Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் !?

உங்கள் தமிழ் அறிவுக்கு (விதை2 விருட் சம் விடுக்கும்) ஒரு சவால் !? என்ற வகையினம் (கேட்ட‍கரி) ஒன்றை விதை2விருட்சம் இணையம் புதியதாய் தொடங்க காரணம், பொதுவாக நம் தமிழர்கள், தமிழில் உள்ள‍ ழ, ற, ர, ள, ல, ன, ண, ந போன்ற எட்டு எழுத்துக்களின் உச்ச‍ரிப்பை சரியாக உச்ச‍ரிக்காமல் தமிழின் இனிமையை கெடுக்கின்றனர்.

உதாரணமாக

இன்று பள்ளியில் வள்ளி, மிகவும் அழகாக இருந்தாள்! என்று  உச்ச‍ரிக்க‍ச் சொன்னால் . . .

இன்று பல்லியில் வல்லி மிகவும் அலகாக இருந்தால்! என்று தவறாக உச்ச‍ரிக்கின்றனர்.

முதல் வரியில் உள்ள‍ பொருள்,

பள்ளியில் வள்ளி அழகாக இருந்ததாக‌ சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் இரண்டாவது வரியின் பொருளோ

பல்லி –   சுவற்றில் காணப்படும் ஒரு சிற்றுயிர்.  
வல்லி – இந்த சொல்லுக்கு பொருளே கிடையாது.
அலகாக – இந்த வார்த்தை இரண்டு பொருட்களை தருகிறது.
     1. பறவையின் வாய்ப்ப‍குதியை அலகு  
     2. அளவை கணக்கிடும்முறை
இருந்தால் –  அழகாக இருந்தாளா என்ற சந்தேகத்தை கிளப்பும் சொல்

நமது தமிழர்கள் பலர் தவறாக உச்ச‍ரிக்கும் பொருள் படி பார்த்தால்,

பல்லி என்ற சிற்றுயிர், வல்லி அளக்கும் பறவையின் அலகாக‌ இருந்தா ல் . . .
என்ன, இந்த வரியினை படித்த‍வுடன் உங்களுக்கு சிரிப்பு வருகிறதல்ல‍ வா?

நீங்கள் பேசும்போதும் சரி எழுதும் போதும் இந்த தவறை நீங்கள் செய் திருந்தால், உங்களது பேச்சினை கேட்பவர்கள் அல்ல‍து உங்களது எழுத் துக்களை படிப்ப‍வர் உங்களை கேலி செய்வார்களே! நன்றாக சிந்தியுங் கள்! உங்கள் தவறை திருத்திக் கொள்ளுங்கள்.

அத்தகையவர்களுக்காகவேதான் துவக்கப்பட்ட‍து இந்த வகையினம் ஆகும். இந்த வகையினத்தில் இரண்டு வாக்கியங்கள் அமைத்திருப் போம். இந்த இரண்டில் எது சரியான வாக்கியம் எது தவறான வாக்கியம் என்பதை நீங்கள் சுட்டிக்காட்ட‍ வேண்டும் அதுமட்டு மல்ல‍ இந்த இரண் டு வாக்கியங்களுக்கும் சரியான வாக்கியத்திற்கும் தவறான வாக்கியத் திற்கும் வரும் பொருளை, நீங்கள் உங்கள் கருத்துக்களாக தெரிவிக்க‍ வேண்டும். இதுதான் உங்களின் தமிழ் அறிவுக்கு விதை2விருட்சம் இணையம் விடுக்கும் சவால்!

இதோ அந்த வாக்கியங்கள்

வெள்ள‍த்தில் வெல்ல‍ம் கரைந்ததா !

 

வெல்ல‍த்தில் வெள்ள‍ம் கரைந்ததா !

3 Comments

  • வெள்ள‍த்தில் வெல்ல‍ம் கரைந்ததா !
    வெள்ளம் என்பது தண்ணீர் அதிகமாய் வரும் வெள்ளப் பெருக்கு என்பதை குறிக்கிறது.வெல்லம் என்பது இனிப்பிற்காக சேர்க்கபடுவது.இதில் அடிக்கிற வெள்ளத்தில் வெல்லம் கரைந்ததா ! .இதுவே சரியான வாக்கியம்.

  • வெல்ல‍த்தில் வெள்ள‍ம் கரைந்ததா ! இதில் வெல்லம் என்பது இனிப்பிற்காக சேர்க்கப்படுவது.வெள்ளம் என்பது தண்ணீர் அதிகமாய் வரும் வெள்ளப் பெருக்கு என்பதை குறிக்கிறது.வெல்லத்தில் வெள்ளம் கரைந்ததா என்பது இனிப்பில் வெள்ளபெருக்கு கரைந்ததா என்பது தவறான வாக்கியம்…

  • Raju, Scientist, Hyderabad

    Mudhal Vaakiyam Sariyaanadhu.
    Meaning of each sentence:
    1.Did Jaggery(Vellam-Inippu) dissolve in flood?
    2.Did flood dissolve in Jaggery?
    First one is possible. Second one is not possible.
    So, the first sentence is correct.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: