Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நல்ல சம்பளம் கிடைத்தும் பிடிக்காத வேலையில் இருப்பவர்கள் கவனத்திற்கு . . .

கடவுள்களால் அல்லது நம் முன்னோர்களால் பல வகையில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நீண்ட ஆரோக்கியமான ஆயுள், பணம், நல்ல மனைவி / கணவன், வாழ்க்கையில் சந்தோஷம், வாழ்க் கைத் துணை மற்றும் பிறருடன் அமைதியான வாழ்க்கை – இதெல் லாம் நமக்கு கிடைக்கும் வரப் பிர சாதங்கள். ஆனால் எல்லோருக்கு ம் எல்லாமே எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ ன்று கிடைக்காமல் போகலாம்.

ஆனால் பார்க்கும் வேலை நமக்கு பிடிக்காமல் போனால், அதை விட நரகமும் சித்திரவதையும் வேறு எது வும் இல்லை. ஆனால் இன்றைய உலக பொருளாதாரத்தில், பலர் இந்த கஷ்டத்தை தினமும் அனுபவிக்கின்ற னர். தற்போது பார்க்கும் வேலையை விட்டால், குடும்பத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். அதனால் வேண்டா வெறுப்பாக பலரும் பிடிக் காத வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி பார்ப்ப தனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இத னை தவிர்க்க நாம் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என்றாலும், அத னை எப்படி சமாளிக்க வேண்டும் என்ப தை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சரி, உங்களுக்கு பிடிக்காத வேலையில் தாக்குப்பிடிப்பது எப்படி என்று பார்க்கலா மா…

நல்ல சம்பளம் இருந்தும் பிடிக்காத வேலையில் இருக்கீங்களா? முதல் ல இத படிங்க…

எதார்த்தமாக இருங்கள்

நாம் பார்க்கும் வேலை தான் நாம் வாழ்வதற்கான வாழ்வாதாரமாக விளங்குகிறது. நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டி வாழ்கிறோம். அதனால் எதார்த்தத்தை புரிந் துக் கொள்ளுங்கள்.

அனுபவத்திற்கு மரியாதை

நாம் தினமும் செய்யும் வேலை நமக்கு பிடிக் காமல் இருக்கலாம். ஆனால் இந்த வர்த்தக சந்தை அதனை ஒப்புக்கொள்ளாது. இத்தனை வருடம் நாம் பெற்ற அனுபவத்தை தான் அது மதிக்கும்.

நேர்மறையான விஷயத்தை காணுங்கள்

ஒவ்வொரு வேலையிலும் நம் ரசனைக்கு ஏற்ப ஏதாவது சுவாரஸ்யங் கள் கண்டிப்பாக இருக்கும். உதாரண த்திற்கு, நீங்கள் அலுப்பு தட்டும் மார் கெடிங் வேலையில் இருந்தால், பல ஊர்களுக்கு செல்வதால் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கலாம் அல்லவா?

மெய்யுணர்வு பார்வையை வளர்த்து க் கொள்ளுங்கள்

நாம் பார்க்கும் ஒவ்வொரு வேலையு ம், ஒரு விதத்தில் நம் சமுதாயத்துக் கும் தேசத்துக்கும் பெரிய அளவில் சேவை செய்கிறது. உங்கள் உழைப் பு ஒரு விதத்தில் பல பேரின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது என் றால் நீங்கள் ஏன் அதை மனதில் வைத்துக்கொண்டு சந்தோ ஷமாக வே லை பார்க்கக் கூடாது.

வெகுமதியை பற்றி தெளிவாக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் வேலையை பொறுத்து, உங் கள் நிறுவனத்தை பொறுத்து, உங் களுக்கு அளிக்கப்படும் வெகுமதி வேறுபடும். நீங்கள் சுக வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் சிலர் அதிக அளவில் வெகுமதி அளிக்கலாம். சிலர் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவளிப்பதற்கு விடுமு றையை வெகுமதியாக அளிக்கலா ம். ஆகவே நிரந்தர வேலை பாதுகா ப்பையும் மனதில் வைத்துக் கொள் ள வேண்டும்.

நல்லது கெட்டதை ஒப்பிடுங்கள்

பிடிக்காத வேலையில் போதுமான அனுபவம் பெற்றிருந்தால், அதிலு ள்ள நல்லது கெட்டதை, உங்கள் கனவு வேலையோடு ஒப்பிடுங்கள். நடு நிலையான முடிவை அடைந்த பின், நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் இருக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிய வரும்.

ப்ரீலான்சிங்

இன்றைய உலகத்தில் உள்ள தகவல் தொடர்பு வளர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு, உங்க ள் விருப்பத்தை ப்ரீலான்சிங்மூலம் நிறைவே ற்றலாம். உங்களுக்கு பிடிக்காத வேலையில் நீங்கள் வாங்கும் சம்பள த்தை கொண்டு உங்கள் குடும்பத்தை நடத்துங்கள். ப்ரீலான்சிங் மூலம் உங்களுக்கு பிடித்த துறையில் கூடு தல் வேலையில் ஈடுபட்டு கூடுதலாக சம்பாதியு ங்கள். அது உங்கள் மனதுக்கும் நிறைவை தரும்.

சரியான நேரத்திற்காக காத்திருத்தல்

முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கு நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பம், குழந்தைகள் என்று ஒருவருக்கு பல பொறு ப்புகள் இருப்பதால், அதிக வருமானம் வரும் வேலையை, அது மனதிற்கு பிடிக்காத வே லையாக இருந்தாலும் சரி விட முடியாது. ஒருவன் தன் குடும்பத்தை யும், குழந்தையும் கரை சேர்த்த பின்னர், வாழ்க்கையில் பெரிய பொறுப் புகள் ஏதும் இல்லாத நேரத்தில், அதி க பணம் தேவையில்லை என்ற நிலைமை வரும்போது, தன் மனது க்கு நிறைவான வேலையை தேர்ந் தெடுக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

One Comment

  • S.Raju

    Very Good Article. Today most of the people do not get job satisfaction. They can follow the valuable tips like these.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: