Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (சவால் எண்.3)

இப்பகுதியில் நேற்று (29-10-2013) அன்று சவால் எண்.2ன்படி வழங்கப் பட்ட‍ வாக்கியங்ளை 270 பேர் படித்துள்ள‍னர் என்ற போதிலும், கொ டுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை சரியாக சுட்டிக்காட்டியதோடு அல்லாமல் அதற்கான சரியான பொருளையும் திரு. சிவானி, திரு. சுப்பு, ஷண் மதி, திரு. ப்ரியன், திரு. ராஜூ (விஞ்ஞானி, ஐதராபாத்,) திரு. மணிவண்ண‍ன் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத இருவர் உட்பட எட்டு பேர் தெரிவித்து, தங்க ளுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்க ள். அந்த எட்டு பேருக்கும் விதை2 விருட்சம் இணையம் சார்பாகவு ம், அதன் வாசக ர்களாகிய உங்கள் சார்பாக பல கரவொலி மற்றும் குரலொலிகளோடு பாராட்டுக்களை மனதார தெரிவித்துக் கொள் கிறேன்.

கீழ் வரும் வாக்கியங்களை எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக் காட்டி, அவற்றின் பொருளையும் தங்களது கருத்துக்களாக தெரிவி க்க வேண்டுகிறோம்.

1.1) நல்லிரவு வேலையில் காண‌கத்தில் காண‌ம் பாடிய கண்னியிடம் கன்னியம் காட்டிய கட்ட‍ல‌கு ஆடவனை கான்!

1.2) நள்ளிரவு வேளையில் கானகத்தில் கானம் பாடிய கன்னியிடம் கண்ணியம் காட்டிய கட்ட‍ழகு ஆடவனை காண்!

2.1) குறுநகை புரிந்த சீடன், குருவைக் கண்டதும் அமைதியானான்!

2.2) குருன‌கை புரிந்த சீடன், குறுவைக் கன்டதும் அமைதியானாண்!

3.1) சோலையில் வீசிய‌ தென்றல் காற்று, அந்த காற்றோடு கலந்த மலர்களின் நாற்றம், மன்மதனின் மனதை பறித்தது

3.2) சோளையில் வீசிய‌ தென்றல் காற்று, அந்த காற்றோடு கலந்த மளர்களின் நார்ரம், மண்மதனின் மனதை பரித்த‍து.

7 Comments

  • Raju, Scientist, Hyderabad

    1.2) நள்ளிரவு வேளையில் கானகத்தில் கானம் பாடிய கன்னியிடம் கண்ணியம் காட்டிய கட்ட‍ழகு ஆடவனை காண்!
    This sentence is correct.
    2.1) குறுநகை புரிந்த சீடன், குருவைக் கண்டதும் அமைதியானான்!
    This sentence is correct.
    3.1) சோலையில் வீசிய‌ தென்றல் காற்று, அந்த காற்றோடு கலந்த மலர்களின் நாற்றம், மன்மதனின் மனதை பறித்தது
    This sentence is correct.

  • நான் இனிமேல் இதற்க்கு பதில் அளிக்க போவதில்லை.அனைவருக்கும் திரு,என்று சொல்லும் நீங்கள் எனக்கும் செல்வி.சன்மதி என்று குறிப்பிட்டு சொல்லலாமே …

    • செல்வி சன்மதி அவர்களுக்கு

      உங்களது பெயர், ஆண் பாலா, பெண் பாலா என்பதை அறிய முடியவில்லை. அதனால் தான் தங்களது பெயருக்கு முன்னால் எந்த வார்த்தையையும் சேர்க்க‍ முடியவில்லை. தாங்கள் இப்போது சொல்லி விட்ட‍தால், இனி வரும் காலங்களில் கண்டிப்பாக செல்வி ச‌ன்மதி என்று குறிப்பிடுகிறேன் சகோதரியே! உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து நல்லாதரவை தர வேண்டுகிறேன்.

  • Priyan

    1.2. is correct (look for handsome guy, who will be keep his genuine when a young girl doing her orchestra at mid-night). 1.1. is wrong.
    2.1. is correct (smiled disciple resume to silence / quiet when he saw his master. ). 2.2 is wrong
    3.1 is correct (the wind blow in the garden along with the smell of the flowers, stolen the heart of god of love.). 3.2 is wrong

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: