Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிறித்துவ மதத்தை பரப்ப வந்து, தமிழுக்கு சேவை செய்த கிறித்துவர்!!

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் தலைநகரமான ரோமி லிருந்து இந்தியாவிலுள்ள தமிழகத்திற்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப பெஸ்கி (முழு பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி) எனும் பாதிரியார் வந்தார். கிறுஸ்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த பாதிரியார் veera mamunivar அவருடைய தாய் மொழி யிலோ அல்லது ஆங்கிலத்திலோ கிறிஸ் துவத்தை பரப்பினால் மக்களுக்கு எப்படி புரியும் என்று நினைத்து, அவர் தமிழ் பயி ன்று தமிழ் மொழியிலேயே பரப்பினால் நல்ல பலனளிக்கும் என்று தமிழை கற்க்க தொடங்கினார். அவர் மக்களோடு மக்களா க எளிய முறையில் பழகி பேச்சு தமிழை நன்றாக கற்று க்கொண்டார் பிறகு தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். மதத்தை பரப்பும் நோக்கத்துடன் வந்த பாதிரியார் தமிழின் இலக்கண இலக்கியங் களையும் கற்க்க ஆவல் கொண்டார் பிறகு அதனையும் சிற ப்புடன் கற்று முடித்தார்.

தமிழின் இலக்கண இலக்கியங்களின் சிறப் புத்தன்மையை கண்டு தன்னை ஒரு தமிழ ராகவே நினைத்து அவர் பெயரையும் தை ரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதனாக மாறிய பெஸ்கி, தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் மதம் பரப்புவதை விட்டு தமிழுக்கு சேவை செய்வதே தம் கடமையாக கொண்டார். இவர் தமிழுக்கு ஆற்றி ய தொண்டிற்க்காக மதுரை தமிழ்ச்சங்கம் இவருக்கு வீரமா முனிவர் என்ற பெயரை சூட்டி சிறப்புச் செய்தனர். அன்று முதல் கிஸ்த்துவ மதத் தை பரப்ப வந்த பெஸ்கி எனும் பாதிரியார், வீரமா முனிவர் என்று மக்க ளால் அன்புடன் அழைக்கப்ட்டார்.

தமிழுக்காக வீரமாமுனிவர் செயதசேவை கொஞ் சம் நஞ்சம்மில்லை. அந்த காலத்தில் தமிழ் வார் த்தையின் பொருள் அறிய நூல்கள் ஏதும் இல் லை. நிகண்டுகள் என்று சொல்லக்கூடிய செய்யு ள் வகை நூல்களே சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். தமிழின் வார் த்தைக்கு மிக சுலபமாக பொருள் கண்டறிய சதுரகராதி என்ற முதல் தமிழ் -தமிழ் அகராதியை உருவாக்கிய பெருமை வீரமா முனிவரையே சேரும். தமிழ் இலக் கணங்கள் ஐந்தினையும் சூத்திரங்களாக தொகுத்து அத ற்கு உரையும் எழுதினார்.

தேம்பாவணி என்ற இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு பற்றி வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட முதல் பெரிய செய் யுள் வகை நூலாகும். இந்நூல் பல தமிழ் புலவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே வெளியிட ப்பட்டது. அரங்கேற்ற நிகழ்வின்போது பல தமிழ் புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றும் தளராமல் பதில் அளித்தாராம். மேலும் ஒரு புல வர், கிண்டலாக எல்லாம் தெரியும் என்கிற வீர மாமுனியே உமக்கு வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டதற்கு வீர மாமுனி சிறிதும் யோசிக்காமல் முப்பத்தி மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்ப திமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திர ங்கள் இருக்கிறது என்று கூறி சந்தேகமிருந்தால் எண்ணி ப்பாருங்கள் என்றாராம், இந்த பதிலை கேட்டு அரங்கம் முழுவதும் சிரிப்பொலி கிளம்பியதாம். தேம் பாவணி நூலின் சிறப்பை பாராட்டி வீரமாமுனி என்ற பெஸ்கி பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித் தார்களாம்.

பெஸ்கி என்ற வீரமாமுனி கிராம மக்களிடையே சென் று கிராம மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம் பரிய கதைகளையும் நாட்டுப்புற பாடல்களையும் கேட் டறிந்தார். இந்த அனுபவத்தின் மூலமாக பரமார்த்த குரு என்ற கதைகளை நமக்கு தந்த பெருமை அவரையே சேரும் இந்த கதைகளின் மூலக்கரு என்னவென்றால் எதையும் யோசி க்காமல் செய்தால் என்ன துன்பங்கள் மற்றும் அவமானங்கள் நேரிடும் என்பதை நகைச்சுவையுடன் கூறுவதே பரமார்த்த குரு கதைக ள். மேலும் இக் கதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

எங்கிருந்தோ வந்த கான்ச்டன் டைன் சோசப்பு பெஸ்கி பாதிரி யார் வீரமா முனிவராக மாறி தமி ழுக்கு செய்த சேவையை நினைத்தால் மெய்சிலி ர்க்க வைக்கிறது. அவ ருடைய வாழநாள் காலம் நவம்பர் 8, 1680 – பிப் ரவரி 4, 1747

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: