Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பின்ன‍ணி பாடகி ஆக அவதாரம் எடுத்த‍ இல்ல‍த்தரசியின் வியத்தகு பின்ன‍ணி! — வீடியோ

கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் யூடியூபில் வெளியானதால் சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். 23 வயதான சந்திரலே கா அடூர் கேரளாவைச் சேர்ந்தவ ர். குடும்பத்தில் நிலவிய வறு மை காரணமாக சந்திரலேகாவா ல் உயர் கல்வி கற்க முடியவில் லை. இவருக்கு இளம் வயதிலே யே நல்ல குரல் வளம் உண்டு.

ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு இவருக்கு வசதி இல் லை என்பதால் பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு தன் குழந்தையை தூங்க வைப்பதற் காக பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடியுள்ளார். குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி இவர் பாடியதை குடும்ப நண் பர் ஒருவர் காணொளியில் பதிவு செய்துள்ளார்.

மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த காணொளி கடந்த மாதம் யூ டியூபில் வெளியானது. ஒரே மாதத் தில் ஏழு லட்சம் பேர் பாக்கும் அள வுக்கு இந்த காணொளி பிரபலமானது. இதனைத் தொடர்ந்து சந்திரலே கா இனிமையான குரலில் பாடுவதை பார்த்த மலையாள சினிமா இயக்கு னர்கள் இப்போது தங்கள் படத்தில் அவரை பாட வைப்பதற்கு அவரின் வீட்டு வாசலில் வரிசையில் நிற்கின்றனர்.

மலையாள இசையமைப்பாளர் டேவிட் ஜான் தான் இசையமைக்கும் புதிய படத்துக்கு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வை க்க திட்டமிட்டிருந்தார். சந்திரலேகாவின் பாடலை யூடியூபில் பார்த்த பின்னர் தன் முடிவை மாற்றி அவரையே தன் படத்துக்கு ஒப்பந்தம் செ ய்துள்ளார். மேலும் சில இசையமைப்பாளர்களும், சந்திரலேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரபல பின்னணி பாடகி சித்ரா, முதல்வர் உம்மன் சாண்டியும் ஆகியோர் இவரை பாராட்டியுள்ளனர். யூ டியூபால் பிரபலமடைந்துள்ள சந்திரலேகாவுக்கு எந்த ஒரு சமூக வலைத் தளத் திலும் கணக்கு இல்லை, மின்னஞ்சல் முகவரியும் இல்லை என்பது குறி ப்பிடத்தக்கது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: