள் குழந்தைகள் எவ்வளவு தான் பெரிய பெண்ணாக இருந்தாலு ம், சிறுகுழந்தைகளாகவே தெரிவார்க ள். ஆனால் பெற்றோர்களிடம் தம்மு ள் இருக்கும் காதலைப் பற்றி வெளிப் படையாகவும், புரியுமா றும் பேசினா ல், நிச்சயம் பெற்றோர்களிடம் காதல் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட லாம். இப்போது அப்படி பெற்றோர்க ளிடம் காதலை சொல்லும் போது மன தில் கொள்ள வேண்டிய சில விஷயங் களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் காதல் வெற்றியடையும். 
 
* பெற்றோர்களிடம் காதல் திருமணத் திற்கு சம்மதம் வாங்கும் போது, ஒவ் வொருவரும் மனதில் கொள்ள வேண் டியதென்றால், உங்கள் காதலரைப் பற் றியும், அவர் உங்களை எப்படியெல்லா ம் சந்தோஷமாக வை த்துக் கொள்வார் என்பதையும், இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்ப தையும் தெளிவாக பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். 
 
* நிச்சயம் பெற்றோர்கள் இதனால் அதிக அளவில் கோபமடையலாம். இதனால் அவர்கள் உங்கள் மனதை மாற்றுவதற்கு, உங்கள் காதலரைப் பற்றி பலவாறு சொல்வார்கள். அப்ப டி சொல்லும் போது, நீங்கள் கோபப் படாமல், அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். இதனா ல் அவர்களது மனதில் உள்ள எண்ண த்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அதற்கேற்றவாறு பேசி, சம்மதம் வாங்க முடியும். 
 
* சிலர் பெற்றோர்களிடம் தங்கள் காத லை பற்றி சொல்லும் போது, பெற்றோர் கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், மரியாதை இல்லாமல் நடந்து கொள்வா ர்கள். ஆனால் இப்படி நடப்பதால் மட்டு ம் ஒன்றும் மாறப்போவதில்லை. ஆக வே காதலைப் பற்றி சொல்லும் போது, பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்து, உங்கள் சம்மதம் இல்லாமல் நான் எதை யும் செய்யமாட்டேன் என்று அவர்களுக்கு கொடுத்து நடந்து கொண்டா ல், பதிலுக்கு அவர்களும் சந்தோஷப்பட்டு, திருமணத்திற்கு ஒப்புக் கொ ள்ள வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்நேரத்திலும் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். 
 
* முக்கியமாக காதலை பெற்றோர்களிடம் சொல் லும் போது பொறுமை யை கையாள வேண்டும். காதல் வேகத்தில் பொறுமையை இழந்தால், பின் காதலையும் இழக்க நேரிடும். ஆகவே நீங்கள் பெற்றோர்களிடம் காதலை சொல்லும்போது அவ ர்கள் அடித்தாலும் சரி, உங்களிடம் பேசாமல் இரு ந்தாலும் சரி, சற்று பொறுமையாக இருக்க வேண் டும். ஏனெனில் பெற்றோர்கள் நீங்கள் எடுத்த முடி வு சரியா என்று யோசிக்க சிறிது நாட்கள் வேண்டு மல்லவா? 
 
* இறுதியாக பெற்றோர்களை வற்புறுத்த வேண்டாம். இதனால் அவர்க ளது கோபம் மட்டும் தான் அதிகரிக்குமே தவிர, நீங்கள் சொல்லும் வார் த்தை அவர்களது மனதை எட்டாது. ஆகவே அவர்களை வற்புறுத்தா மல், அவர்களிடம் மனதில் இருக்கும் அனைத்தையும் பேசிவிட்டு, அமைதியாக இருங்கள்.

மேலும் சில வழிகள்

1. பெற்றோருக்கு சிறிது நேரம் கொடுங்கள்.
2. அவர்கள் உங்கள் காதலரை வெறுக்கும் காரணத்தை கண்டறியுங்கள்.
3. உங்கள் காதலரிடம் இதைபற்றி பேசாதீர்கள்.
4. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசு ங்கள்.
5. அவர்களின் இடத்திலிருந்து யோசியுங்கள்.
6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையு ம் பெற் றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
7. பெற்றோரை வெறுத்துவிடாதீர்கள்.
8. பொறுமையாக இருந்து உங்கள் காதலை நிரூபியுங்கள்.
9. அவர்களின் விருப்பபடி உங்கள் காதலரின் நடவடி க்கைகளை மாற்ற முடியுமா என்று பாருங்கள்.
10. உங்களது பெற்றோர் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: