Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரோஜா செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

மலர்களின் அரசி என அழைக்கப்படும் ரோஜா வீட்டுத் தோட்டங்களிலு ம், பசுமைக்குடில்களிலும் மட்டும ல்லாது கொய் மலராகவும் பணப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகி றது.

இத்தகைய ரோஜாவில் சாறு உறி ஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் மக சூல் இழப்பைத் தடுக்க தகுந்த நட வடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமானது.

ரோஜாவை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் சாறு உறிஞ்சு ம் பூச்சிகளான அசுவிணி மற்றும் இலைப்பேன் ஆகியவை மட்டுமே மகசூலை குறைப்பதில் முக்கிய காரணியாக உள்ளன.

இலைப் பேன்:

இளம் மற்றும் வளர்ச்சியடைந்த இலைப்பேன்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் அடியில் இருந்து கொண்டு இலை களைச் சுரண்டி பின்ன ர் சாற்றை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலை களின் மேல்பரப்பில் வெண்ணிற கோடுகள் காணப்படும். மேலும், அதிக மான தாக்குதலுக்கு உள்ளான இலைகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைப் பேன்கள் தாக்கு தலுக்கான பூவிதழ்களின் ஓரம் காய்ந் தது போன்ற தோற்றமளிக் கும். இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் போது பூ விதழ்கள் உதிர்ந்து விடும். இளம் பூச்சியானது சிவப்பு நிறத்திலு ம், வளர்ச்சியடைந்த பூச்சி கள் கருப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்ப டும்.

அசுவிணி :

இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இளந்தளிர் மற்றும் பூ மொட்டுகளில் கூட்டமாக இருந் து கொண்டு சாற்றை உறிஞ்சும். இதனா ல் பாதிக்கப்பட்ட இளந் தளிர் மற்றும் இலைகள் சுருண் டும், சிறுத்தும் காணப்படும். பூ மொட்டுகளின் வளர்ச்சி குறைந் து காணப்படும். மேலு ம், தாக்க ப்பட்ட பூக்களின் இதழ்கள் வெளி றிய நிறத்தில் காணப்படும். அதி கமான தாக்குதலுக்கு உள்ளான மொட்டுகள் விரிவடையா லே யே உதிர்ந்து விடுகின்றன. இளம் பூச்சிகள் வெளிறிய பச்சை நிறத்தி லும், வளர்ந்த பூச்சிகள் கருப்பு கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட இளந்தளிர்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளை வெட்டி அழித்துவிட வேண்டும். தாவர பூச்சிக் கொல்லியான வேப்பெ ண்ணெய் 3 சதவீத கரைசலைத் தெளித்து இலைப் பேன், அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம். இல்லை யெனில் டைமீத்தோயேட் 30 இசி 2.5 மி.லி அல்லது மீதைல் மெட்டான் 2 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதி கமாகும்போது இமிடோகுளோபிரிட் 0.3  மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீ ரில் கலந்து தெளிக்க வேண்டும் என திரு நெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply