இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள வலியுடன் ஒரு காதல்’’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல் .நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், ‘சிலந்தி’ ஆதி ராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன், விஜய முரளி உள்ளிட்ட திரளான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய களஞ்சியம், திரையு லகில் நடிகர் சங்கம், இயக்கு நர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல் வேறு சங்கங்கள் உள்ளன. ஆனாலும் சிறிய முதலீட்டில் இந்த ‘‘வலியுடன் ஒரு காதல்’’ மாதிரி உருவான எனது ‘‘ஊர்சுற்றி புராணம்’’ திரைப்படத்தில் இருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடிவிட்டார். இதுபற்றி எத்தனை யோ முறை மேற்படி சங்கங்களிடம் நான் புகார்கொடுத்து விட்டேன். யாரும் அதைப் பற்றி என்ன ஏது என்று கூப்பிட்டு விசாரிக்க வில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில் லை. ஒரு தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் போட்டு இந் தமாதிரி சிறிய படங்களில் முதலீடு செய்து, படம் வெளிவரும் என நம்பிக்கையில்
இருக்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசித் தீர்க்கத் தானே இது மாதிரி சங்கங்கள் உள்ளது. ஆனால் அவர்கள், அவர்களது கடமைகளை செய்வதில்லை. தமிழ் சினிமாவில் புதிய சிறு தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரி நடிகைகளால் கேள்விக் குறியாகி உள்ளது. அப்புறம் எப்படி சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினி மாவை நோக்கி வருவார்கள், தமிழ் சினிமா தொழிலாளர்கள் எவ் வாறு பிழைப்பார்கள், இதற்கெல்லாம் இது மாதிரி சங்கங்களில் முக்கிய பொறுப்பி ல் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எனது ‘‘ஊர் சுற்றி புராணம்’’ வெளிவர வேண்டும் என்று வீராவேசமாக பேசி அமர்ந்தார்.
இதற்கு உடனடியாக அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக ஏற்க னவே பேசி அமர்ந்த ஜாக்குவார் தங்கம், மீண்டும் எழுந்து இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொ ண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக் கவும் தயங்க மாட்டோம். இந்த பிரச்னைக் கு இன்றே தீர்வு காண களமிறங்குவோம், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம். இனி இதுமாதிரி பிரச்னைகளி ல் நடிகைகள் பாதியில் கழன்று கொண்டார் கள் என்றால் அவர்களிடம் பேசி மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் அல்லது அது வரை அப்படப்பிடிப்பிற்கான செலவை வட் டியுடன் வசூலிப்பது என முடிவெடுப்போம். கில்டில் செயலாளராக இரு க்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும்
செயற்குழு உறுப்பினர் எனும் பொறுப்புடன் பேசுகி றேன். தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலை வர் கேயார் சிறுமுதலீட்டு படங்களுக்கும் முக்கியத்துவ ம் அளிப்பவர், அவரிடம் உங்கள் புகாரை ஒரு முறை அளியுங்கள். நிச்ச யம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறியது அரங்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டது. நடிகைகளை செருப்பால் அடிப்போம் என தயாரிப் பாளர்கள் சார்பில் ஜாக்குவார் தங்கம் பேசியதற்கு நடிகர் சங்கத்தின் பதில் என்ன என்பது இனி தான் தெரியவரும். ஆனால் இதனை கேள்விப்பட்ட நடிகை அஞ்சலியின் ரசிகர்கள் அனைவரும் கொதித் து போயுள்ளனர். அஞ்சலிக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
படித்த செய்தி
Anjali unmaiyela yematri irundal
Directoruku aarudhal solla
Kadamaipatturekan.avar medhu
Nadavadikai thevai.
Aanaal anjali meedhu ippadi oru
Kattamaana vimarsanam thevaya
ellam fraud pasanga.. unmayavae anjali thiramai ulla penn..
ஜாக்குவார் தங்கம் என்ன பெரிய அப்பா டக்கரா? அவரை திருப்பி அதே …….. அடிக்க முடியாதா?