Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காய்கறிகளும்…. அதனை உண்ணும் நமக்கு கிடைக்கும் நன்மைகளும்…….

காய்கறிகளும்… அதன் நன்மைகளும்…

நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் விரும்பு வோம். அப்படி விரும்பினால் மட்டும் போதாது, காய்கறிகள், பழங்கள் என்று நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதி கம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அன்றாட சமையலில் பயன்படு த்தும் காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச் சத்து, போலேட் மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய சத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன் றியமையாதது. மேலும் இந்த சத்துக்கள் அனைத்தும் ஒரே காய்கறியி ல் இருக்காது. ஆகவே அனைத்து விதமான காய்கறிகளையும் உணவி ல் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ் வொரு சக்தியானது உள்ளது. ஆகவே இங்கு எந்த காய்கறியில் என்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்றும், அந்த காய்கறியை உணவில் சேர்த்தால் என்ன நன்மைகளைப் பெறலாம் என்றும், காய்கறிகளையும், அதன் நன்மைகளையும் பட்டியலிடப்பட்டுளளது. அதைப் பார்ப்போ மா!!!

காய்கறிகளும்…. அந்த காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன் மைகளும்…

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அளப்பறிய சத்துக்கள் நிறை ந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படு ம் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந் துள்ளது. வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயை யும் கொண்டிருக்கும் சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரை மேல் படர விட்டிருப்பார்கள்.

இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிக ளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்ய ப்படுகிறது.

சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாக வும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாக வும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவு ம் சிலர் பயன்படுத்துகின்றனர். சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்ட மின் பி போன்றவை சிறிதளவு உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பத மும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் காணப்படுகின்றன.

உடல்சூடு தணியும்

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட் டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உட ல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல் சூட்டை த் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக் கும் காய் சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

உடலுக்கு புத்துணர்ச்சி

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது. சில சமயங் களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப் பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையை ப்போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அத னுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினா ல், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

நாவறட்சி நீங்கும்

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத் தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடா மல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின் ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பல வீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக் காயை மதிய உண வுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்ப டுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவ ர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும்

கண்நோய்கள் நீங்கும்

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சுரைக்காயி ன் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந் தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொ டுக்கலாம்.

தூக்கம் வரவழைக்கும்

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்கா ய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிக ளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வே ண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும். சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.

யார் சாப்பிடக்கூடாது

சுரைக்காய் எவரும் பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும். சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.

வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவ ர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பா க சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

க‌சந்தாலும் வைட்ட‍மின்களை அள்ளிக்கொடுக்கும் பாகற்காய்

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இத னை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத் தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன் மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாக வோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்ட மின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.

பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்:

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

இப்போது அந்த பாகற்காய் மூலம் கிடைக்கும் ஏராளமான பலன்களில் ஒரு சிலவற்றைப் பற்றி பார்க்கலாமா!!!

சுவாசக் கோளாறுகள்

பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன் றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்ற ன.

கல்லீரலை வலுப்படுத்துதல்

தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

நோயெதிர்ப்புச் சக்தி

பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உட லின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

பருக்கள்

பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்கா யை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந் தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.

நீரிழிவு நோய்

டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப் பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

மலச்சிக்கல்

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவு ம் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவு கள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங் குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை

ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவத ற்கும் இது உதவுகிறது.

இதய நோய்

பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொ ழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.

எடை குறைதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி – ஆய்வில் தகவல்

புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர். நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலி யை கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டை க்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட் டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்ப டுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

சூப்பர் புராக்கோலி

நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தி னர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் குளூக்கோராபே னின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலி யை உருவாக்கியுள்ளனர். இந்த குளூக்கோராபேனின்’, இதயநோய் மற் றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

புற்றுநோயை கட்டுப்படுத்தும்

இது வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கி றது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி ஆக்சி டன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிக ளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற் பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட்

இனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய் ப்பில்லை.

பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட் ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சால ட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!

அல்சர்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரக சுத்திகரிப்பு

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறு நீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.

மூலநோய்

மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.

இரத்த சோகை

பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

புற்றுநோய்

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸி டன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொலஸ்ட்ரால்

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

செரிமான பிரச்சனை

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

மறதி

பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரும அரிப்பு

சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப் புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

தீப்புண்

கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப் புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.

பொடுகு

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

பார்வை கோளாறை சரிசெய்யும் கேரட்

காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகை ய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான்.

ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட் டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்து ள்ளது. எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சாப்பிட்டால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளையும் தடு க்கலாம்.

இப்போது அந்த கேரட் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

புற்றுநோய்

நிறைய ஆய்வுகளில் கேரட் அதிகம் சாப்பிட்டால், மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்விலும், கேரட்டில் ஃபால்கரிநால் எனப்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமு ம் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

பார்வை கோளாறு

கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டிற்கு வைட்டமின் ஏ சத்து மிகவும் இன்றியமையாதது. அத்தகைய வைட்டமின் ஏ சத்து குறை பாட்டினால் தான், மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின், கண்களுக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்தைக் கொடுக்கும்.

இதய நோய்

ஆய்வுகளில் கேரட்டில் கரோட்டினாய்டுகள் அதிகமான அளவில் இருப் பதால், அதனை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டல், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

பக்கவாதம்

ஹாவர்ட் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், வாரத்திற்கு ஆறு கேரட்டிற்கு மேல் சாப்பிடுபவர்களை விட, குறைவாக சாப்பிடுப வர்களுக்கு பக்கவாதம் விரைவில் தாக்குவதாகவும் கண்டறியப்பட்டு ள்ளது.

பொலிவான சருமம்

கேரட்டில் நல்ல அளவில் கிளின்சிங் தன்மை இருப்பதால், அதனை சாப் பிட கல்லீரலில் தங்கும் கொழுப்புக்கள் மற்றும் அழுக்குகளை வெளியே றுவதோடு, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை அகற்றி, முகப்பருக்கள் வருவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர சத்துக்கள், சரும வறட்சியை போக்கி, முகத்தை பொலிவோடு வைக்க உதவும்.

முதுமை

கேரட்டில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டினால், உடலில் இருக் கும் நச்சுக்கள் மற்றும் முதுமைத் தோற்றத்தை தரும் பாதிக்கப்பட்ட சரும செல்களை குணப்படுத்தி, இளமையான தோற்றத்தை நீண்ட நாட் கள் வைத்திருக்க உதவும்.

ஆரோக்கியமான பற்கள்

கேரட் சாப்பிட்டால், பற்கள் நன்கு சுத்தமாக இருக்கும். மேலும் இது பற் கள் மற்றும் ஈறுகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை முற்றி லும் அகற்றிவிடும். அதுமட்டுமின்றி, கேரட் சாப்பிட்டால், வாயில் எச்சி லின் சுரப்பு அதிகரிக்கும்.

முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!!!

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டை கோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன.

அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்க ளான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற் படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படு வதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும்.

குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதி கமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்ல ப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. சரி, இப்போது முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப் போம்.

புற்றுநோய்

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத் தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றி லும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அல்சர்

அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந் துள்ளது.

நோயழற்சி பொருள்

உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட் டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமை ன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத் தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

கண்புரை

முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.

எடை குறைவு

எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட் டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

அல்சைமர் நோய்

தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும்.

மலச்சிக்கல்

முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத் தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

சருமம்

முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோ டு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

தசைப் பிடிப்புகள்

முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிர ச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்க வல்லது. இத்தகைய வெள்ளரிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிறந்த காயாகும். கோடைகா லத்தில் ஏற்படும் அதிகமான நா வறட்சியை விரட்டுவதோடு, பசியையு ம் உண்டாக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்களும், கலோரிகளும் குறைவாக உள்ளது. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும் பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

இதில் பொட்டாசியம் மிகுதியாக இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்க ளை அதிகமாக உருவாக்கும். மேலும் புகைப்பிடிப்போரின் குடலை சீர ழிக்கும் நிக்கோடின் நஞ்சை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

வெள்ளரிக்காய் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது. மூளை யில் வேலை அதிகம் ஆகும் போது கபாலமானது சூடு அடைகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் மூளையானது குளிர்ச்சியடைந்து புத்துண ர்ச்சியாகும். மேலும் வெள்ளரிக்காய் மூட்டு வலி, வீக்க நோய்களை குணமாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டால் பித்த த்தை தணித்து, சிறுநீரக கோளாறுகளைச் சரிசெய்கிறது. நீரிழிவு நோ யாளிகளும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் அதிகமாக சாப்பிட்டால் மிகவும் நல்லது.

நுரையீரல் கோளாறு,இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பி டுவது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆகவே வெள்ளரிக்காய் சாப்பிடுங்க! உடலை குளிர்ச்சியா வெச்சுகோ ங்க!

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உண வை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ் வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளு க்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற் குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோ ஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டா சியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்த மல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாச னையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்க ளைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படு ம் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போமா!!!

கண் நோய்கள்

நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்து க்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular dege neration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குண ப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத் து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதனை மெல்லிய சுத்தமான துணி யினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால், கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகி யவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும்.

மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா? அப்படியெனில் 20 கிராம் புதிய கொத்த மல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர் த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுங்கள். இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விடுங்கள். வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்த அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடி வது நிற்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சரும நோய்கள்

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்க ளை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகி றது. இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. படை நோய் இருந்தால், கொத்தமல்லி இலைக ளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவலாம். தோல் தடிப்பிற்கும், அரிப்பிற்கும், புதிய கொத்தமல் லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட்டால், சரும பிரச்சனைகள் குணமாகும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி

கர்ப்பத்தின் தொடக்க காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு தலை சுற்றலும், வாந்தியும் இருக்கும். இது மாதிரி நேரங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் குடித்து வர வேண்டும். இதனால் தலைச்சுற்றலும், வாந்தியும் குறையும்.

அம்மை

கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர் ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்ற ன. இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.

வாய்ப்புண்

கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட் ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது. என வே இது வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக் கும். மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கொழுப்புக்களை குறைக்கும்

கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீ ரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன் றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களி ன் சுவர்களில் படியும் கொழுப்பை நன்கு குறைப்பதால், மாரடைப்பு வருவதை பெருமளவு குறைக்கிறது.

செரிமானத்தை அதிகரிக்கும்

கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன் படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படு கிறது.

ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!!!

முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவை யாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்ல லாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன் மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.

முருங்கையின் நன்மைகள் :

1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரிய லை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவ ற்றை சேர்க்கக் கூடாது.

2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்கு தள்ளிப் போவதா ல் ஏற்படும் வலியும் குணமாகும்.

3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தின மும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.

4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.

5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.

6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.

ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருங்க!!!

இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!

உண்ணும் உணவில் நல்ல மணத்தையும், ருசியையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. மேலும் வெங்காயக் குடும் பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொரு ளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.

மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறித ளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. இத்தகைய மருத்துவக் குண ங்கள் நிறைந்த பூண்டை எல்லாவகை உணவுகளிலும் சேர்த்து சாப்பி ட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆய் வின் மூலம் கூறியுள்ளனர்.

பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தே வையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீ ரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத் தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைத்து இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங் குதல் ஆகியவற்றை சீராக்குகிறது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழு ப்பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும்.

ஆகவே பூண்டை சாப்பிடுவோம்! இதயத்தைப் பாதுகாப்போம்!

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப் பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக் கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண் டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியா க மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ் குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன் ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலி ட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்கா யை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள் ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப் பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக் கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

கொழ கொழ காய்

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போ து இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண் டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போ ட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வாய்நாற்றம் அகலும்

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத் துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொ லாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்த மாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண் டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடி யின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட் டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களி ன் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வற ட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ள தைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்கா யை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுக ளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண் ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக் கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலை யும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காலிஃப்ளவர்

காலிஃப்ளவர், பலரும் சொல்வதை போல இது பயமுறுத்தும் காய்கறி அல்ல. இது குறுக்குவெட்டு தோற்றம் உடைய காய் வகை. பல ஆரோ க்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயா கவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. ஆகையால் இந்த மலரான காய் வகையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண் டும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இதன் ஊட்டச்சத்து நீங்கி விடும் என்பதால், இதை ஐந்து நிமிடத்திற்கு மேல் சமைக்க வேண்டாம். சுவை அதிகம் உள்ள காலிஃப்ளவரை பலவிதங்க ளிலும் சமைக்க முடியும். மேலும் காலிஃப்ளவர் நம் அன்றாடும் சந் தையிலேயே கிடைக்கக் கூடியவை. ஆகவே அத்தகைய காலிஃப்ளவ ரை உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.

இப்போது காலிஃப்ளவரின் மிக முக்கியமான ஆரோக்கிய பண்புகளை இங்கு காணலாம்.

அதிகமான ஊட்டச்சத்து

காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீ சியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற தாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உண வில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய் கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

நோயெதிர்ப்பு அழற்சி

காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின் றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற் றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.

நச்சுத் தன்மை நீக்கும்

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெரு ங்காமல் பார்த்துக் கொள்கின்றது.

இதய நோய்களுக்கு எதிரானவை

ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டா ல், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.

செரிமானத்தை அதிகரிக்க

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார் சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது. எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்த்து, செரிமான த்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க

காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.

எடையைக் குறைக்க

குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்தி ற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு

காலிஃப்ளவரிடம் இருக்கும் மற்றொரு ஆரோக்கியமான செய்தி என்ன வென்றால், இதில் இருக்கும் போலேட்(folate) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந் தப்பட்ட குறைபாடு களை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவு கின்றது.

புற்றுநோயைத் தடுக்கும்

காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண் டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோ யை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய், பெருங் குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக் கியமாக வாழ வழி செய்கின்றது.

சமையலறையில் மருத்துவப் பொருள் – இஞ்சி

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை” என்பது பழமொழி

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யவதோடு பித்தம் சம்பந்தப் பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது. நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக அதிக ம் உபயோகப்படக்கூடியது வகிக்கக்கூடியது இஞ்சி மற்றும் சுக்கு. மஞ் சளைப் போலவே வடிவம் கொண்டது. உலர்ந்த இஞ்சியே சுக்கு என ப்படுகிறது.

வேதிப்பொருள்

இத்தாவரத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக இருப்பவை எளிதில் ஆவியாகும். எண்ணெய்கள் மற்றும் ஓலியோரெசின்களாகும். ஜின்சிபெரின், ஜின்ஜிரால் மற்றும் செயல்பாட்டு வேதிப்பொருள்களாக உள்ளன.

பித்தம் தொடர்புடைய நோய்களுக்கு

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ‘ பேசில்லஸ்” பாக்டீரியா தோற்று விக்கும் வயிற்றுப்போக்கினைத் தடுக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. அஜீரணம், வயிற்று உப்புசம், குடல்வலி, ஆகியவற்றிர்கு மரு ந்தாக பயன்படுகிறது. காலை நோய் எனப்படும் தலைச்சுற்றல் – வாந்தி போக்கக்கூடியது.. கிருமிகளுக்கு எதிரானசெயல், வயிற்று நோய்கள், மற்றும் சிலவகை உணவு நச்சுத்தன்மையாக மாறுவதை தடுக்கும். இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத்  தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடை யது.

மாரடைப்பு, ஆஸ்துமா குணமாகும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதா கக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, கும ட்டல், பித்த மயக்கம் நீங்கும். இந்த முறையில் வெள்ளை  வெங்காயத் தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குணமாகும்.

முகப்பொலிவிற்கு இஞ்சி – தேன்

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலை யில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்த ம் கட்டுப்படும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும்.

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடை களிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து வரும் இரைப்பு போன்றவை குணமாகும்.

சர்க்கரை நோய்க்கு மருந்து

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பா லில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்த ப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போ கும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடு த்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.

வலி நிவாரணி

வாந்தியுடன் கூடிய மயக்கத்தை போக்குகிறது. பயணநோய், மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் ஏற்படும் வாந்தி மயக்கத்திற்கு சிறந்த மருந்து. தசைவலி மற்றும் பல்வலி, முகத்தில்வலி ஆகியவற்றிர்கு காய்ந்த தரையடித் தண்டு ( சுக்கு) தண்ணீரில் இழைத்து பசையினை நெற்றியில் பற்று போட்டால் வலி குணமடையும்.

பசியை தூண்டும் புதினா

நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொ ண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத் தப்படுகிறது.

புதினாவில் உள்ள சத்துக்கள்:

புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களு ம், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹை ட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவி ல் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண் டுள்ளது.

வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்:

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது

புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரு ந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்ல டைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடு த்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும்.

புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர் த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொ டியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது.

புதினா தேநீர்:

புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரி க்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதி னாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக் கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதி னாக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.

புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கல ந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ குணம் நிறைந்த வெங்காயம்

வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரு ம் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம். ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை. இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் வெங்காயம். இவை பூச் சிக்கடி, ஆஸ்துமா, சளி, கபம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக் கும்.

சங்க காலத்திலிருந்தே வெங்காயத்தின் மருத்துவ குணத்தை மருத்து வர்கள் அறிந்துள்ளனர். பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண்டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது.

வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு மிகவும் நல்லது. ஈர மணலில் வெங்காயம் வளர்க்கப்படுகின்றது. சுவை யான மற்றும் சத்தான சமையலுக்கு வெங்காயம் மிகவும் அவசியம். இதை சுற்றி மற்ற காய் செடிகளை வளர்க்கும் போது இவை நன்றாக வளர்கின்றது.

இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்.

பற்களுக்கு நல்லது

வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

இதய நோய்களுக்கு சிகிச்சை

வெங்காயம் இரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, இரத்த அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது. முக்கியமாக இதய நோய் மற்றும் மற்ற இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கின்றது.

பொலிவான சருமம்

வெங்காயச் சாற்றுடன் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து, முகப் பரு இருக்கும் இடத்தில் தடவினால், பிறகு பாருங்கள் முகத்தில் உள்ள பரு க்கள் நீங்கி, முகம் பொலிவாக காணப்படும்.

இருமலுக்கு சிகிச்சை

வெங்காயம் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவு ம் நல்லது. அதிலும் வெங்காயச் சாறு மற்றும் தேன் கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இரு மல் குணமடையும்.

பூச்சி கொல்லியாகப் பயன்படுகிறது

பூச்சி கடி இருப்பின் வெங்காய சாறு சிறந்த நிவாரணத்தைத் தரும். அதி லும் தேனீ கடி மற்றும் மற்ற விஷக்கடிகளுக்கு, இதனை பூசி வந்தால், வலி காணாமல் போகும்.

புற்றுநோய்

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.

காது வலிக்கு நிவாரணம்

காது வலி இருந்தால், அப்போது வெங்காயச் சாற்றினை காதுகளில் ஊற்றினால், காது வலி குறையும். அதிலும் காதில் ஒலி கேட்பது போன் ற இடர்பாடு இருப்பின், பருத்தி கம்பளி மூலம் காதில் வெங்காய சாற் றை ஊற்றினால் போதும் தானாக மறைந்து விடும்.

பாலுணர்ச்சியை அதிகரிக்கும்

வெங்காயம் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு உகந்தது. அதிலு ம் இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சே ர்த்து ஒரு நாளுக்கு மூன்று முறை எடுத்துக் கொண்டால், லிபிடோ மற் றும் பாலியல் உணர்ச்சியானது அதிகரிக்க தொடங்கி, செக்ஸ் வாழ்க்கை சீராக இருக்கும்.

இரத்த சோகைக்கு சிகிச்சை

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். ஆகவே இதை போக்க வெங்காயம் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக வெங்காய சாற்றுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பருகினால், இரத்த சோகை குணமடையும்.

வயிறு வலி நிவாரணம்

வெங்காயம் வயிறு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர் வளிக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும், ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், வெங்காயத்தை அதிக மாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சிறுநீர் கோளாறுகளை தீர்க்கும்

சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் உணர்வு சிலருக்கு ஏற்படும். வெங்கா யம் இதற்கு நல்ல தீர்வு தரும். அதற்கு 6 முதல் 7 கிராம் வெங்காயத்தை எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். பின்பு பாருங்கள் சிறுநீர் கோளாறுகள் மறைந்துவிடும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா ஏற்படுத்தக் கூடிய பயோகெமிக்கல் அமைப்பை போக்குவதி ல் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே ஆஸ்துமா நோயா ளிகள் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை கபம் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

பொடுகுத் தொல்லை

வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலு க்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் பொடுகுத் தொல்லை இருப்ப வர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தா ல், பொடுகுத் தொல்லை குறையும்.

அழகற்ற‍ உருவத்தில் இருக்கும் உருளைக்கிழங்கு

பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உரு ளைக்கிழங்கு. இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது.

உருளைக்கிழங்கு இல்லாத காய்கறியை நினைத்துப் பார்க்க முடிகிறதா ? முடியாதல்லவா… உருளைக்கிழங்கு இல்லாத சமையலறையே இரு க்காது. சொலானம் ட்யூபரோசம் என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட இக்கிழங்கு ஒரு சீரான உருவமே இல்லாமல் அழகற்றதாக இருந்தும் அதனை ஈர்க்கும் பொருட்டு நம் மீது ஏதோ மந்திரத்தை இது தூவியிரு க்க வேண்டும். உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனை சமமான அளவு நேசித்தே ஆக வே ண்டும். ஏனென்றால் வெறும் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் தவிர, அதிலிருந்து அவிழ்க்கப்பட வேண்டிய ரகசியங்கள் மேலும் உள் ளன.

இத்தகைய இரகசியங்கள் என்னவென்று பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பு அதில் உள்ள தீமைகளையும் அனைவரும் அறிந்ததாக வேண்டு ம். அது என்னவென்றால், உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு அச்சமு ம் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடைய து. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆப த்தை விளைவிக்கக் கூடியது. அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்று ம் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சரி, இப்போது அதன் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போமா!!!

எடை கூடுதல்

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறித ளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கு ம்.

செரிமானம்

கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்தி ற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்று ம் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவா ய் விளங்குகிறது.

சரும பாதுகாப்பு

வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மே லும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனு டன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

கீழ்வாதம்

இங்கு இதை இரண்டு கோணங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உ ருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விள ங்குகிறது. வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்தி ற்கு நிவாரணியாக இருக்கிறது. அனால் இதில் ஒரு சங்கடமும் உண்டு. ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிக ளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். இது வே கீழ்வாதம் உள்ளவர்களுக்கோ கேடாக போய் முடியவும் வாய்ப்பு ள்ளது.

அழற்சி/வீக்கம்

உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சி யை சரி செய்யும்.

வாய் புண்

வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவி னால் நிவாரணம் கிடைக்கும்.

மூளை செயல்பாடு

மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக் கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இதய நோய்கள்

உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைக ளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளன. இது இதய ம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதி கம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும். இதனால் இதயத் தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக் கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்த உணவு அல்ல.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும். ஏனென்றால் இதில் சுலபமாக செரிமா னமாகிவிடும் ஆற்றல் இருக்கிறது. இருப்பினும் இதை அதிகமாக உட் கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலின் உள்ளே செல்லுவதால் வயி ற்றுப்போக்கு அதிகரிக்கச் செய்யும்.

எரிகாயம்

உருளைக்கிழங்கின் சாறை, எரிகாயம், சிராய்ப்புகள், சுளுக்கு போன் றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம்.

தோல்நோய்களை குணப்படுத்தும் பீர்க்கங்காய்

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்து வ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித் து உண்ண வேண்டும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவு ப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத் து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறி யாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்:

கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், வைட்டமின் ஏ,சி, கொழுப்பு, புரத ம், ஃபைட்டின், அமினோஅமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்ற வை காணப்படுகின்றன.

முழுத்தாவரமும் மருந்து

இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. கசப்பான மருந்தாகும். விதை கள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதிமருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். இலைகள் பொடிக் கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும், கண் வலிக்கு இலை களின் சாறு பயன்படும். வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

நீரிழிவு குணமடையும்

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடு படுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இட ங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந் தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்ல து. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்கா கவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படும்.

நாள்பட்ட புண்களை குணமாக்கும்

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க் கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் மூத்திரக்கடு ப்பை நீக்கும். மிதமான பேதி மருந்து. மூச்சுத்திணறல் நோய்க்கு நல்ல மருந்து, மண்ணீரல் பெரிதானதை குணப்படுத்தும். மலை ஜாதியினர் இந்த மருந்தை வலிப்பு நோய், மூச்சுப்பிடிப்பு, புண்கள், சிரங்குகள் ஆகி யவற்றில் பயன்படுத்துவர். கனிகள் – கசப்பான நன்மருந்து, பேதி மரு ந்து, நோயை ஆற்றும், வாந்தி மருந்து.

தக்காளியில் உள்ள வியக்கத்தக்க 9 நன்மைகள்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி. இதில் உள்ள சிறப்பம்சமே இதனை பச்சையாகவே உண்ண லாம். அப்படிப்பட்ட தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான். அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. சரி அது ஏன் ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது என்பது உங்களுக்கு தெரியு மா?… அதிலுள்ள வைட்டமின் சி சத்தின் காராணமாகவா? குறைந்த கலோரிகள் உள்ளதாலா? கொழுப்பு இல்லாததாலா? ஆம்! ஆம்!! ஆம்!!! ஆனால் அதையும் தாண்டி இன்னமும் கூட சில காரணங்கள் உள்ளது.

சரி, தக்காளி ஏன் ஆரோக்கியமான தேர்வாக உள்ளது என்பதை பற்றி பார்க்கலாமா?

சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கி றது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசி யம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.

இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமு ம் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.

சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதை யும் மீறி இன்னும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

ஆரோக்கியமான சருமம்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது. அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படா மல் தடுக்கும்.

வலுவான எலும்புகள்

வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்கா ளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும். மேலு ம் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.

புற்றுநோய்க்கு எதிராக போராடும்

இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் குணத் தை கொண்டவ. மீண்டும் லைகோபீன் தான் இதற்கும் துணை புரிகிறது. அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்று நோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற பல வகை யான புற்றுநோய்களில் இருந்து காக்கும். அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்பு கோளாறுகளை எதிர்த்து போராடும் வைட்டமி ன் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் தக்காளியில் உள்ளது.

நீரிழிவு

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்தி ருக்கவும் தக்காளி உதவுகிறது. ஏனெனில் தக்காளியில் குரோமியம் வளமையாக உள்ளதால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

பார்வை கோளாறு

தக்காளி கண் பார்வையையும் மேம்படுத்தும். தக்காளியில் உள்ள வை ட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வரா மல் தடுக்கும். மேலும் இது குணப்படுத்த முடியாத கோளாறான மாக் குலர் டி-ஜெனரேஷன் வரும் ஆபத்தையும் தடுக்கும்.

பொலிவான கூந்தல்

கூந்தலைக் கூட தக்காளி அழகாக காட்ட உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கு ம். கூந்தல் உதிர்தலுக்கு தக்காளி உதவவில்லை என்றாலும் கூட, இருக்கும் கூந்தலை அழகாக காட்ட உதவும்.

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்கள் உருவாவதை தடுக்கும்

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தக்கற்கள் உருவாவதையு ம் தக்காளி தடுக்கும். அதிலும் தக்காளியை கொட்டை இல்லாமல் உண்ணுபவர்களுக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக் கற்கள் உருவா வது தடைபடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.

கடுமையான வலி

கடுமையான வலிகளுக்கு தக்காளி ஒரு நிவாரணியாக விளங்குகிறது. லேசானது முதல் கடுமையான வலியை (கீல்வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் லட்சக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா? அப்ப டியானால் தக்காளி உங்களுக்கு உதவி புரியும். தக்காளியில் உள்ள பயோஃப்ளேவோனாய்ட்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் அதிகமாக உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

கடுமையான வலி என்றால் அதில் கடுமையான அழற்சியும் அடங்கும். அதனால் அழற்சிக்கு எதிராக போராடினால் இவ்வகை வலியில் இருந் து நிவாரணம் கிடைக்கும்.

எடையை குறைக்க…

தக்காளி உடல் எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறை க்க டயட்டில் இருந்தால், கண்டிப்பாக தினமும் பல தாக்காளிகளை சே ர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த உணவாக விளங்கும் இது, சாலட் மற்றும் சாண்ட்விச்சாகவும் விளங்கும். தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால், அவை எடையை குறைக்க உதவுவதோடு, வயிற்றையும் நிறைக்கும். மேலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.

இறைவன் தந்த வரப்பிரசாதம் பசலைக்கீரை

பசலைக்கீரையை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என் று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பச லைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. இதனால் குழந்தைகளின் உட லில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

அதுமட்டுமின்றி, பசலைக்கீரையில் வளமான அளவில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் இரத்தசோகையில் இருந்து விடு படலாம். மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள். முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக்கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

இங்கு அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மை களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இந்த கீரையை உணவில் சேர்க்காமல் இருக்கமாட்டீர்கள்.

கலோரி குறைவானது

பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

அதிகப்படியான வைட்டமின்களைக் கொண்டது

பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இத னால் பல்வேறு நோய்த்தொற்றுகளதன சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்தது

தினமும் ஒரு கப் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், மல ச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பது

பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலு ம் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக் கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

பசலைக்கீரையில் ஃப்ளேவோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட் டோ நியூட்ரியண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

இரத்த அழுத்தம்

இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத் தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஆரோக்கியமான இதயம்

ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர் த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ் ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.

அழகான சருமம்

பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக் கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சி யில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனை களான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கி றது.

பார்வைக் கோளாறைத் தடுக்கிறது

பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்ச னைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்

பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமே கா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத் தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.

எலும்புப்புரை/ஆஸ்டியோபோரோசிஸ்

ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் கே வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலி மையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியோகால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.

மூட்டுவலி/ஆர்த்ரிடிஸ்

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பச லைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்.

இரத்த சோகை

பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதனை தின மும் உட்கொண்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஏதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இல்லாமல், எந்த ஒரு வீட்டையும் பார்க்க முடியாது. பெண்களின் சமையலறை ஆகட்டும் அல்லது அலங் கார பொருட்கள் ஆகட்டும் அல்லது மருந்து பெட்டி ஆகட்டும், இவை அனைத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு சமையலில் பயன்படுத்த அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுகிறது. மேலும் தலைக்கு தேய்க்க எண்ணெய் வடிவமாகவும் பயன்படுகிறது. இத்தனை விஷயத் தில், இதனுடைய சேர்க்கை இருப்பதற்கு காரணம், இதன் மருத்துவ குணங்களே ஆகும். எந்த ஒரு வடிவத்தில் இதை பயன்படுத்தினாலும், அதற்கேற்ப பயன்கள் கண்டிப்பாக இருக்கும். சரி முதலில் நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயின் பயன்களை பார்க்கலாம்.

இத்தகைய தேங்காய் எண்ணெய் அருமையான நறுமணத்தை மட்டும் கொடுப்பது இல்லை. அதையும் மீறி தலை முடியை, மேகத்தினை போ ல் மென்மையாக வைக்கவும் உதவும். இதற்கு அதனுடைய ஈரப்பத குணாதிசயம் தான் முக்கியமான அம்சமாகும். இரசாயனத்தை பயன்ப டுத்தி முடியை நேராக்கியவர்கள் மற்றும் இயற்கை முடி உடையவர்க ளுக்கும் கூட, முடி நன்றாக வளரவும், உறுதியாக இருக்கவும் ஈரப்பதம் அவசியம் அல்லவா? அதற்கு உறுதுணையாக இருக்கிறது தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இப்போது அவைகளில் சில வற்றை பார்க்கலாமா!!!

நீரிழிவு

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனா ல் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவ ற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.

சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத் திருக்கும்

உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுட ன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும்

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகி றது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும் புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும்

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப் போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகி னால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசிய ம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங் குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நர ம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்

உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசி யை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள் ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும்

செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத் தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வா தம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும்

இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கல ந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள் ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பி ன் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலி ல் அதிகம் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும்

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டிய டிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத் த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செய ல்பாடுகளை குறைக்கும் என்று ஒரு தொடக்க நிலை ஆய்வு ஒன்று கூறுகிறது.

நன்றி போல்ட் ஸ்கை

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: