Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு- நகங்கள் வலுவடைந்து, ஆரோக்கியமாக வளர . . .!

அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முக த்தை பராமரிப்பது என்பதுதான். இதுதான் பலரது மனதில் தோ ன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றன ர். அப்படியும் கூட அவர் களில் சிலர் நகங்களை பற்றி கவலை கொள்வதில்லை. அப்படியே அக்கறை உள்ளவர்களும் கூட, அதை அழகாக வைக்க முற்படு வார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க முற்படுவதில்லை.

சில காலங்களாகவே உங்களில் எத்தனை பேருக்கு கையில் நகங்கள் அடிக்கடி உடைகிறது? எங்கே கைய தூக் குங்க பாப்போம்! கண்டிப்பாக பலர் இந்த பிரச்சனைக்கு ஆளாகி இருப்பீர்கள். இன் னும் சிலருக்கு நகங்கள் வலுவிழந்து மெதுவாக பிளவடையும். அதனால் ஸ்வெட்டெர் போன்ற ஆடைகளை அணியும்போது, நக கன்றுகளில் சிக்கு வதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

நகங்கள் இப்படி வழுவிழந்து போச்சே என்று நமக்கு எரிச்சல் மற்றும் வருத்தம் ஏற்படும். அதனால் நகங்களை வலுவடையச் செய்து, ஆரோ க்கியமாக வளரச்செய்ய என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் சில வல் லுனர்களை கலந்து ஆலோசித்துள் ளோம். அதில் கீழ்கண்ட நகங்க ளை பராமரிப்பதற்கான 16 டிப்ஸ்களை வல்லுனர்கள் கொடுத்தார்கள். அதை ப் படித்து நகங்களை எப்படி திடமாக வைப்பதென்றும், சலூனுக்கு நக பரா மரிப்புக்கு செல்லும்முன் என்ன செய் யவேண்டும் என்பதையும், நகங்களா ல் கடினமான ஜிப் போன்றவைகளை திறக்கலாமா என்பதை பற்றியும் தெரி ந்து கொள்ளுங்கள்.

நகம் கடிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள்

நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத் தனமாக எடுப்ப தாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற் படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந் து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். சில பெண் கள் இதை பயத்தினால் செய்வதுண்டு. இது நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும்.

துடைக்கும் போது ரப்பர் கையுறை அணிந்து கொள்ளுங்கள்

வீட்டில் உள்ள பொருட்களை துடைக்கும் போது, பெண்கள் கையில் ரப்பர் கையுறை அணிந்து கொள்வது நல்லது. அதனால் நகத்திற்கு ஆபத் தை விளைவித்து, அதனை உடைக்க செய்யும் ஆபத்தான ரசாயனத்தில் இருந்து அதனை பாது காக்கலாம்.

தண்ணீரில் இருக்கும் போது கவனம் தேவை

நகத்தை தொடர்ந்து தண்ணீரில் வைத்திருந்தா ல், அது தண்ணீரில் ஊறி போய், வலுவிழந்து, சுலபமாக கையோடு பிய்த்துக்கொண்டு வந்து விடும். ஏனெனில் நகங்களில் சிறு துளைகள் இருப்பதால், அது தண்ணீரை உள்வாங்கும். அதனால் குளித்து முடித்த பின்னரோ அல்ல து கைகளைக் கழுவிய பின்னரோ நகங்களை சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

நகங்களை வாரம் ஒரு முறை பராமரித்தால் நீண்ட கால ஆரோக்கியம் கிட்டும்

நகங்கள் மற்றும் அதன்புறத்தோல் போன்ற வற்றிற்கு மெனிக்யூர் முறையை சீரான முறையில் செய்துகொள்வது அவசியம். அதே போல் தினமும் சருமத் தின் மீது மாய்ஸ்சுரைசர் தடவினால், நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

குளிர்காலத்தில் கைகளுக்கு வெது வெதுப்பான கையுறை அணிந்து கொள்ளுங்கள்

குளிர்காலத்தில் நகங்கள் வறட்சி அடைந்து சீர்கேட்டிற்கு உள்ளாகும். அதனால் வெளியில் செல்லும் போது, கைகளுக்கு கையுறை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆபத்தான ரசாயனங்களில் இருந்து ஒதுங்கியே இருங்கள்

நச்சுத்தன்மையுள்ள நெயில் பாலிஷ்க ளில் ஃபார்மால்டிஹைடு, ஃபார் மால்டி ஹைடு ரெசின் மற்றும் டொலுவீன் போ ன்ற ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. அதனால் அந்த நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற அவசிய மில்லை. இவ்வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோ க்கியமிழந்து போய்விடும்.

சன் ஸ்க்ரீன் தடவுங்கள்

எப்போதுமே பாதுகாப்பாக இருக்க முடியுமா என்றால், முடியாது என்று தான் பதில் வரும். அதனால் கைகளை புறஊதாக் கதிர்கள் அல்ல து LED வெளிச்சத்தின் முன்பு கொண்டு செல்லு ம் முன், கைகளுக்கு சன் ஸ்க் ரீன் தடவிக் கொள்ளுங்கள். இது கைகளை மட்டுமல்லாது நகங்களையு ம் பாதுகாக்கும்.

வைட்டமின்கள் உட்கொள்வதை மறந்து விடாதீர்கள்

வைட்டமின்களைப் பொறுத்த வரை, அவை நகங்களுக்கு பையோடின் என்ற பொருளை அளிக்கிறது. அதே போல் நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் போன்ற பொருட்களில் பையோடின் இருந்தால், அதையும் கூட நகங்க ளில் நேரடியாக தடவலாம்.

மசாஜ் கொடுங்கள்

நகம் புறத்தோல்களுக்குகீழ்தான் வளரும். அதனால் புறத்தோலை மசா ஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்தத் தை கொண்டு வந்து நகங்கள் ஆரோக்கிய மாக வளர உதவி புரியும். இதற்கென சிகி ச்சைக்கு செல்வத ற்கு பதிலாக, வெறும னே மசாஜ் செய்தால் போதிய பலனை அது அளிக் கும்.

மாய்ஸ்சுரைசிங் க்ரீம் பயன்படுத்துங்கள்

எப்போதுமே கைகளை கழுவியபின் அத ற்கு நீர்ச்சத்து அளிக்க வேண் டும். முகத்தி ற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாமல் இருப்பீர்களா? இல்லையல்லவா? அதே போல்தான் கைகளையும் பாதுகாத்திட வேண்டும்.

நகத்தை சுத்தம் செய்யும் கருவியை கையோடு வைத்திடுங்கள்

நகத்தை சுத்தம் செய்யும் கருவியை எப்போ துமே கையோடு வைத்தி டுங்கள். அதனை வைத்து சொரசொரவென இருக்கும் நகங்க ளின் விளிம்பை வளுவளுப்பாக்கலாம். அதனால் பாதிப்பு ஏற்படாமலும் காக்கலா ம்.

புரதம் அடங்கியுள்ள உணவை உட்கொள்ளு ங்கள்

சமநிலையான உணவோடு, அளவுக்கு அதி கமான தண்ணீரையும் பருகி வந்தால், ஆரோ க்கியமான நகங்களை வளர்க்கலாம். அதனால் புரதச் சத்து நிறைந்துள் ள மீன் போன்ற உணவுகளை உட்கொண்டால், நகங்கள் ஆரோக்கிய மாக இருக்கும்.

நகங்களை ஒரு கருவியாக பயன் படுத்தக் கூடாது

நகத்தை வைத்து டப்பாவை திற ப்பது, லெட்டரை பிரிப்பது என அதை ஒரு கருவியை போல் பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்யும் போது, நகங்கள் வளை ந்து உடைவதற்கு வாய்ப்பு அதிகம். நகத்தின் வெண்ணிற பகுதியை ஸ்ட்ரெஸ் பகுதி என்று சொல்லலாம். நாளடைவில் அது வலுவிழந்து உடைந்துவிடும். நம்மில் பலருக்கு நம் கையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதி ல்லை. அதனால் நகங்களின் மீது கூடுதல் அக்கறை செலுத்தி, அதனை பாதுகாத்திடவும்.

நெயில் பாலிஷ் போடுவதன் முக்கியத்துவம்

நெயில் பாலிஷ் போடுவதால் நகத்தை அது பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் நகத்தி ன்மேல் ஒரு கோட்டிங் போட மறந்து விடாதீர் கள்.

நகத்தை திடமாக்கும் பொருட்கள்

நகத்தை திடமாக்கும் பொருட்களில் கெராட்டின் புரோட்டீன் அடங்கியு ள்ளது. நம் நகமும் இயற்கையிலேயே அதை தான் கொண்டுள்ளது. நக த்தை திடமாக்கும் இவ்வகை பொருட்கள் நகங் களின் மூலக்கூறுகளை ஒன்றாக்கி நகத் தை திடமாக்கும். ஆனால் இவ்வகை பொருட்கள் பயன்படுத்துவதை திடீரென நிறுத்தினால், நகங்கள் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடும். நகத்தை திட மாக்கும் பொருட்களை தடவிய பின், அது நன்றாக வேலை செய்ய நகத்தின் மீது ஒரு கோட்டிங் நெயில் பாலி ஷையும் தடவிக் கொள்ளலாம்.

பழைய நெயில் பாலிஷை நகத்தில் இருந்து துடைத்து எடுக்கவும்

சிறிதுநாட்களுக்குபின் நெயில் பாலிஷ் அசிங்கமாக உரிந்து வரத் தொடங்கி விடும். அதனால் ஒரு வாரம் சென்ற பின், நெயில் பாலிஷை நகத்தில் இருந்து துடைத்து எடுப்பது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: