என்னங்க தலைப்பை பார்த்தவுடன் குழப்பமா இருக்குதா! முதல்ல அப்
படித்தான் இருக்கும் போகப் போக தெரியும்
காஜல் தனது தொடக்க காலக் கட்டத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த கதை ஊரறிந்த ரகசியம். இப் போது சங்கதி அதுவல்ல கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்க காஜல் சம்மதித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இயக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் கமல் நடிக்கிறார். இந்த திரைப்படதின் இயக் குநர்
யார் தெரியுமா? கமலின் நண்பருமான, குணசிந்திர நடிகருமா ன ரமேஷ் அரவிந்த் தான், இது தமிழில் இவர் இயக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்திற்கு வழக்கம்போல் கிரேஸி மோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடி யாக நடிக்க மறுத்து விட்டார் காஜல் என்பது நினைவிருக்க லாம். ஏன் இந்த மாற்றம்? “ முதலில் அவர்கள் தேதி கேட்ட து செப்டம்பரில். அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. ஆனால் இப்போது படம் நவம்பர் – டிசம்பருக்கு தள்ளிப் போயிரு க்கிறது. அதனால் கால்ஷீட் கொ டுத்து விட்டேன்,” என்கிறார் காஜல். மேலும் இதி ல் காஜல் அகர்வாலின் சக்களத்தியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவலாக கசிந்துள்ளது.