Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முரண்டு பிடித்த‍ முரட்டுக் குதிரையை சமாதானத்தால் அடக்கிய முரட்டுக்காளை (ரஜினி)!

கோச்சடையான் பட விளம்பரங்களில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கி யத்துவம் கொடுக்காததினால் அவர் வருத்தத்தி ல் இருப்பதை, ரஜினியிடம் மோதத் தயாராகும் கே.எஸ்.ரவிக்குமார் என்று செய்தி வெளியி ட்டிருந்தோம் அல்லவா?

அதன் பிறகு பல காட்சிகள் அரங்கேறி இருக்கி ன்றன.

திரையுலகில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கை யிலும் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்று நினைக்கும் ரஜினி உடனே கே.எஸ்.ரவிக் குமாரை தொடர்பு கொண்டு பேசினாராம். அப் போது அவரிடம் பிடிகொடுக்காமல் ஏனோதானோவென்று பேசியிருக்கி றார். எனவே ரவிக் குமாரை சமாதானப்படுத்த தானே நேரில் சந்திக்க வருவதாக சொல்லி யிருக்கிறார் ரஜினி. அதன் பிறகே இறங்கி வந்திரு க்கிறார் ரவிக்குமார்.

நீங்கள் வர வேண்டாம் நானே வருகிறேன் என்று ரஜினியைத் தேடிப் போயிருக்கிறார். அங்கே தன் மனக்குமுறலையும், மாதேஷ் செய்த பாலிடிக் ஸையும் சொல்லி இருக்கிறார். கூல் கூல் என்று வழக்கம் போல் அவரை சமாதானப்படுத்தி இருக் கிறார் ரஜினி. அதோடு இனி வரும் கோச்சடையா ன் பட விளம்பரங்களில் சௌந்தர்யாவின் பெய ருக்கு நிகரான முக்கியத்துவம் உங்களுக்குக் கொ டுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறாராம் ரஜினி. அதுவரை முரண்டு பிடித்த (முரட்டுக் குதிரை) ரவிக்குமார் அதன் பிறகே சமாதான மாகி திரும்பி இருக்கிறார்.

படித்த செய்தி!

Leave a Reply