Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எங்க அண்ண‍னை சீண்டினால் அம்மா பக்கம் சாய்வார்! – கருணாநிதிக்கு மிரட்டல் விடுக்கும் அழகிரி தரப்பு

அழகிரியின் குடைச்சல் கருணாநிதியை வாட்டி எடுக்கிறதாம். அவருக் குப் பிடிக்காத பொன். முத்துராமலிங்கத்து க்கு ஏற்காடு தொகுதி பொறுப் பாளர் பதவி. மதுரையில் தன்னை அழைக்காமல் தலை மைக் கழகத்தின் சார்பில் மகளிர் அணிக் கூட்டம் நடத்தியது ஆகியவற்றால் கொந்த ளித்துப் போனார் அழகிரி. அவரைப் போல வே அவரது ஆதரவாளர்க ளையும் கொந் தளிக்க வைத்தது.

மன்னன் உள்ளிட்ட சிலர் மட்டும் அழகிரி யைப் பார்த்துப் பேசி உள்ளனர். ‘எல்லாமே அம்மாவுக்காக பொறுமையா இருக்கேன்’ என்றாராம் அழகிரி. முதலில் அவர்களுக்கு ப் புரியவில்லையாம். ‘தயாளு அம்மாவை ச் சொல்றேன்யா…’ என்றாராம் அழகிரி. ‘என்னைச் சீண்டிக்கிட்டே இருந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெ ரியாது’ என்றாராம் அழகிரி. ‘அண்ணனைச் சீண்டினா அவர் அம்மாவை ப் பார்த்துடுவார்…’ என்று அழகிரி ஆட்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்!”

எந்த அம்மாவை என்று விவரமாக கேட் கும்போது அவர்கள் சொல்வது ஜெயலலி தாவைத்தானாம். ‘தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் அண்ணன் எந்த முடிவு ம் எடுப்பார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு எந்தப் பதவியையும் எதிர்பார் க்கவில்லை. அதற்காக அவரைச் சீண்டு வதையும் சகிக்கமாட்டார். மேலும், ஸ்டாலினுக்கு புதிய பதவி எதுவும் தரக் கூடாது என்பதுதான் அண்ணனின் நிலை’ என்கிறார்கள் அழகிரி ஆட்கள்.” ”ஆனாலும் ஸ்டாலின் ஆட்கள், ‘டிசம்பர்ல தளபதி, தலைவர் ஆகிடுவா ர்’ என்று சொல்லி வருவதை அழகிரி ஆட்களால் சகிக்கமுடிய வில்லை.

படித்த செய்தி 

One Comment

  • Priyan

    thayavu senju intha maathiri news-a konjam carefull-a podavum….yenna jayalalitha payappaduvathu…thi.mu.ka..vaip paarththu alla…annan azhagiri-yap paarththu thaan….intha news dinamalar paper-la poda vendiya news….thayavu senju vidhai2virutcham inime ippadi pannaatheenge…

Leave a Reply