Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (27/10/2013): உன் தங்கையின் கன்னித்திரையே இன்னும் விலகவில்லை;

அன்புள்ள அக்காவிற்கு—

என் வயது 38. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் எனக்கு குழந் தை இல்லை. என் குடும்பத்தில், இரு அண்ணன், ஒரு தங்கை என, மொத்தம் நான்கு பேர். என் தங்கையின் வாழ்க்கை யில் நடக்கும் பிரச்னைகள் குறித்து தங் களிடம் ஆலோசனை கேட்கிறேன்.

என் தங்கையின் வயது 32. ஆனால், பார்ப் பதற்கு 17 வயது போல் காணப்படுவாள். அவளுக்கு திருமணமாகி பத்து ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை. அவள் வட மாநிலத்தில் வசிக்கிறாள். அவளுடைய கணவர், தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர். இதை எங்களிடம் மறைத்து, என்தங்கையை மணந்துள்ளார் என்பதை, நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் அறிந் தோம்.

நான்கு வருடங்களுக்கு முன், அவளுக்கு மாதவிலக்கு அதிகமாக இருக்கவே, டாக்டரிடம் காண்பித்தோம். “இந்த பெண்ணிற்கு திரு மணம் செய்து வைத்தால், எல்லாம் சரியாகி விடும்’ என்று டாக்டர் கூறவே, அதிர்ச்சியடைந்தோம். இப்போது, அவளுக்கு, வலிப்பும் வருகிறது. அவள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதை நினைத்து ரொ ம்ப கவலைப்படுகிறேன்.

வரதட்சணை போதவில்லை என, சண்டை போடுகின்றனர் அவளது மாமியார் வீட்டினர். அவளுடைய நாத்தனார், “உனக்கு ஏன் இன்னு ம் குழந்தை பிறக்கவில்லை?’ என கேட்டதற்கு, “அவரைக் கேளுங் கள்’ என்றிருக்கிறாள். “நீ எப்படி அப்படி சொல்லலாம். நீ தான் வீக் காய் உள்ளாய். உன் கர்ப்பப்பை வீக்காக உள்ளது…’ எனக் கூறி, சண்டை போட்டுள்ளார் என் தங்கை கணவர்.

என் தங்கையும் கவலையால் சரியாக சாப்பிடுவதில்லை. வலிப்புக் காக மாத்திரையும் சாப்பிடுவதில்லை. கேட்டால், “வலிப்பு வருவதி ல்லை’ என்கிறாள். இந்த வாழ்க்கையிலிருந்து, அவளை விடுவித் து, மறுமணம் செய்து வைக்கலாம் என, இருக்கிறேன். ஆனால், என் பெற்றோரோ, என் கணவரோ இதற்கு முயற்சி எடுக்க மாட்டார்கள். என்னிடம் பணமோ, ஆள் பலமோ இல்லை.

நான் என்ன செய்ய வேண்டும். என் தங்கையின் வாழ்விற்கு நல்வழி கூறுங்களேன்.
—இப்படிக்கு,
அன்பு தங்கை.

அன்பு தங்கைக்கு—

உன் கடிதம் கிடைத்தது.

உன் தங்கைக்கு, திருமணமாகி பத்து ஆண்டு ஆகியும் இன்னும் குழ ந்தை பிறக்கவில்லை என்றும், அவளது கணவர் ஆண்மையற்றவர் என்றும், அதை மறைக்க, அவர் மனைவியின் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருக்கிறதென்று, இவள் மீதே பழியைப் போடுவதாக வும் எழுதியிருக்கிறாய்…

ஏற்கனவே வலிப்பு வருவதாகவும், உதிர போக்கு அதிகமாக இருப்ப தாகவும், டாக்டரிடம் கொண்டு போய் காட்டியபோது, அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்த டாக்டர், “எல்லாம் திரு மணம் ஆனால் சரியாகி விடும்…’ என்று கூறியதாகவும் எழுதியிருக் கிறாய்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், உன் தங்கையின் கன்னித் திரையே இன்னும் விலகவில்லை; காரணம், கணவர் ஆண்மையற் றவர். ஆதலால், உன் தங்கை இன்னும் மலராமலேயே இருக்கிறா ள். 32 வயதாகிற உன் தங்கைக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்புகிற நீ, மிகப்பெரிய பொறுப்பை உன் தலையில் சும க்க வேண்டியிருக்கும் என்பதை, இப்போதே சொல்லி விடுகிறோன்.

நடுவில் ஒரு கேள்வி… உன் தங்கையின் கணவர் ஆண்மையற்றவ ர். ஆதலால், அவளுக்கு 32 வயதாகியும், குழந்தை இல்லை. உனக்கு 38 வயதாகியும், திருமணமாகி 18 வருடமாகியும் இன்னும் குழந்தை இல்லை என்று எழுதியி ருக்கிறாயே… உன்னை குத்திக் காட்டுவத ற்காக இதை எழுதவில்லை. ஒருவேளை உங்கள் இரு வருக்குமே கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறு இருக்கிறதா என்பதை, சரிவர தெரிந்து கொண்டாயா?

உன் தங்கைக்கு அப்படியே திருமணம் செய்து வைப்பதாக இருந்தா லும் – முதலில் அவள் சம்மதிக்கிறாளா என்பதை தெரிந்து கொள். தன் கணவரை அவள் விவாகரத்து செய்ய வேண்டும். விவாகரத் துக்கான காரணத்தை – அதாவது, கணவர் ஆண்மையற்றவர் என்ப தை, மருத்துவ சான்றிதழ் மூலம் நிரூபிக்க வேண்டும்.

இதன்பின், கோர்ட்டில் வழக்கு முடிந்து, வெளியே வந்து, இன்னொ ரு ஆண் பிள்ளையைத் தேடி இவளை மணம் முடிப்பது என்பதும், இவளை நல்லபடியாக அவன் வைத்துக் கொள்வானா என்பதும், விடை காண முடியாத கேள்வி.

இதைவிட உன் தங்கையை நல்ல லேடி டாக்டரிடம் அழைத்துப் போய், அவளது அதிக உதிர போக்குக்கான காரணத்தை கண்டுபிடி த்து, சரி செய். வலிப்பு நோய் வராமல் இருக்க, முடிந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கப் பார்.

இதற்கு மேலும் ஒரு குழந்தை வேண்டுமென்று அவள் ஆசைப்பட் டால் – அண்ணன் குழந்தை, தம்பி குழந்தை என்று எடுத்து வளர்த்து, பின் அவர்களிடமே பேச்சு வாங்குவதை விட, ஆதரவற்ற குழந்தை ஒன்றை எடுத்து வளர்க்கச் சொல்.

உன் அருமைத் தங்கை உடல்நலம் தேறி, தனக்கென்று ஒரு குழந் தையை தத்தெடுத்து மார்பிலும், தோளிலும் சாய்த்து சீராட்டுவதை பார்த்து சந்தோஷப்படு.

— அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: