Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்தத் துறவியை விட அந்த இளைஞன் எத்தனைப் பெரியவன்!

ஊரெல்லாம் மக்கள் பேச்சு. தமிழர்களின் காவல் தெய்வம் அந்தப் பெரிய துறவி மகான் இந்த ஊருக்கு வரப் போகின்றார். மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு என ஆண்டவனுக்கு 40 நாட்கள் பூசனைகள் செய்யப் போகின் றார். அதுவும் 40 நாட்களும் உண்ணா நோன்போடு.

துறவி வருவதற்கு பெரிய பெரிய பெரிய விளம்பரங்கள். ஆள் உயர கட் அவுட்கள். அவர் நடந்து வருவது போல குளிப்பதுபோல. சூரிய வண க்கம் செய்வது போல.அவரது தாயாரை வணங்குவது போல. பூசனை செய்வது போல. இமயமலையில் தவம் செய்வது போல. மக்களை வாழ்த்துவது போல. பெரும் மக்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்துவது போல. பெரும் நிதி உதவி வேண்டியும் விளம்பரங்கள். ஆசிரமம் நடத்த பணம் வேண்டாமா. மக்களுக்காக வாழுகின்ற துறவிகளுக்கு மக்கள் தா னே தர வேண்டும். மக்கள் அனைவரும் அவர் அருள் வேண்டி நிற்கின் றனர். ஆனால் துறவியின் சீடர்களோ அவருக்கும் சீடர்களுக்கும் காவல்துறை பாதுகாப்புக்கோரிப் பெற்று விட்டனர். துறவிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசே கறுப்புப் பூனை பாதுகாப்புக் கொடுத்து ள்ளது.

துறவி துறவிக்கே உரிய இலக்கணத்தோ டு ஒரு கோடி ரூபாய் பெறும் வெளிநாட்டு மகிழூந்தில் வந்து இறங்குகின்றார். காவ லர்கள் துறவியின் அருகில் மக்கள் போ காமல் பார்த்துக் கொண்டார்கள். யாரால் யாருக்கு ஆபத்து நிகழும் என்று யாருக் கும் சொல்லாமல்.

துறவி செய்தித்துறை நிருபர்களைச் சந்திக்கின்றார். அதில் ஒரு நிருபர் வாய்த் துடுக்காக மகேசனின் பிரதிநிதி நீங்கள். ம்க்களை வாழ்த்த வந்தி ருக்கின்றீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியே காவற்றுரை இத்தனை பாதுகாப்பு வ‌ளையங்களை ஏற்பாடு செய்துள்ளது சரிதானா. துறவி துள்ளிக் குதித்துவிட்டார். நீ என்ன நாத்திகனா. கலகம் செய்ய வந்திரு க்கின்றாயா. உடனே காவற்றுரை இவனைக் கைது செய்யுங்கள். என்று கட்டளை இடுகின்றார். அந்த இளைஞனோ நெற்றி நிறைய திருநீற்றோ டு குங்குமத்தோடு இருக்கின்றான். உள்ளுர் காவலர்களுக்கு அவனை நன்கு தெரியும்.ரொம்ப நல்லவன். அமைச்சர்களிடமே இப்படித் தான் கேள்வி கேட்பான். என்ன செய்வது துறவியின் உத்தரவு. அவனைக் கைது செய்தனர். அவன் சிரித்துக் கொண்டே காவலர்களோடு சென் றான் . ஒரு வார்த்தை அவன் சொல் லவில்லை. காவல் அதிகாரி என்ன தம்பி இங்க வந்து இப்படிக் கேட்டி ருக்க வேண்டாமே என்கின்றார். அவன் அப்போதும் முக மலர்ச்சி யோடு தான் இருக்கின்றான். துறவி தன்னைக் கடுமையாகத் திட்டி விட்டாரே என்று கடுகளவும் வருத்தமி ல்லை. அதிகாரிகள் கேட்ட போது அவர்கள் பெரியவர்கள். கோபப்படு வார்கள் என்று நான் கருதவில்லை என்று மட்டும் சொல்லுகின்றான்.

செய்தி கேள்விப்பட்டு நான் வள்ளுவப்பேராசானிடம் சென்றேன். அவ ரிடம் சொன்னேன். இதைக் கேட்டவுடன் வள்ளுவர் சொன்னார். இச்செய்தியில் இருந்து உனக்கு என்ன தெரிகின்றது என்றார். அமைதி காத் தேன்.

அந்தத் துறவியைவிட அந்த இளைஞன் எத்தனைப் பெரியவன் பார்த் தாயா. எந்த வருத்தமும் இல்லாமல் அத்தனைக் கடுமையாக அந்தச் சாமியார் திட்டிய போதும் அதனைக் குறித்து எந்த வருத்த மும் கொள்ளாது பொறுத்துக் கொண்டா னே. அவனே துறவியைவிடச்சிறந்தவ ன்.

உண்ணா நோன்பு இருப்பவர்கள் அடுத்தவர் சொல்லுகின்ற கடுமையா ன இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்பவர்கள் பின்னால்தான் நிற்க முடியுமே ஒழிய.அவர்களுக்கு முன்னர் நிற்க முடியாது என்கின் றார்.

குறட்பா

உண்ணாது நோற்பர் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்

நானே நாணித்தான் நிற்கின்றேன்.யோகலிங்கம் அவர்களது இன்னாச் சொல்லைப் பொறுக்காமல் நடந்து கொண்டேனே.இரவு முழுவதும் எண்ணி எண்ணி உறங்கவில்லை.

– தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் அவர்கள், முகநூல்

Leave a Reply