Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு சிறுநீர், தாமதமாகவோ? / சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா!?

புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்து ள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர் க்கும் இந்த சுரப்பி, அடி வயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை ஒட்டி சிறிய அளவில் அமைந்துள்ளது. சிறுவயதில் செயலற்று இருக்கும் இந்த சுரப்பி, பருவம் வந்தவுடன் விழித்துக் கொள்கிறது. 

முறுக்கிய மீசை, முறுக்கேறிய கைகள், திர ண்ட தோள்கள், தீர்க்க மான பார்வை என, ஆண்மைக்கு அடையாளம் கொடுப்பது, “டெ ஸ்டோஸ்டீரோன்’ என்ற ஹார்மோன். ஆண் பருவ வயதை அடை யும் போது, இந்த ஹார்மோன் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் தான், சுருங்கிக் கிடக்கும் புராஸ்டேட் சுரப்பியை வளர்ச்சி பெற செய்கிறது. இவ்வாறு வளர்ச்சி பெறும் புராஸ்டேட் சுரப்பியில், சுரக்கும் ஒரு வகை திரவம், விந்தணுக்கு ஊட்ட சத்தாக ள்ளது. உடலுறவு நேரங்களில், ஆண் உயிரணுக்கள் எளிதாக நீந்திச் செல்ல இந்த திரவம் உதவியாக உள்ளது. ஆண் உயிரணுவுக்கு ஊட்டச் சத்தை அளிக்கும் புராஸ்டேட் சுரப்பி, வயதான நிலையில், “மக்கர்’ செய்ய தொடங்குகிறது. இந்த சுரப்பி வீக்கம் அடைவதால் சிறுநீர் கழிப்பது தடை படுகிறது. சிலருக்கு இந்த சுரப்பியில் புற்று கட்டி உருவாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

சிறுநீர் பையிலிருந்து சிறுநீரை வெளி யேற்றும் குழாய், புராஸ்டேட் சுரப்பிக்கு உட்புறமாக வந்து இனப்பெருக்க உறுப் பை அடைகிறது. இதனால், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந் தால், இச்சுரப்பிக்கு உட்புறமாக செல்லு ம் சிறுநீர் குழாய், இறுக்கமடைந்து, சிறு நீர் வெளியேறுவது தடைபடும். புராஸ் டேட் சுரப்பியில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது வீக்கத்தை எளி தில் குணப்படுத்தி விடலாம். ஆனால் அதுவே புற்றுக்கட்டியாக இரு ந்தால் ஆபத்து.

புராஸ்டேட் சுரப்பி வீக்க மடைய காரணம் என்ன?

புராஸ்டேட் சுரப்பி வீக்கமடைய இதுதான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வயதாகு ம்போது, ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் சமச்சீரற்ற நிலையே புரா ஸ்டேட் சுரப்பில் வீக்கம் ஏற்பட கா ரணம் என கருதப்படுகிறது. பொது வாக, 40 வயதுக்கு முன், புரா ஸ்டேட் சுரப்பி வீக்கமடைவதில்லை. 50 வயதுக்கு மேற்பட்டோரில் பாதி பேருக்கு, ஏதாவது ஒரு வகையி ல் புராஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்ப டுகிறது.

புராஸ்டேட் சுரப்பி வீக்கமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால், அச்சுரப்பிக்குள் புகுந்து வரும் சிறுநீர் குழாய் இறுக்கப்பட்டு, சிறுநீர் வெளியே றுவது தடை படுகிறது. சிறுநீர் வெளியே றுவது தடைபட்டால், உடலின் இயக்க மும் பாதிக்கப்படும்.

அறிகுறிகள் என்ன?

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். ஆனால், சிறுநீர் உடனடியாக வெளியேறாமல் தாமதம் ஏற்படும். சிலருக்கு சொட்டு, சொட்டாக சிறுநீர் வெளியே றும். சிறுநீர் கழித்த, பின்பும் சிறுநீர் தானாக வெ ளியேறும். இரவில், அடிக்கடி சிறுநீர் கழிக்க நே ரிடும். இந்த பாதிப்புகள் இருந்தால் புராஸ்டேட் சுரப்பி வீக்கமாக இருக்கும்.

சாதாரண வீக்கத்துக்கு சிகிச்சை என்ன?

சாதாரண வீக்கம் எனில் மருந்து கொடுத்து வீக் கத்தை குறைக்க லாம். சிலருக்கு சிறிய அறு வை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிகிச் சைக்கு பின் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழலாம்.

புராஸ்டேட் புற்று யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

மது பழக்கம், கொழுப்பு மிகுந்த மாமிசங்களை சாப்பிடுபவர்கள், பாரம்பரியத்தில் அப்பா, தாத்தாவு க்கு இருந்தால், பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தும் விவசா யிகள், பெயின்டர்கள், டயர் தொ ழி ற்சாலைகளில் பணிபுரிவோர் ஆகியோருக்கு, புராஸ்டேட் சுரப் பியில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு, புராஸ்டேட் புற்று வர வாய்ப்பு குறைவு. மீன் அதி கமாக சாப்பிடுபவர்களுக்கும், இந் நோய் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஜப் பானியர்கள் அதிகம் மீன் சாப்பிடுவ தால், அவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் வருவது குறைவு.

புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை உறுதி ப்படுத்துவது எப்படி?

முதல் கட்டமாக ஆசன வாய் வழி யாக செய்யப்படும் டிஜிட்டல் ரெக்ட ல் பரிசோதனை மிக முக்கியமானது. இந்த சோதனையில் புராஸ் டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் தெரிந்து விடும். அந்த கட்டி, கல் போன்று கடின மாக இருந்தால் அது புற்றுக்கட்டி என தீர்மானிக்கப்படுகிறது. இ தைத் தொடர்ந்து நோயாளி யின் தேவைக்கு ஏற்ப, அல்ட்ரா சவுண் ட் ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எம். ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மூலம் நோய் உறுதி செய்யப்படு ம். மேலும் புற்று கட்டியா என்ப தை உறுதி செய்ய திசு பரிசோதனையும் செய்ய ப்படும். பொதுவாக புற்றுக்கட்டி புராஸ்டேட் சுரப்பியின் வெளிப்புற பகுதியில் தோன்று ம்.

இதுதவிர, சிறுநீர் வெளியேறும் வேகம், அடர்த்தியைக் கொண்டும் புராஸ்டேட் சுரப்பியில் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் பையிலிருந்து, சிறுநீர் முழுமையா க வெளியேறிவிட வேண்டும். அவ் வாறு வெளியேறாமல் தேங்கியிரு ந்தால், பிரச்னை உள்ளது என முடி வு செய்யப்படுகிறது. சிறுநீர் வெளி யேறும் தன்மையை அறிய “யுரோப் ளோ ஸ்டடி’ சோதனை உள்ளது.

சிகிச்சை என்ன?

புராஸ்டேட் சுரப்பியில் உள்ள கட்டி, புற்று கட்டியாக இருந்தால், அதன் வளர்ச்சியைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப்படுகிறது. ஆரம்ப நிலையில் இருந்தால், புராஸ்டேட் சுரப்பி முழுவதுமாக அறுவை சிகிச் சைமூலம் அகற்றப்படும். இந்த அறு வை சிகிச்சைக்குமுன், நோயாளியி ன் உடல்நிலை, அறுவைச் சிகிச்சை க்கு ஏற்றதாக உள்ளதா என பரிசோ திக்கப்படும். தகுதியாக இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை செய்ய ப்படும். ஆண் ஹார்மோனான, டெஸ்டோஸ்டிரோன், புராஸ்டேட் புற்றுக்கு ஊக்கமளித்து மேலும் வளர செய்வதால், அதைத் தடுக்க, ஹார்மோன் உற்பத்தியாகும் விதைப்பைகள் அப்புறப்படுத்தப் படும். புற்றுநோய் முற்றிய நிலையில், கீமோதெரபி, கதிரிய க்க சிகிச்சை மூலம் நோயை கட் டுப்படு த்தலாம். நோய் பாதித்த இடத்தில், துல்லியமாக கதிரியக் க சிகிச்சையளிக்கும் வகையில், நவீன பிரேகி தெரபி சிகிச்சை உள்ளது. உலகில் மற்ற நாட்டின ரை ஒப்பிடும்போது, ஆசிய நாட் டைச் சேர்ந்தவர்களுக்கு புராஸ்டேட் புற்று வருவது குறைவு. பெரு ம்பாலும், 60வயதுக்குமேல் வரும். அப்படியே வயோதிகத்தில் நோய் ஏற்பட்டாலும், மிக மெதுவாகத்தான் பரவும்.

-டாக்டர்.ஆர். ஜெயராமன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: