Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: கூந்தல் பராமரிப்பில், செய்யக்கூடாததும் செய்ய‍க்கூடியதும்

பெண்ணுக்கே உரிய நளினத்தைத் தருவது நீண்ட கூந்தல்தான். சிலருக் கு நீளமான முடி இருந்தும் போதிய நேரமின்மை கார ணமாக, பார்லருக்கு சென்று வெட்டிக் கொள்கின்றனர். குதிரை வால் அளவில் முடி இருக் கும் பலரும், நீண்ட கூந்தலுக்கு ஆசைப்பட்டு, விளம்பரங்களில் வரும் வளர்ச்சிக்கான ஷாம்பு, கண்டிஷனர்கள் என அனைத்தையும் பயன்படு த்துகின்றனர். முடி வளர வேண்டும் என்ற ஆசையில் செய்யும் இந்த அழகு விஷயங்கள், முடி வளர்ச்சியை அடியோடு நிறுத்தி விடுவது டன், முடி உதிர்வதற்கான வாய்ப்பை அதிக ப்படுத்திவிடும்.

கூந்தல் பராமரிப்பில், செய்யக்கூடாதது

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

முடி வளராமல் போவதற்கு என்ன காரணம்?

பொதுவாக முடியின் வாழ்க்கைச் சுழற்சியை ஆனஜென், கேட்டஜெ ன், டெலோஜென் (anagen, catagen, telogen) என மூன்றாகப் பிரிப்பா ர்கள். ‘ஆனஜென்’ பருவத்தில் முடி தடிமனாக, ஆரோக்கியமாக இருக் கும். ‘கேட்டஜென்’ காலத்தில் முடி வலுவிழந்து, உதிரக்கூடிய நிலையி ல் இருக்கும். ‘டெலோஜென்’ காலத்தில், முடி உதிரும். அந்த நேரத்தில் மீண்டும் முடியின் வேர்க்காலில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாளைக்கு 100 முடிகளுக்கு மேல் விழு கின்றன. அதே அளவுக்கு, புதிதாக முடி முளைத்துவிடும். இப்படி 100 முடி கொட்டு வதைப் பார்த்த தும் முடி முற்றிலும் கொட் டிவிடுமோ என்ற பயத்தில் தலைமுடிக்கு, கண்டகண்ட க்ரீம், ஷாம்புக்களைப் போடுகி ன்றனர். உதிர்ந்த முடி தானாகவே மீண்டும் முளைக்கும்போது, நாம் பயன்படுத்திய ஷாம்பு வால்தான் முடி வளர்ந்திருக்கிறது என்று தவறாக நினைத்து, தொடர் ந்து அந்த ஷாம்புக்களைப் பயன்படுத்துகின்றனர். ஷா ம்புவில் உள்ள ரசாயனம், முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழ க்கச் செய்கிறது என்பதுதான் உண்மை.

அந்தக் காலத்தில் மக்கள், தலைக்கு சீயக்காய் பயன்படுத்தினர். அதனா ல் முடியும் கருகருவென நீளமாக இரு ந்தது. இன்று 99 சதவிகிதம் பேர், ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துவ தால்தான் முடி அதிகமாக உதிர்கிற து.

செயற்கை ரசாயனங்களைப் பயன் படுத்தாமல், கவலைகளுக்கு இடம் கொடுக்காமல், எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே முடி கொட்டாமல், ஆரோக்கியமாக இருக்கும்.” என்றவர், முடி உதிர்வ தை விரைவுபடுத்தும் நாம் செய்யும் தவறுக ளைப் பட்டியலிட்டார்.

குளித்து முடித்தவுடன், ஈரமாக இருக்கும் முடி யில், ‘ஹேர் ட்ரையர்’ பயன்படுத்தும்போது அதி க வெப்பத்தின் காரணமாக முடியில் இருக்கு ம் நெகிழ்வுத்தன்மையைப் பாதிக்கும். இதனால், முடியில் உள்ள புரதம் உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து முடியை வலுவிழக்கச் செய்துவிடும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பல பெண்கள், குளிப்பதற்கு முன்பு, தலை வாருவது இல்லை. ஈரமான முடி மிகவும் பலவீனமாக இருக்கும். இந்த நிலையில், தலையில் அதி கமாகச் சிக்கு ஏற்படும். எனவே, தலைக்குக் குளிப் பதற்கு முன்பு தலை யை வாரிக்கொள்ள வேண்டும்.

ஹேர் டிரையர்  அடிக்கடி  உபயோகித்தா ல் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழு தடைந்து விடும் .அதிகம் கேமிகல் நிறை ந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோ கிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

குளிக்கும்போது கைவிரல்களை, சீப்பு போல் பயன்படுத்தி, சிக்கு எடுக்க வேண் டும்.

தலைமுடியின் முனைப் பகுதியில் அதிக அளவில் உடைதல், பிளவு இருப்பதால் அடிப்பகுதியில் மட்டும் நீண்ட நேரம் முடியை கோதிவிடு வது கூடாது. உச்சந் தலையில் இயற்கை கண்டிஷனர் உள்ளது பலருக்குத் தெரியவில்லை. முடியின் வேர்ப் பகுதியில் வாரும்போது, இந்த இயற்கை கண்டி ஷனர் தூண்டப்பட்டு முடிக்கு ஆரோக்கியம் அளிக்கும். தலை வாரும்போது வேர்ப்பகுதியில் இருந்து வார வேண்டும்.

தலைமுடியை உலர்த்தப் பயன்படுத்தப்படும் டவல் மென்மையானதா க இருக்க வேண்டும். தலைமுடியைக் காய வைக்கும்போது, டவலால் அழுத்தித் துடைப்பது கூடாது. இதனால், முடி கடினமாகிப் பொலிவு இழ ந்து, உடைபட வாய்ப் புண்டு. டவலால் ஒத்தி எடுத்து, கைவிரல்களால் கோதி, காயவிட வேண்டும். இப்படிச் செய்ய நேர ம் ஆகலாம், ஆனால், கேசம் ஆரோக்கியமாக இருக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்.

கூந்தல் பராமரிப்பில், செய்ய‍க்கூடியது

ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக் கவிடவும்.அந்த தண்ணீரால் தலை யை அலசி வந்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம் .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையு ம் .

வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள் ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காய வைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொ டியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊற விட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்தி ற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லை யில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபள க்கும் உங்கள் கூந்தல் .

முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக் கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவ றாமல் தேங்காய் எண்ணெய் தடவ வே ண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ள வர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் . சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டை யும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .

கறிவேபிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: